இடுகைகள்

கல்வி டிவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய மாணவர்களுக்கு உதவும் இ கல்வித்திட்டங்கள்!

படம்
  அரசின் இணையவழி கல்வித் திட்டங்கள் பிஎம் இ வித்யா 2020ஆம் ஆண்டு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வித் திட்டம். இதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். தீக்ஷா அறிவை டிஜிட்டல் வழியில் பகிர்ந்துகொள்வதற்கான வலைத்தளம் என திட்டத்தை மொழிபெயர்க்கலாம். 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வசதி. பாடநூல்களில் உள்ள க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்தால் போதும். உடனே என்சிஇஆர்டி பாடநூல்களை படிக்க முடியும். இதனை 18 மொழிகளில் அணுக முடியும் என்பது முக்கியமான சிறப்பு அம்சம்.  நிஷ்த்தா இது ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம். தேசிய அளவில் நடத்தப்படுகிறது. 11 மொழிகளில் இதனை ஆசிரியர்கள் கற்றுக்கொண்டு மாணவர்களுக்கு சிறப்பாக பாடங்களை நடத்தலாம்.  ஸ்வயம் 9ஆம் வகுப்பு முதல் முதுகலைப் படிப்பு வரையிலான பல்வேறு பாடங்களை ஆன்லைன் வழியாக கற்கலாம். இதனை யாரும் எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகி பாடங்களை கற்க முடியும் என்பது முக்கியமான அம்சம். பாடங்கள் அனைத்தும் இன்டராக்டிவானவை என்பதோடு இலவசம் என்பதையும் மனதில் குறித்துக்கொள்ளுங்கள்.   கடந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் பத்து மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் இதில் இணைந்தன

ஏழை மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய நேரம் இது!

படம்
  தமிழ்நாட்டில் இப்போது மெல்ல பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த ஓராண்டாக ஆதி திராவிடர் பள்ளிகளில் படித்து வந்த தலித், பட்டியலின மாணவர்கள், அரசின் கல்வி தொலைக்காட்சியைக் கூட அணுக முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தை தொழிலாளிகளாக மாறிவிட்டனர். இதற்கு இவர்களின் பெற்றோரின் பொருளாதார நிலைதான் முக்கியமான காரணம்.  ஸ்மார்ட்போன் வாங்க முடியாத நிலையிலும் அரசின் கல்வி தொலைக்காட்சி பார்த்து கல்வி கற்க முடியாத நிலையில் கல்வி கற்றலில் ஓராண்டு தடை விழுந்துள்ளது. ஏன் வந்தது என்று கேள்வி கேட்டால் பதில் வந்திருச்சு என்றுதான் பதில் கிடைக்கும்.  ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாணவர்களின் மீது அக்கறையாக செயல்படுபவர்கள் குறைவானவர்கள்தான். அரசின் கல்வி தொலைக்காட்சி பார்ப்பது போல புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என ஆதி திராவிடர் மாணவர்களை ஆசிரியர்கள் கேட்டுள்ளனர். உண்மையில் கல்வி கற்றலில் விழுந்த இடைவெளியை வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிடும் கல்வி தொலைக்காட்சி புகைப்படம் நிரப்பிவிடும் என்றால் இதைவிட ஆச்சரியம் வேறு என்ன இருக்க முடியும்? சேத்துப்பட்டு, பெருநகர், மானாமதி ஆகிய காஞ்சிபுரத்தி