இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நம்பினால் உறுதியாக கொல்வோம்!

படம்
  இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் சிப்மன். இவர் மருத்துவராக பணியாற்றி 250க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றார். அதையும் நுணுக்கமாக செய்ததால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பிறர் நம்பிக்கை வைக்கும்படி மருத்துவர்கள், செவிலியர்களின் உருவம் இருந்தாலும் அவர்களின் மனம்  இருட்பாதையாக இருந்தால் என்ன செய்வது? கொலைகளின் எண்ணிக்கை என்பது சைக்கோ கொலைகாரர்களின் மனநிலையைப் பொறுத்ததுதான்.  இப்படி கொலைகளை செய்வதில் மருத்துவர் இருப்பது அரிதுதான். மருத்துவர் சிப்மன் மட்டும் இப்படி சாதனையாக நிறையப் பேர்களை கொலைசெய்திருக்கிறார். 1974ஆம் ஆண்டு முதலாக சிப்மன் கொலைகளை செய்யத் தொடங்கிவிட்டார். செவிலியர் என்றால் கூட நோயாளி இறந்துபோனால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் மருத்துவர் சிகிச்சை அளித்தும் கூட நோயாளி மேசையில் இறந்தால், படுக்கையில் இருந்து இறந்தால் அது பெரிய அவமானம். மேலும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு பெரிய சங்கடம். இதனால் சிப்மன் சிகிச்சை அளித்தவர்களில் பெரும்பாலானோர் இறந்துபோனது சர்ச்சையானது. மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளின் இறப்பில் சிப்மனின் பங்கு இருந்தது. இதற்கான கமிட்டி விசாரணையில் 137 நோயாளிகளின் இ

நோயாளிக்கு மிக நெருக்கத்தில் உள்ள கொலையாளிகள்

படம்
  இப்போது இறப்பின் தேவதை என மருத்துவமனையே அழைத்த புகழ்பெற்ற செவிலியரான கிரிஸ்டனைப் பார்ப்போம். கிரிஸ்டனைப் பொறுத்தவரை அனைத்துமே சோதனைகள்தான். எதற்காக உயிர்வாழ்வதற்காக இந்த பரபரப்பு என இதய பிரச்னை இல்லாதவர்களை கூட மருந்து கொடுத்து மாரடைப்பு ஏற்படுத்தி கொன்றார். எபின்பிரைன் மருந்தைக் கொடுத்து நோயாளிக்கு மாரடைப்பு ஏற்படுத்தி விட்டு கோட் ப்ளூ பட்டனை அழுத்திவிட்டு பக்கத்தில் பாவமாக நின்றுகொள்வார். மருத்துவர்களும் வேகமாக வந்து நோயாளியை காப்பாற்ற அவரின் விலா எலும்புகள் உடையும் வரை சிபிஆர் செய்துவிட்டு இறந்த நேரத்தை குறித்துக்கொண்டு அங்கிருந்து செல்வார்கள். குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் முப்பது நோயாளிகளில் 23 நோயாளிகளுக்கு கோட் ப்ளூ என்று தகவல் சொல்லியவர் கிரிஸ்டின் அம்மணிதான். ஒருகட்டத்தில் மருந்தகத்தில் எபின்பிரைன் மருந்துகளை பெயர் சொல்லாமல் வாங்கியது யார் என விசாரணை தொடங்கியது, மேலும் நோயாளிகள் இறந்துகொண்டே இருந்தால் பலருக்கும் பயம் ஏற்படும்தானே அப்படி ஏற்பட்டபோது பார்த்தால் செவிலியர் கிரிஸ்டின் லீவ் போட்டுவிட்டார். மருத்துவமனையின் விசாரணையைத் தடுக்க மருத்துவமனைக்கு குண்டு வைத்திருக்க

விளம்பர இடைவேளை - ஆராபிரஸ் வெளியீடுகள்

படம்
 

குஸ்திபோடும் கிராம பெண் பப் பவுன்சராகி சாதிக்கும் கதை - பப்ளி பவுன்சர் -மதுர் பண்டார்கர்

படம்
  பப்ளி பவுன்சர் இந்தி இயக்கம் மதுர் பண்டார்கர் தயாரிப்பு ஜங்லீ பிக்சர்ஸ்   டெல்லிக்கு அருகில் உள்ள கிராமத்தில்  நடைபெறும் கதை. அங்குள்ள   கிராமத்தில் குஸ்தி அதாவது மல்யுத்தம் செய்யும் இளைஞர்கள் அதிகம். இவர்கள் டெல்லிக்கு சென்று அங்குள்ள கிளப்பில் பாதுகாவலர்களாக – பவுன்சர்களாக வேலை செய்து சம்பாதிக்கிறார்கள். இரவில் கிளப் பாதுகாப்பு வேலை. பகலில் வீட்டில் வேலை செய்வது உடற்பயிற்சி செய்வது என இருக்கிறார்கள். மல்யுத்தம் சொல்லித் தரும் பயிற்சியாளருக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள்தான் பப்ளி. மல்யுத்தம் கற்று அவளும் ஆண்பிள்ளை போல திடமாக வளருகிறாள். படிப்பு வருவதில்லை. பத்தாவது தேர்ச்சி பெறமுடியாமல் நின்று, வீட்டு வேலைகளை செய்து வருகிறாள். இவளுக்கு கணக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியை மகன் விராஜைப் பார்த்ததும் காதல் பூக்கிறது. அவனைப் பார்க்கவேண்டுமெனில் டெல்லி செல்லவேண்டும். அதற்கு அவளுக்கு குக்கு என்ற பள்ளிக்கால நண்பன் உதவுகிறான். டெல்லி சென்று நவ நாகரீக இளைஞன் விராஜை கிராமத்து பெண் சந்தித்தாளா, காதலைச் சொன்னாளா என்பதுதான் மீதிக்கதை.   பெண்களுக்கும் கல்வி, பொருளாதார சுதந்திரம் தேவை. வாய

வலி, வேதனையின் வரலாற்றை விவரிக்கும் நாவல் இஸ்தான்புல் - நிலவறைக் கைதிகளின் குறிப்புகள்

படம்
    இஸ்தான்புல்  புர்கான் சென்மெஸ் துருக்கி நாவல் தமிழில் முகமது குட்டி காலச்சுவடு இந்த நாவல் இஸ்தான்புல் நகரில் வாழும் மனிதர்களை அங்குள்ள அரசு கடத்தி சிறையில் அடைக்கிறது. அடைக்கப்படும் மனிதர்கள் யாவருமே சர்வாதிகார அரசுக்கு எதிரானவர்கள். அவர்களை அடித்து உதைத்து சித்திரவதை செய்து புரட்சி இயக்கத்தை அழிக்க அரசு நினைக்கிறது. அப்படியான முயற்சியில் கைதாகும் பல்வேறு மனிதர்களின் நினைவில்தான் கதையின் பாதை பயணிக்கிறது. கதையில் இஸ்தான்புல் நகரே ஒரு பாத்திரம் போல வருகிறது. அங்கு விற்கும் பல்வேறு உணவுகள், ஏழை மக்களின் வாழ்க்கை, அவர்களுக்கு நம்பிக்கை தரும் பல்வேறு கோஷங்கள் என கதை சுவாரசியமாக உள்ளது. நாவிதன் காமோ, திமிர்த்தோ, டாக்டர், குஹெய்லன் மாமா, மாமாவின் உறவினரான இளம்பெண் என கதை நெடுக வரும் பாத்திரங்கள் குறைவுதான். நிலவறை சிறையில் வாழும் மனிதர்கள் தங்களின் கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்த்து தங்களின் கதையை வாசகர்களுக்கு முன்வைக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது, எதனால் சிறைக்கு பிடித்து வரப்பட்டார்கள், அவர்களை விட்டுச்சென்றவர்களின் வாழ்க்கை என கதை வேதனையான சித்திர

கொலை, சித்திரவதைக்கு எளிதில் இணங்கும் கொலைக்கூட்டாளிகள்

படம்
  கொலை செய்யும் இலக்கில் அனைவரும் ஒத்துப்போவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் இரண்டு பேர் சந்திக்கிறார்கள். அவர்கள் இருவருமே பிறரை கொலை செய்வதில் சித்திரவதை செய்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால் எப்படியிருக்கும்? அப்படித்தான் ராய் நோரிஸ், லாரன்ஸ் ஆகியோர் இணைந்து பெண்களை வேனில் கடத்தி சித்திரவதை செய்து கொன்றனர். இவர்கள் இருவரும் சிறையில் சந்தித்து மாட்லாடி நட்ப்பை வளர்த்தினர். அப்போதுதான் இருவருக்குமே பிறரை துயரப்படுத்தி கொல்வதில் ஒத்த எண்ணம் இருப்பது தெரிய வந்தது. அப்புறம் எதற்கு தாமதம் என களத்தில் இறங்கினர். இருவருக்குமே பெண்களை துயரப்படுத்தி வல்லுறவு செய்து சித்திரவதை செய்வதில் அப்படியொரு சந்தோஷம் இருந்தது. எனவே தெளிவாக சிறையல் திட்டம் தீட்டியவர்கள், தண்டனை முடிந்தவுடன் வெளியே வந்தனர். வந்தவுடன் லாஸ் ஏஞ்சல்சில் வேன் ஒன்றை காசு போட்டு வாங்கினர். அதன் செல்லப் பெயர் மர்டர் மேக். 1979ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சிண்டி என்ற பெண்ணை வேனில் கடத்தினர். வேனில் வைத்தே அந்த பெண்ணை பிசைந்து பதம் பார்த்து சாறு குடித்தனர். பிறகு கோட் மாட்டும் ஹேங்கரை வைத்து கழுத்தை நெரித்து கொன்றனர். ராய் நோரி

கொலைகார கூட்டாளிகள்- கொலைக்கு ஒத்தாசை செய்யும் நபர்கள் 1

படம்
  சார்லஸ் மேன்சன், வெள்ளையர்களுக்கு எதிராக கறுப்பினத்தவர்கள் வளருகிறார்கள் என்ற வெறுப்பு வாதத்தைத் தூண்டிவிட்ட மத தலைவர். இவர் தனது வெறுப்பு பேச்சு மூலம் 37 கொலைகளை   செய்தார். ஆனால் எந்த கொலையையும் மேன்சன் நேரடியாக செய்யவில்லை. அனைத்து விஷயங்களையும் தனது குழுவினர் மூலம் சிறப்பாக செய்வதே அவரது வழக்கம். தனது கருத்துகளை பிறர் மூளையில் செலுத்தி அவர்களை தனது குடும்பம் என நம்ப வைத்து கொலைகளை   செய்ய வைப்பது மேன்சனின் பாணி. இந்த வகையில்தான் அவர் ரஷ்ய இயக்குநர் ரோமன் போலான்ஸ்கியின் கர்ப்பிணி மனைவி உட்பட ஐந்து நபர்களை கொன்றனர். இந்த கொலை வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது மேன்சனை ஜூரிகள் குற்றம்சாட்டினாலும் கூட நேரடியான ஆதாரம் கிடையாது. அவரது சீடர்கள் கொலை குற்றத்தை ஏற்றுக்கொண்டனர். இப்படி கொலைகாரர்களுக்கு உதவும் நண்பர்கள் குற்ற இலக்கியத்தில் எப்போதும் உண்டு. சாத்தானுக்கும் நண்பர்கள் உண்டு என்பார்களே அந்த வகைதான்.   ஆண்களுக்கு பெண்கள் உதவுகிறார்கள் என்றால் அங்கு பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையில் வருவது போல எஜமான் அடிமை உறவு   இருக்கலாம். அவர்கள் கொலை செய்வதை, உடலை புதைப்பது, தடயங்களை மறைப்பதை   செ

கொலைகார ஆண் துணைக்கு பெண்கள் உதவி செய்வதற்கான காரணங்கள்!

படம்
  உணர்வு ரீதியான உறவுகள் என்று சில உண்டு. ஒருவரின் காதலுக்காக, அவர் தன்னை விட்டுப்போக கூடாது என்பதற்காக.. நிறைய குற்றச்செயல்களை அறியாமலேயே செய்வார்கள். ஆஸ்திரேலியாவில் அப்படி நடந்த சம்பவம் ஒன்றைப் பார்ப்போம். இதில், வோரல் என்பவர்தான் குற்றவாளி. இவர், தன்னைக் காதலிக்கும் மில்லர் கொண்டு வரும் இளம்பெண்களை வல்லுறவு செய்து கொல்வார். சவங்களை புதைக்கும் பாக்கியம் வேறு யாருக்கு, மில்லருக்குத்தான். இப்படி ஏழு பெண்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். இதை சரி, தவறு என எப்படியும் மில்லருக்கு கூறத் தெரியவில்லை. அவருக்கு வோரலின் காதல் தேவைப்பட்டது. ஆனால் வோரல் ஒருநாள் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவரை த் தொடர்ந்து வந்த காவல்துறையினர் மில்லரைப் பிடித்தனர். வோரல் மீது கொண்ட காதலுக்காகத்தான் குற்றங்களை செய்தேன். கொலை செய்யவில்லை. உடல்களைப் புதைத்தேன் என்று சொல்லி புதைத்த இடங்களை அடையாளம் காட்டினார். இதுபோன்ற கொலைஜோடிகளில் ஆதிக்கம் செலுத்துபவர், எளிதாக குற்றங்களை தான் செய்துவிட்டு அதற்கான பல்வேறு செயல்களை பிறரை செய்யவைப்பவராக இருப்பார்..இப்படி ஆணைகளைக் கேட்டு நடப்பவர், மனதளவில் சமநிலை இல்லாதவராக எளிதில் கோப

கணவன் வல்லுறவு செய்து பெண்களைக் கொல்ல ஆதரவு தந்த அன்பு மனைவி

படம்
  இங்கிலாந்தில் நடைபெற்ற உண்மைக்கதை இது. அங்கே வாழ்ந்த ஃபிரெட் அவரது மனைவி ரோஸ் ஆகியோர் இணைந்து இருபது ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்ட பெண்களை வல்லுறவு செய்து கொன்று புதைத்து வந்தனர். வீட்டின் கீழ்த்தளத்தில் பிணங்களைப் புதைத்தவர்கள் அதற்கு மேல் கற்களைப் பதித்து மேல்தளத்தில் பிள்ளைகளை படுத்து தூங்க வைத்திருந்தனர். ஃபிரெட் மீது அவரது மகளே வல்லுறவு புகாரைக் கொடுத்தபோதுதான், சமூகநலத்துறைக்கு அவர்கள் மீது சந்தேகம் வந்தது. ஆளைப்பார்த்தால் அழகு வேலையப் பார்த்தால் எழவு என்று சொல்லுவார்கள். அதேபோலத்தான் ரோஸ் குடும்பம் இருந்த்து. ஃபிரெட் மூலம் ரோஸிற்கு எட்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் பெண் குழந்தைகளை வல்லுறவு செய்ய ரோஸ் மேரி அனுமதித்த கோரம் யாரும் நினைத்தே பார்க்காதது. சமூக செயல்பாட்டாளர்கள் ரோஸின் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான் ரோஸ் விபச்சாரம் செய்து சம்பாதித்து வந்தது தெரிந்தது. வீட்டில் பாலியல் விளையாட்டுகளை விளையாடும் பொருட்கள் நிறைய இருந்தன. குழந்தைகளை விசாரித்தபோது ஹெதர் என்ற சிறுமி சில ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய்விட்டாள் என புகார் கூறினர். இதைப்பற்றி கேட்டபோது ஹெதர் போல புதைத்த

மூன்று சகோதரர்களின் காதல் குளறுபடிகளின் கதை! காபி வித் காதல் - சுந்தர் சி

படம்
    பி வித் காதல் இயக்குநர் சுந்தர் சி இசை யு1   மூன்று சகோதரர்களின் காதல் வாழ்க்கை குளறுபடிகள்தான் கதை. இதில் மூத்த பிள்ளைக்கு கல்யாணம் ஆகியிருந்தாலும் அவர் வேறு பெண்களைப் பார்த்து ஜொள்ளு விடத் தயங்காத ஆள். எந்த பெண் கிடைத்தாலும் சரி, பல் விளக்காமலேயே சேட்டு போல ஜிலேபி சாப்பிட நினைப்பவர். சரவணனுக்கு லிவ் இன் உறவில் காதலி இருக்கிறாள். ஆனால் அவள் பாப் பாடகர் ஒருவரைக் காதலித்து அவருடன் சென்று விடுகிறாள்.   இளையவன் கதிர். இவனுக்கு காதல் வாழ்க்கை அல்லது கல்யாண வாழ்க்கை எதாக இருந்தாலும் சரி தனக்கு லாபமாக அமையவேண்டும் என நினைப்பவன். தன்னை விரும்பும் தோழியின் காதலைக் கூட புரிந்துகொள்ளாமல் ஹோட்டல் கட்ட இடம் கிடைக்கும் என தொழிலதிபரின் மகளைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதிக்கிறான். மூத்தவர் ரவிக்கு இசை பேண்ட் வழியாக பெண் ஒருவர் அறிமுகமாகி உடலுறவு கொள்கிறார்கள். இந்த பெண்ணை அவரது தம்பி சரவணனுக்கு கல்யாணம் செய்துகொள்ள முடிவு எடுக்கிறார்கள். இது ரவியை சீண்ட அவர் கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறார். கதிருக்கு பார்த்த பெண் ஊருக்கு வரும்போது அவருக்கு ஊரைச் சுற்றிக்காட்ட, வெளியே கூட்டிச்செல்ல சரவ

நல்லவர், கெட்டவர் யார், எங்கிருக்கிறார்கள் என்பதை புரிய வைக்கும் கிராமத்து சிறுமி -

படம்
    தி ஸ்கூல் ஆஃப் குட் அண்ட் ஈவில்   ஒரு கிராமம். அங்கு சோபியா என்ற சிறுமியும், அகதா என்ற சிறுமியும் நண்பர்களாக வாழ்கிறார்கள். இதில் சோபியாவுக்கு கிராமத்தில் வாழ்வதில் விருப்பமில்லை. தனித்துவம் கொண்டவள் என அவளது அம்மா சொன்னது சோபியாவுக்கு அடிக்கடி மனதில் ஒலிக்க, பகல் கனவு கண்டபடி வாழ்கிறாள். கிராமத்திலுள்ள சுடுகாட்டின் அருகில் வாழ்கிறாள் அகதா. அவளது அம்மா, மந்திரவாதிக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளை மந்திரவாதி ஆக்குவதுதான் அவளது லட்சியம்.   ஆனால் அகதாவுக்கு   அமைதியாக வாழ்ந்தால் போதும் என்று இருக்கிறது. இந்த நேரத்தில் சோபியாவுக்கு புத்தக கடையில் உள்ளவர், மந்திரப் பள்ளி பற்றி சொல்லுகிறார். எனவே, அவள் தான் எப்படியாவது மந்திரப்பள்ளிக்கு சென்று இளவரசியாகி சந்தோஷமாக இருக்கவேண்டும் என நினைக்கிறாள். இதை வேண்டுதல் மரத்தில் எழுதி வைக்கிறாள். ஆனால் அகதாவுக்கு சோபியா தன்னை விட்டு செல்வதில் விருப்பமில்லை. கிராமத்தில் அவள்மீதும், அவளது அம்மா மீதும் பாசம் காட்டுபவள் சோபியா மட்டும்தான். பிறர் அவளை மந்திரவாதி என்று சொல்லி தீயிட்டு எரிக்க நினைக்கிறார்கள். சோபியா எங்கு சென்றாலும் தானும் வருவேன் எ

அப்பாவின் குடிப்பழக்கத்தால் குற்ற உலகில் நுழைந்த சகோதரர்கள்

படம்
  ஒருவர் கொலை செய்கிறார் என்றால் அதற்கு அவர் மனதில் தோன்றும் எண்ணம் மட்டும் காரணமல்ல. அவருக்கு ரோல்மாடலாக யாரேனும் குடும்பத்தில் இருந்திருக்கலாம். கொலை செய்துவிட்டு சிறை சென்றிருக்கலாம். அவரே கொலை செய்வதற்கான ஆர்வத்தை பயிற்சியை புகைப்படங்கள், வீடியோக்கள், வேட்டை வழியாக தூண்டியிருக்கலாம். இந்த வகையில் கென்னத் பியான்சி, ஆஞ்சலோ பியூனோ, ஹில்சைட் ஸ்ட்ரேங்லர்ஸ் ஆகியோர் உறவினர்களாக இருந்தனர் இவர்களால் ஒரு டஜனுக்கும் மேல் பெண்கள் கொல்லப்பட்டனர். 1964ஆம் ஆண்டு லாரி ரேனஸ் என்பவர் அமெரிக்காவில் சுற்றித் திரிந்து பல்வேறு கொலைகளை செய்தார். வீட்டில் அமைதியாக இல்லாத காரணத்தால் எப்போதும் கோபமாகவும் வீட்டுக்கு வெளியேதான் எப்போதும் இருந்தார். ராணுவப் பயிற்சி முடிந்தபிறகு இந்தியானா, ஓஹியோ, கென்டக்கி என சென்று கொண்டிருந்தார். போகும் வழியெல்லாம் கொலைகளைச் செய்தார். வண்டிகளை கைகாட்டி நிறுத்தி ஓட்டுநரைக் கொன்று அவரின் பணம், பொருட்களைக் கைப்பற்றுவதுதான் லாரியின் பாணி. காவல்துறை லாரியை பிடித்தபோது தான் கொன்ற பள்ளி ஆசிரியரின் ஷூக்களையும், வாட்சையும் திருடி கட்டியிருந்தார். லாரி. விசாரணையில் ஐந்து நபர்களைக்

குடும்பத்துடன் கொலை செய்பவர்களின் மனநிலை

படம்
  1870ஆம் ஆண்டில் ஹெல் பெண்டர்ஸ் என்ற புகழ்பெற்ற கொலைகார குடும்பம் இருந்தது. இப்படி நான் கூறுவது 1873க்குப் பிறகுதான். அதற்கு முன்வரை ஆன்மிக அனுபவம் என்று சொல்லி பெண்டர் குடும்பம் வழிப்போக்கர்களை வீட்டுக்கு அழைத்து சோறிடுவார்கள். பிறகு சுத்தியலை வைத்து மண்டையை சிதறடித்து ஆட்களைக் கொன்று அவர்களின் பணத்தை சுருட்டுவதுதான் பெண்டர்களின் பாணி. உடல்களை பூத்தோட்டத்தில் புதைத்து விடுவார்கள்.   மருத்துவர் வில்லியம் என்பவரின் தம்பி, பெண்டரின் வீட்டிற்கு கேட்டியின் ஆன்மிக அனுபவத்தை பெற வந்தார். வந்தவர் அப்படியே சுத்தி மூலம் அடிக்கப்பட்டு முக்தி அடைந்துவிட்டார். இதை தெரியாத மூடரான வில்லியம் தம்பியைக் காணவில்லை என புகார் கொடுத்துவிட்டார். அந்த நேரம் மழை சீசன் வேறு. மழைபெய்து பூத்தோட்டம் முழுக்க இளகிப்போக புதைத்த பிணங்கள் வெளியே வந்துவிட்டன. காவல்துறை பெண்டரின் குடும்பத்தை பிடிக்கும்   முன்னேர அனைவரும் தப்பி விட்டார்கள். பத்தாயிரம் டாலர்களுக்கு மேல் ஆட்களைக் கொன்று சுருட்டியது பெண்டர் குடும்பம் என காவல்துறை அறிக்கை வெளியிட்டது.   கொலைக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் கிடையாது. கொலை தொடர்

இளமையில் தொடர் கொலைகாரர்களைத் தடுக்கும் வழிமுறை - டொனால்ட் செய்த உளவியல் ஆய்வு

படம்
  ஜாசன் தான் கொன்ற பிணங்களை வைத்து காட்டில் மரங்களுக்கு இடையில் தனி கல்லறையை உருவாக்கி வைத்திருந்தார். நிலவொளியில் விலங்குகளைக் கொல்வதன் மூலம் அவர் விரும்பிய பெண்களைக் கொல்ல முடியும் அதற்கான சக்தி கிடைக்கும் என கற்பனை செய்தார். பெண்ணைக் கொன்று உடலை சிதைத்து கழுத்தில் ஆண்குறியை நுழைத்து பாலுறவு செய்யவேண்டுமென கனவு கண்டு அதைக்கூட தனது நோட்டில் எழுதி வைத்திருந்தார். வன்முறை, குற்றங்கள், கொலைகள் மூலம் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள திட்டம் போட்டு இறங்கி சாதித்த மனிதர்தான் ஜாசன். அவரின் ரோல் மாடல்கள் டெட்   பண்டி, லூகாஸ், மேன்சன் ஆகியோர்தான். இவர்களின் வரிசையில் இடம்பெறுவதுதான் ஜாசனின் கனவு, ஆசை, பேராசை, லட்சியம் என எல்லாமே…. அசுரகுலம் தொடர்வரிசை நூல்களில் முந்தைய நூல்களிலேயே சிலர் பிறக்கும்போது கெட்ட இயல்பில் பிறக்கிறார்கள். பிறருக்கு சூழ்நிலை அப்படி அமைந்துவிடுகிறது என கூறியிருந்தோம். ஆனால் சிலருக்கு சிறுவயதில் தோன்றும் அறிகுறிகளைக் கவனித்தாலே அவர்களை சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தி சிகிச்சைகள் கொடுக்க முயற்சிக்கலாம். ஆனால் பலரும் அதைப் புறக்கணித்துவிடுகிறார்கள். இதனால் ஏற்படும்