இயற்கை பேரிடர்களைத் தவிர்க்க கொலை செய் என காதில் சொன்ன குரல் - முலின்

 










அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான கோப்ரா பார்த்திருக்கிறீர்களா|? படம் நீளம் அதிகம். சுவாரசியம் குறைவு என வணிக ரீதியில் தோற்றுப்போய்விட்டது. நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும். படத்தில் நாயகர்களில் ஒருவர் அதாவது கணக்கு ஆசிரியருக்கு ஸிஸோபெரெனியா இருக்கும். கற்பனை காட்சிகள் தோன்றும், மனதில் நிறைய பாத்திரங்களோடு பேசிக்கொண்டிருப்பார். அதேதான். அதேபோல காதில் கேட்கும் குரல் கொலை செய்யச் சொல்லியது என பதிமூன்று பேர்களை போட்டுத்தள்ளிய நபர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் முலின்.

கலிஃபோர்னியாவின் சாண்டா குரூஸ் பகுதியில் நிறைய கொலைகளை இவர் செய்துவந்தார். கத்தி, பிஸ்டல், ரிவால்வர், பேஸ்பால் மட்டை ஆகியவற்றை எப்போதும் தன்னோடு வைத்திருந்தார். அப்புறமென்ன, தேவையான மனிதர்கள் வெளியே உலவும்போது குத்தியோ, சுட்டோ, சிதறடித்தோ கொல்வார். ஏன் இந்த கொலைவெறி?  இப்படி செய்யச் சொல்லி இயற்கைதான் சொன்னது. அப்போதுதான் இயற்கை பேரிடர்கள் என்னனுடைய நகரைத் தாக்காது என வெளிப்படையாகவே சொன்னார் முலின்.

கொலைகளை 72 தொடங்கி 73 வரையிலான காலகட்டத்தில் செய்தார். இதற்கான தொடக்கம் 1969ஆம் ஆண்டு உருவானது. அப்போது தலையை மொட்டையடித்தார். தலை எரிச்சலோடு காதில் ஏதேதோ குரல்கள் கேட்கத் தொடங்கின. பீதியானவர் மருத்துவமனை சென்றார்., ஆனால் அங்கு கொடுத்த மனச்சோர்வைக் குறைக்கும் மருந்துகளை முலின் பயன்படுத்தவில்லை. இதனால் நிலைமை இன்னும் மோசமானது. ஒரு மனிதரைப் பார்த்தால் அவனைக் கொல் என்று குரல் காதில் கேட்குமாம். கொலை செய்ய தேர்ந்தெடுக்க ஆட்களுக்கு இரு வாய்ப்புகள் உண்டு. ஒன்று அவர்களே தங்களை கொன்று கொள்வது அல்லது முலின் அவர்களைக் கொல்ல அனுமதிப்பது. இறப்பின் பாடலை இப்படித்தான் முலின் அனைத்து கொலை செய்யப்பட்ட ஆட்களையும் பாட வைத்தார். இப்படி ஆட்களை கொல்வதால் இயற்கை பேரிடர்கள் தனது மாகாணத்தை தாக்காது. அதற்காக சிறிதளவு மக்கள் இறக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார் முலின். இதனால் காவல்துறையினர் முலினை தடுத்து நிறுத்தும் வரை கொலை செய்து வந்தார்.

தான் செய்யும் குற்றங்களை ஒருவர் உணர்ந்து  வருந்தி திருந்துவதே தண்டணையின் நோக்கம். இந்தியாவில் இந்த முறையில் சட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் மேற்கு நாடுகளில் தனிநபருக்கு உள்ள சுதந்திரம் அதிகம். எனவே அதை பயன்படுத்துபவர்களை எதிர்கொள்ள காவல்துறையினர் பயன்படுத்தும் சட்டங்களும் தண்டனையும் சற்று கடுமையாகவே இருக்கும். மனநிலை பிறழ்ந்தவருக்கு பொதுவாக சூழலே புரிபடாது. தான் செய்த குற்றங்களும் நோயின் தன்மையில் செய்தார் என்று வழக்குரைஞர் வாதிடுவதால் அவர் பெரும்பாலும் மருத்துவமனையில் அடைக்கப்படுவதற்கான  வாய்ப்பே அதிகம். குற்றங்களை அறிந்து அதை தொடர்ச்சியாக செய்வது, குற்றங்களின் பின்விளைவுகளை அறியாமல் நடந்துகொள்வது ஆகியவற்றின் அடிப்படையில் மனநிலை பிறழ்ந்தவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரலாம். ஆனால் இதற்கான சரியான மருத்துவக்குழுவினர் சான்றிதழ் தேவை.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்