பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையில் பயன்படுத்தும் சொற்கள், பொருள்

 









டாப்/டாமினன்ட்/டாம்/டாமே (Top, Dominant, Dom, Domme)

சூழலைக் கட்டுப்படுத்துபவர், இவர் கட்டளைகளை சப்மிசிவ் நிலையில் உள்ளவர்களுக்கு கூறுவார். இந்த நிலையில் உள்ள பெண்களுக்கு டாமே என்று பெயர். இவர்கள் முழுநேரமாக டாமினன்ட் நிலையில் இருப்பவர்கள் அல்ல.

மாஸ்டர் /மிஸ்ட்ரஸ் (Master / Mistress )

டாமினன்ட்/ சம்மிசிவ் உறவில் ஒருவர் முழுமையாக முழுநேரமும் இருந்தால் அவர்களில் கட்டளைகளை வழங்குபவரை மாஸ்டர் என்றும் அதற்கு அடிபணிபவரை மிஸ்ட்ரஸ் என்றும் அழைப்பார்கள். ஒன்றாக வாழும் தம்பதியர் பிடிஎஸ்எம் முறையை எப்போதும் கடைபிடிப்பவர்களை இப்படி கூறலாம்.

பாட்டம் / சப்மிசிவ் (Bottom, submissive)

பிறரால் கட்டுப்படுத்தும் மனிதரைக் குறிக்கும் வார்த்தை. பிறருக்கு கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் உணர்ச்சி அல்லது உடல் ரீதியாக மகிழ்ச்சியை பெறுபவர்.

ஸ்லேவ் (Slave)

சப்மிசிவ் என்ற கூறிய நிலையின் ஆழமான பகுதி. ஸ்லேவ் என்பவர் மாஸ்டர் அல்லது டாமினன்ட் நபரால் முழுமையாக ஆதிக்கம் செலுத்தப்படுபவர். தங்கள் உரிமைகளை, தேவையை முழுக்க கைவிட்டுவிட்டவர் என்று பொருள் கொள்ளலாம். எஜமானர் மகிழ்ச்சி அடைந்தால் அடிமை மகிழ்ச்சி அடைவார். அடிமையின் உடல், உணர்வு, சொத்து என அனைத்துமே மாஸ்டர், டாமினன்ட் என இயங்குபவர்களுக்கே சொந்தம்.

ஸ்விட்ச் (Switch)

டாமினன்ட்/சப்மிசிவ் என இரண்டு பாத்திரங்களையும் மாற்றிக்கொண்டு இணையர்களையும் மாற்றிக்கொள்ளும் நபர்களைக் குறிக்கும் வார்த்தை.

கான்சன்ட் (Consent)

பிடிஎஸ்எம் உறவில் உள்ளவர்கள் இணைந்து செய்துகொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டன்ஜியன் (Dungeon)

பிடிஎஸ்எம் கருவிகள் உள்ள அறை. விளையாட்டு அறை.

டிஎம் (DM)

டன்ஜியன் கண்காணிப்பாளர் / மாஸ்டர்

பிடிஎஸ்எம் பார்ட்டிகளில் பங்கேற்கும் நபர்களுக்கு இடையில் பேசி அவர்களின் செயல்களை ஒருங்கிணைத்து மேலாண்மை செய்பவர்.

டி/எஸ் (D/s)

டாமினேசன் / சப்மிஷன்

ஃபெடிஷ் (Fettish)

குறிப்பிட்ட அனுபவம் அல்லது பொருள் மீது வேட்கை கொள்வது

மன்ச் (Munch)

வெளியிடத்தில் பிடிஎஸ்எம் ஆட்கள் ஒன்றாக சந்திப்பதும

நியூபீ (Newbie)

பிடிஎஸ்எம் வாழ்க்கை முறைக்கு புதிதாக வரும் நபர்

நெகோஷியேஷன் (Negotiation)

டாப்/பாட்டம் என இருவருக்கும் இடையே விதிகள், தண்டனை, நடந்துகொள்ளும் முறை பற்றி எழுத்து அல்லது பேச்சு மூலம் ஒப்பந்தம் செய்துகொள்வது.

பிளே பார்ட்டி (Play party)

பிடிஎஸ்எம் முறையில் பல்வேறு மனிதர்கள் பங்கேற்று தங்களுக்குள் ஒன்றாக வாழ்வதற்கான முடிவு எடுக்கும் நிகழ்ச்சி

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்