இயங்க முடியாத என்னை உன் கண்களால் பார்க்காதே- சிகாட்டில்லோவின் கொலை அட்டூழியங்கள்!
அசுரகுலம்
ரத்த சாட்சி
1.0
ஓநாயின் வாரிசு
ஒருவர் தன்னை
ஓநாயாக உணர்ந்து அப்படியே நடந்துகொண்டால் எப்படியிருக்கும்? பதற்றமாக இருக்குமா இல்லையா?
அப்படியான மனநிலை பிரச்னைகள் உலகில் நடந்துள்ளன. அப்படி ஒன்றுதான் இப்போது நீங்கள்
படிக்கப் போவதும் கூட.
பிரான்ஸ்
நாட்டில் ஜீன் கிரேனியர் என்ற பதிமூன்று வயது சிறுவன்தான் கதையின் கதை நாயகன். பாதிரியாரின்
மகன் என்று தன்னைக் கூறியவன், தனது ஆன்மாவை சாத்தானுக்கு விற்றுவிட்டதாக அர்ப்பணித்துவிட்டதாக
சொல்லி சிறுமிகளை பிடித்து ரத்தம் உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கினான்.
ஓநாயின் தோலாடையை
அணிந்தால் ஒருமணி நேரத்தில் ஓநாயாக மாறிவிடுவேன் என்று கதை கட்டியவன், ஊர் முழுக்க
வதந்தியைப் பரப்பி வந்தான். அவன் சொன்னதையும் நம்பி ஒன்பது பேர் அவனிடம் செட்டு சேர்ந்து
நண்பர்களாக மாறினார்கள்.
பிறகு குற்றச்செயல்கள்
அதிகரிக்க அங்குள்ள உள்ளூர் நிர்வாகம் இதுபற்றி ஆராய்ச்சி செய்து ஜீனைக் கண்டுபிடித்து
விசாரித்தது. அவன், அலட்டிக்கொள்ளாமல் எம் என்ற பெயருடைய கருப்பு நிற மனிதன் தனக்கு
ஓநாய் உடையைக் கொடுத்து விரைவில் ஓநாயாக மாறிவிடுவாய் என்று கூறியதாக கூறினான். பிறகுதான்,
தான் குழந்தை, சிறுமி ஆகியோரைத் தாக்கி ரத்தத்தை உறிஞ்சி குடிக்கத் தொடங்கியதாக கூறினான்.
விசாரித்தவர்கள் நம்பும்படி தான் ஒரு ஓநாய் என்று பேசினான். உண்மையில் அவன் தன்னை பாதிரியாரின்
மகன் என்று சொன்னது பொய் என நீதிமன்றம் கண்டுபிடித்தது. ஆடு மேய்க்க வந்த இடையர் பையன்தான்
ஜீன். ஆனால் இடையில் வேலை செய்யும்போது என்ன ஆனதோ, வேலையை செய்யாமல் சிறுமிகளை குழந்தைகளை வேட்டையாடத் தொடங்கினான். சிறுவயது
என்பதால் அவனை அப்படியே துறவிகள் மடத்திற்கு அனுப்பினார்கள். ஆனால் அங்கு தங்கியிருந்த
ஆண்டுகளிலும் வேட்டையாடுவதை அவன் கைவிடவில்லை. இருபது வயது ஆனபோது அங்கேயே இறந்துபோனான்
ஜீன்.
ஆராய்ச்சியாளர்
எட்வர்ட் லியா இதுபோல குற்றங்களை நெக்ரோசாடிசம்
என்று குறிப்பிடுகிறார். பாலியல் ரீதியான கோணமும் கொலைக் குற்றங்களில் உண்டு. 1890ஆம்
ஆண்டு பார்சி பெண் ஒருவர் இறந்துகிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த பெண்ணின்
பிணத்திற்கு அருகில் அவளது மகன் தூங்கிக் கொண்டிருந்தான். காவல்துறைக்கு ஒன்றுமே புரியவில்லை.
யார் கொலை செய்தது தடயங்களை வைத்து ஆய்வு செய்து உண்மையைக் கண்டுபிடித்தபோது அதிர்ச்சியானார்கள்.
அந்த பையன்தான், அம்மாவை வல்லுறவு செய்து கொன்று போட்டிருக்கிறான். அதோடு உடல் உறுப்புகளைகளையும்
கத்தியால் குத்தியிருந்தான். வயிற்றைக் கிழித்து குடலை எடுத்து அவளின் தோள் மீது போட்டிருந்தான்.
பிறகும் அம்மாவின் உடலை விடாமல் அதன் அருகிலேயே படுத்து தூங்கியிருக்கிறான்.
ரிச்சர்ட்
நால் என்பவர் இதுபற்றி ஆய்வு செய்திருக்கிறார். தன்னை காட்டேரியாக, ஓநாயாக, சாத்தானாக
கற்பனை செய்து கொண்டு குற்றங்களை செய்பவர்களைப் பற்றி ஆவணங்களைப் பதிவு செய்திருக்கிறார்.
இந்தவகையில் பதினெட்டு வழக்குகளை ஆவணப்படுத்தியிருக்கிறார். இதில் ஆறு வழக்குகளில்
கொலையாளிகள் தங்களை ஓநாய்களாக கற்பனை செய்துகொண்டிருந்தவர்கள். ஆறில் பாதிப்பேர் ஓநாய்களாகவும்
மீதிப்பேர் வேறு விலங்குகளாகவும் தங்களை நினைத்துக்கொண்டனர். இவர்களுக்கு சாதாரணமாக
பைபோலார் டிசார்டர் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் டெலுசனல் டிசார்டர், ஸிசோபெரெனியா
குறைபாடுகள் நோயாளிகளுக்கு இருந்தது. டெலுசனல் காட்சிகள்தான் அவர்களை மெல்ல விலங்குகளாக
மாற்றுகிறது என தனது ஆய்வுக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் ரிச்சர்ட்.
1982ஆம் ஆண்டு
ரஷ்யாவில் மூன்று கொலைச்சம்பவங்கள் நடந்தன. இதில் கிடைத்த இளம்பெண் ஒருவரின் உடலை பிணக்கூராய்வுக்கு
உட்படுத்தினர். இதில் அந்த பெண்ணின் கண்களின் கத்தியால் கிழிக்கப்பட்ட காயம் இருந்தது.
மார்பெலும்புகள் உடைக்கப்பட்டிருந்தன. எலும்புகளிலும் கத்திகளின் உராய்வு தெரிந்தது.
இடும்பெலும்பும் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போதைய
அரசு இப்படி சீரியல் கொலைகள் நடக்கவில்லை என்று கூற முயன்றது. ஆனால் கொலையாளி அந்தளவு
பொறுமையாகவெல்லாம் இருக்கவில்லை. பெண்களை தாக்கிக் கொன்று கண்கள், இதயம், நுரையீரல்
பாலுறுப்புகள் ஆகியவற்றை தாக்கி சிதைத்து அல்லது வெட்டி எடுத்து சென்றுகொண்டிருந்தான்.
விசாரணைக்கு விக்டர் புராகோவ் என்ற அதிகாரி வந்தபிறகு தொடர் கொலைகாரன் செய்த கொலைகள்
வெளியே வரத் தொடங்கின.
ஆண் என்றாலும்
ஆண் குறி, மலப்புழை, ஆகியவற்றை சிதைத்து கொல்வதுதான் மேனியாக் கொலைகாரனின் பழக்கமாக
இருந்தது. மருத்துவர் அலெக்ஸாண்டர் புக்கானோவ்ஸ்கி, கொலையாளின் கொலை செய்யும் முறை
பற்றிய அறிக்கையை விக்டருக்கு கொடுத்தார். இருபத்தைந்து வயதுள்ள கொலையாளி, பாலியல்
ரீதியாக பிரச்னை உள்ளது. இதனால்தான் அவனைப் பார்க்கும் நபர்களின் கண்களைக் குத்தி வெளியே எடுத்துள்ளான். தனியாக வாழ்ந்து வருபவன்
ஆனால் ஸிசோபெரெனியா நோயாளி அல்ல என மருத்துவர் சொன்னார்.
கொலையாளியின்
ரத்த வகை ஏபி என காவல்துறை கண்டுபிடித்தும் கூட குற்றவாளியை எளிதாக பிடிக்க முடியவில்லை.
இந்த கண்டுபிடிப்பு மூலம் உண்மையில் கொலை செய்த கொலையாளி ஒருமுறை தப்பிவிட்டார். இதை
காவல்துறை பின்னாளில் தான் அறிந்தது. எட்டு ஆண்டுகள் நடைபெற்ற கொலை வழக்கு இது. விக்டர், ரயில் நிலையங்களைக் கண்காணிக்க
கூறியிருந்தார். அதில்தான் தான் கொலை செய்பவர்களைக் கூட்டிச் செல்வதாக விக்டர் யூகம்
செய்திருந்தார். அப்படி கண்காணிப்பின்போதுதான் டான்லெஸ்கோஷ் ரயில் நிலையத்தில் சிகாடிலோ
தென்பட்டார். இவரும் கொலைக் குற்றவாளிகளின் சந்தேகப்பட்டியலில் இருந்தவர்தான். கொலை
நடந்த நேரமும், சிகாட்டிலோ ரயிலில் வந்த நேரமும் ஒன்றாக இருந்தது. அதற்கு மேல் ஆதாரம்
கிடைக்கவில்லை. ஆனால் இம்முறை சிகாட்டிலோ காட்டுப் பகுதியிலிருந்து ரயில் நிலையத்திற்கு
வருவதை காவலர்கள் பார்த்திருந்தனர். எனவே, அவரைப் பிடித்து பேக்கை சோதித்து விசாரணைக்கு
கூட்டி வந்தனர். குற்றவாளியை செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதுதான் நீதிமுறை விதிகள்.
அதன்படி கேள்விகள் கேட்டபோது சிகாட்டிலோ தான் எந்த குற்றங்களையும் செய்யவில்லை என சாதித்தார்.
ஆனால் மருத்துவர் வந்து கொலையாளி பற்றிய குறிப்புகளை படித்தபோது, பொறுக்கமுடியாமல்
தான் கொலை செய்தது பற்றி ஒப்புக்கொண்டார்.
1978ஆம் ஆண்டில்
இருந்து கொலைக்கணக்குகளைத் தொடங்கியுள்ளார். ஒன்பது வயது சிறுமியை முதலில் கொலை செய்ய
நினைத்துள்ளார். அந்த சிறுமியை வல்லுறவு செய்து கொலை செய்ய கடத்தியுள்ளார். ஆனால் பரிதாபம்,
சரியான நேரத்தில் மோட்டார் சுற்றவில்லை. தான் இப்படிப்பட்ட நிலையில் இருப்பதை சிறுமி
கண்களால் பார்த்துவிட்டதை சிகாட்டிலோவால் தாங்க முடியவில்லை. எனவே சிறுமியின் கண்களை
கத்தியால் தோண்டிவிட்டார். கொலை செய்யும்போது கூட சிறுமியின் கண்களைத் துணியால் கட்டிப்போட்டுதான்
கொலை செய்திருக்கிறார்.
இந்த சிறுமியின்
கொலைக்குப் பிறகு வல்லுறவு என்பதை விட கொலை செய்து உடலை பிளந்து ரத்தம் பார்ப்பது சிகாடிலோவுக்கு
அதிசயமாக இருந்தது. எனவே 1981ஆம் ஆண்டு விலைமாது ஒருத்தியைப் பிடித்து வந்தார். உறவு
கொள்கையில் அவளது மார்பக காம்பை கடித்து பரவசப்படுத்தியவர் டக்கென அதை கடித்து விழுங்கிவிட்டார்.
பிறகு அப்படியே மார்பகத்தை வெட்டி உடல் உறுப்புகளை பார்த்து… என்ன நடந்திருக்கும் என்பதை
நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்.
ரயில் நிலையத்தில் கொலை செய்வதற்கான குழந்தைகள் நிறையப்
பேர் கிடைத்தனர். கொலை செய்வதும், உடல் உறுப்புகளை வெட்டி எடுப்பதும் மகிழ்ச்சியை,
உயிர்ப்பை, நிம்மதியைக் கொடுத்தது. மொத்தம் 53 கொலைகளைச் செய்த சிகாட்டிலோ, 52 கொலைகளைச்
செய்ததாக ஒப்புக்கொண்டார்.
சிகாட்டிலோவுக்கு
பாலுறவு சார்ந்த பிரச்னை இருந்தது. கொச்சையாக சொன்னால் ஓட்டைக் குழாய். உச்சநேரம் வருவதற்குள்
அவருக்கு எல்லாமே முடிந்துவிடும். பெரும்பாலும் அவரால் நினைத்த உடனே ஆண் குறி விரைப்புக்கு
வராது. அப்படி வந்தாலும் விந்து வேகமாக வெளியேறிவிடும். இதனால் நிறைய இடங்களில் அவமானப்பட்டவர் பள்ளி ஆசிரியராகி
நிறைய சிறுமிகளை வேட்டையாடத் தொடங்கினார். தொடுவது, தடவுவது , மாவு பிசைவது என செயல்களைச்
செய்யத் தொடங்கினார்.
நண்பனின்
அக்காவிடம் உறவு கொண்டவர், தனது குறி விரைப்பாகவில்லை என்று புரிந்துகொண்டார். பிறகு
பல்வேறு சம்பவங்களிலும் கிரேன் எடையைத் தூக்கவில்லை. மோட்டார் வேலை செய்யவில்லை என்றால்
காயிலை மாற்றலாம். இந்த சமாச்சாரத்திற்கு என்ன
செய்வது? சிகாடில்லோவுக்கு அக்கா மணம் கூட செய்து வைத்தார். ஆனால் மனைவியிடம் உடலுறவு
கொள்ளும்போதும் அதே விரைப்பாவது சிக்கலானது. அவர் குழந்தை பெற இருந்த ஒரே வாய்ப்பு,
சிதறிய விந்தை எடுத்து தனது பெண்குறியில் விட்டுக்கொள்வதுதான். அப்படித்தான் குழந்தைகளும்
பிறந்தனர்.
இப்படி ஆனதற்கு
காரணம், பிறக்கும்போதே மூளையில் இருந்த குறைபாடு என செர்ப்ஸ்கை இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள்
கண்டுபிடித்தனர். விந்து வெளியேறுவதை கட்டுப்படுத்தும் மூளைப்பகுதி செயலற்று போயிருந்தது.
இதோடு அவரது அம்மா சாகும்சமயம் சும்மா இருக்காமல் உனக்கு முன்னால் பிறந்த அண்ணன் ஒருவன்
இருந்தான். அவனுக்கு பத்து வயது இருக்கும். அப்போது கிராமத்தில் பஞ்சம் நிலவியது. பசியில்
அவனைக் கொன்று ஊர் மக்கள் தின்றுவிட்டனர் என்று சொல்லிவிட்டு இறந்தாள். பள்ளியில் கேலி,
கிண்டல், பெண்களால் ஏற்பட்ட அவமானம், அண்ணனை ஊர் மக்களே கொன்று தின்றது, நாஜி காலத்து
கொடுமைகள் என அனைத்தையும் ஒளிப்பதிவாளர் பிரியன் கேமரா போல வேகமாக திரும்பத் திரும்ப
பார்த்தவர் ஒரு முடிவுக்கு வந்தார். அதுதான் கொலை செய்வது…
இயற்கையாகவே
எனக்கு உடலில் பிரச்னை. அதனால் ரஷ்ய இலக்கியத்தில் பட்டம் பெற்ற பட்டதாரி. முன்னாள்
ஆசிரியரான என்னை விடுதலை செய்யவேண்டும் என நீதிமன்றத்தில் சிகாட்டிலோ முறையிட்டார்.
பயனில்லை. 1994ஆம் ஆண்டு அவருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. பிப்ரவரி 15ஆம் தேதி
நீதிமன்ற உத்தரவுப்படி கொல்லப்பட்டார்.
images -pinterest pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக