ஒருவர் எதற்காக முதலீடு செய்யவேண்டும்?

 












முதலீட்டின் தேவை

1

ஒருவர் எதற்காக முதலீடு செய்யவேண்டும்?

நாம் இந்த கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்பாக, ஒருவர் முதலீடு செய்யவில்லை என்றால் அவரின் நிலை என்னவாகும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

தோராயமாக நீங்கள் மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் சம்பளம் பெறுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதில் ரூ.30 ஆயிரத்தை வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து, பொருட்கள் வாங்குவது, மருத்துவ சிகிச்சை  மேலும் பல செலவுகள் என்ற வழியில் செலவழிக்கிறீர்கள்.

சம்பளத் தொகையில் மீதமிருப்பது ரூ. 20 ஆயிரம் ஆகும். இதுதான் உங்களின் மாதச் சம்பளத்தில் மீதமாகும் உபரித்தொகை.  எளிமையாக விளக்குவதற்காக, தற்போதைக்கு உங்களின் வருமான வரியை விட்டுவிடுவோம்.

1.       இப்போது நாம் சில அம்சங்களை யூகித்துப் பார்ப்போம்.

2.       உங்கள் நிறுவனத் தலைவர் கருணையோடு ஆண்டுக்கு பத்து சதவீத அளவுக்கு சம்பளத்தை உயர்த்துகிறார்.

3.       விலைவாசி ஆண்டுக்கு எட்டு சதவீதம் அளவுக்கு உயர்ந்து வருகிறது.

4.       உங்களுடைய தற்போதைய வயது 30. ஐம்பது வயதில் வேலையில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளீர்கள். உங்களிடம் ஓய்வுக்குத் தேவையான பணத்தைச் சம்பாதிக்க இருபது ஆண்டுகள் உள்ளன.  

5.       நீங்கள் ஓய்வுக்குப் பிறகு வேலை செய்யவேண்டாம் என திட்டமிட்டுள்ளீர்கள்.

6.       உங்களது செலவுகள் ஏற்கெனவே திட்டமிடப்பட்டவையாக உள்ளன. வேறு செலவுகள் இல்லை என நம்புகிறீர்கள்.

7.       மாதம்தோறும் உங்களுக்கு உபரியாக கிடைக்கும் ரூ.20 ஆயிரம், கையில் பணமாக உள்ளது.  

 

இந்த யூகங்களை வைத்து இருபது ஆண்டுகளுக்கு திட்டமிட்டால் குறிப்பிட்ட தொகை உங்களுக்குக் கிடைக்கும். ஆனால், தொகையை நன்றாக ஆராய்ந்தால், உங்களுக்கு ஏற்படும் எதிர்கால ஆபத்தை புரிந்துகொள்ள முடியும்.

 

மேலேயுள்ள அட்டவணையிலிருந்து சில விஷயங்களைப் புரிந்துகொள்ளலாம்.

1.       இருபது ஆண்டுகள் வேலை செய்தபிறகு உங்களுக்கு ரூ.1. 7 கோடி ரூபாய் சேமிப்பாக கிடைக்கும்.

2.       உங்கள் செலவுகள் ஏற்கெனவே திட்டமிடப்பட்டவை என்பதால், வாழ்க்கை முறை மாறாமல் அப்படியே இருக்கும். அதிகரிக்கும் செலவுகளுக்கு பயந்து  வீடு, கார், சுற்றுலா  என பல்வேறு ஆசைகளை  தியாகம் செய்திருப்பீர்கள்.

3.       நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு விலைவாசி எட்டு சதவீதத்திலிருந்து மேலும் அதிகரித்தால் ரூ.1.7 கோடி ரூபாய் என்பது எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

எட்டாவது ஆண்டிலிருந்தே பொருளாதார ரீதியாக சிக்கல்களை சந்திக்க தொடங்குவீர்கள். ஏனெனில் அதற்குப் பிறகு நீங்கள் வாழ்வதற்கு தேவையான சேமிப்புத் தொகை உங்களிடம் இருக்காது.

 

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் சேமித்து வைத்த பணம் செலவான பிறகு வாழ என்ன செய்வீர்கள்? இருபது ஆண்டுகால பணிக்காலத்தில் பணத்தை அதிகளவு சம்பாதிக்க ஏதேனும் வழியிருக்கிறதா?

 

இன்னொரு வாய்ப்பைப் பார்ப்போம் . பணத்தை அப்படியே வங்கிக் கணக்கில் வைத்திருக்காமல் அதை முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு 12 சதவீத வருமான வளர்ச்சி கிடைக்கிறது. மாதம்தோறும் கிடைத்த முதலாமாண்டு உபரித்தொகை ரூ.2,40,000 யை முதலீடு செய்தால், ஆண்டுக்கு 12 சதவீதம் அளவில் இருபது ஆண்டுகள் கழித்து நமக்கு கிடைக்கும் தொகை ரூ.20,67,063 ஆகும்.

 

உபரித்தொகையை இப்படி முதலீடு செய்வதன் மூலம் சேமிப்புத் தொகை ரூ.1.7 கோடியிலிருந்து 4.26 கோடியாக அதிகரித்திருக்கும். சாதாரணமாக கிடைக்கும் தொகையை விட 2.4 மடங்கு அளவு அதிகம். இதன் காரணமாக பணி ஓய்வுக்குப் பிறகு நீங்கள் இன்னும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். 

  நாம் இப்போது தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கு வருவோம். எதற்காக முதலீடு செய்யவேண்டும். அதற்கான காரணங்கள் கீழே உள்ளன.

பணவீக்கம்

முதலீடு செய்யாதவரை விட முதலீடு செய்தவர் மகிழ்ச்சியாக வசதிகள் நிறைந்த வாழ்க்கையை வாழ முடியும். ஒருவர் வாழ்வதற்கான செலவுகள் உயர்வதை பணவீக்கம் என்று கூறலாம்.

செல்வத்தை பெருக்குவது

குறிப்பிட்ட காலகட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அதைப் பெருக்க முடியும். இப்படி கிடைக்கும் பணத்தை பிள்ளைகளின் கல்வி, திருமணம், சொந்த வீடு வாங்குவது, பணி ஓய்வுக்குப் பிறகு சுற்றுலா செல்வது மேலும் பல்வேறு செலவுகள் ஆகியவற்றை செய்யலாம்.

வாழ்க்கையில் திட்டமிட்ட பொருளாதார இலக்குகளை அடைய முடியும்.


நன்றி - இரா.முருகானந்தம்

கருத்துகள்