நீட்ஷேவின் கருத்தால் கொலை செய்ய கிளம்பிய அறிவுஜீவிகள்!

 





நீட்ஷே




சினிமா பார்த்து திருடினேன் என்ற வார்த்தைகளை டெய்லி புஷ்பம், தந்தி போன்ற நாளிதழ்களில் சாதாரணமாக பார்த்திருப்பீர்கள். இப்படி சொல்லும் நாளிதழ்கள் அந்த பிரபலங்களை வைத்துதான் சம்பாதிக்கிறார்கள். ஆனால் செய்திகளை குற்றவாளி சொன்னதாகவே வெளியிடுவார்கள். உண்மையில் குற்றவாளியின் மனம் தான் செய்தது சரிதான் என வாதிட இதுபோன்ற புற காரணங்களை எடுத்துக்கொள்கிறது. சினிமாதான் ஒருவரை தூண்டியது, குற்றங்களில் ஈடுபட்டார் என்றால் அதே சினிமாவில் அறம் சார்ந்த உணர்வுகளை ஏற்படுத்தும் படங்கள் ஏகத்துக்கும் உண்டே, அவை குற்றவாளியின் மனதை மாற்றவில்லையா? பொதுவாக மனித மனம் தான் செய்யும் காரியத்திற்கு காரண காரியங்களை எளிதாக உருவாக்கிக்கொள்ளும். இன்று பொதுவெளியிலும் அறியாமை வெளிப்பட தான் சொல்லுவதே உண்மை என்று பேசுகிறார்கள் பாருங்கள். இவர்கள் நவீன குற்றவாளிகள். பின்னணியல் குற்றச்செயல்களை செய்துகொண்டும் இருக்கலாம்.

இந்த வகையில் நீட்ஷே என்ற தத்துவ அறிஞரைப் பற்றி வாசித்திருப்பீர்கள். இவர் அவர் வாழ்ந்த காலத்தை முன்வைத்து சில கருத்துகளை கோட்பாடுகளை சொன்னார். அதில் ஒன்றுதான், பலவீனர்கள் மீது அதிகாரம் செலுத்தித்தான் நாம் பலம் பெற முடியும். அறங்களால் அல்ல குற்றச் செயல்களால்தான் மனிதன் பலம் பெறுகிறான். புதிய மாற்றங்களை செய்கிறான் என அவர் ஏதோவொன்றின் தொடர்ச்சியாக இக்கருத்துகளை கூறுகிறார். ஆனால் இதைப்பிடித்துக்கொண்டு குற்றவாளிகள் கிளம்புவார்கள் என அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஆனால் அப்படியும் வந்து பீதி கிளப்பியவர்கள் உண்டு.

1924ஆம் ஆண்டு இப்படி கிளம்பிய ஆட்கள் இருவர். அவர்களின் பெயர், நாதன், ரிச்சர்ட். இருவருமே நீட்ஷேவின் கருத்துகள் மீது காதல் கொண்டவர்கள். படித்து சலித்தவர்கள் செய்து பார்த்தால்தானே தெரியும என கொலை செய்ய முயன்றனர். அதாவது, கண்டுபிடிக்க வாய்ப்பில்லாதபடி ஒரு கொலை. அறிவுஜீவிகள் இப்படித்தானே யோசிப்பார்கள். இதில் ரிச்சர்ட்தான் நீட்ஷே மீது பித்துபிடித்த காதல் கொண்டவர். நாதனைப் பொறுத்தவரை ரிச்சர்ட் சொல்வதை ஆமாம் என்று சொல்லும் ஆள். தலைவன் இருந்தால் அவனுக்கு தொண்டர்களும் தேவைதானே?

சிறுவன் ஒருவனைக் கடத்தி கொன்று அமிலம் மூலம் அடையாளத்தை அழித்து பிணத்துடன் கடிதம் ஒன்றை எழுதி வைப்பதுதான் திட்டம். ஆனால் கடத்தி கொலை செய்து அடையாளங்களை அழிக்கும்போது மாட்டிக்கொண்டனர். மரணதண்டனையிலிருந்து உயிர் தப்புவதே அவர்களுக்கு பெரும்பாடாக ஆகிப்போனது. அப்போதுதான் நீட்ஷே சொல்லிய கருத்தின் நடைமுறை பிரச்னைகளை உணர்ந்தனர். தனி மனிதன் பிறரின் அறக்கோட்பாடுகளை மதித்து நடக்கவேண்டியதில்லை. அவனே ஒன்றை உருவாக்கிக்கொள்ளலாம் என நீட்ஷே கூறியிருந்தார். அதையே கொடைக்கானல் ரேடியோ தொகுப்பாளர்கள் போல மனப்பாடம் செய்து ஒப்பித்து குற்றம் செய்ய களமிறங்கி மாட்டிக்கொண்டனர்.

 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்