பெண்களைக் கொன்று தோலை உரித்து அறைக்கலன்களை உருவாக்கிய வினோதன் - எட்வர்ட்

 









1957ஆம் ஆண்டு அமெரிக்க காவல்துறையினர் ஒரு அதிர்ச்சியான வழக்கை சந்தித்தனர். அவர்கள் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக வசதியான மனிதர் ஒருவரைப் பார்க்கச் சென்றனர். சென்ற இடம் ஒரு பண்ணை வீடு. 195 ஏக்கர் பரப்பு. அங்கு விசாரிக்க சென்றபோது செல்வந்தர் எட்வர்ட் கெயின் அங்கு இல்லை. ஆள் இல்லையே சுற்றுப்புறத்ததை பார்ப்போம் என காவல்துறை அதிகாரிகள் பண்ணை வீட்டுக்குள் நுழைந்தனர். சமையல் அறையில் ஏதோ ஒரு பெண் தலைகீழாக இருப்பது போல தெரிந்தது. என்னடா இது இப்படியெல்லாம் சீன பொம்மைகள் வந்துவிட்டனவா என்று பாரத்த காவலர்கள் மிரண்டனர். உண்மையில் ஒரு பெண்ணை தலையை மட்டும் வெட்டி முண்டத்தை தலைகீழாக எட்வர்ட் தொங்கவிட்டிருந்தார். இதுதான் டீசர். அப்படி இறந்த பெண்மணி பெர்னிஸ் வார்டன் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மேரி ஹோகன் என இருவரில் ஒருவர் என காவல்துறையினர் முடிவுக்கு வந்தனர்.

பிறகு வீட்டுக்குள் உள் அறைகளை எட்டிப் பார்த்தனர். வினோதமான நெடி மூக்கை வருடியது. நாற்காலிகளுக்கான குஷன் மனித தோலால் செய்யப்பட்டது. ஒரு சிறு பெட்டியில் பெண்குறி அறுத்து பதப்படுத்தப்பட்டிருந்தது.  குடல்களை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்தார் எட்வர்ட். பெண்களின் மார்பு காம்புகளைப் பயன்படுத்தி உடை தைக்கப்பட்டிருந்தது. எட்வர்ட் மனித உடல் உறுப்புகளை என்னென்ன அறைகலன்களாக பயன்படுத்த முடியுமோ அத்தனையையும் செய்திருந்தார். மேலே சொன்ன இரு பெண்களின் தலைகளையும் அறைகளில் காவல்துறையினர் பார்த்தனர்.

 விசாரித்தபோது எட்வர்ட், அறைகலன்களிலுள்ளவை அனைத்தும் கல்லறையிலிருந்து பெறப்பட்டவை என்றார். தான் கொன்றது இரண்டு பெண்களை மட்டுமே என ஒப்புக்கொண்டார். எதற்கு என கேட்டதற்கு அவர்களின் உடல் தோல் எனக்கு உடை தைக்க பொருத்தமாக இருக்கும் என பதில் சொன்னார். அதை அணிந்துகொண்டு நிலா வெளிச்சத்தில் நடனமாடி வந்திருக்கிறார் எட்வர்ட்.

எட்வர்டின் அம்மா, அவர்மீது ஆதிக்கம் செலுத்தி வளர்த்தியிருக்கிறார். இதனால் அம்மா வாழ்ந்த அறை, தூங்கிய படுக்கை ஆகியவற்றை தெய்வம் வாழும் வீடு என்பது போல பாதுகாத்து வந்தார். அம்மா, எட்வர்டிடம் உடலுறவு தவறானது அது உனது சிந்தனைகளை உருக்குலைத்து விடும் என ஏதோ உளறிவிட்டு போக அதை கெட்டியாக பிடித்து எட்வர்ட் வாழ்ந்து வந்திருக்கிறார். அதேசமயம் மனிதர்களின் உடல் அமைப்பு, எலும்பு என அனைத்து விஷயங்களையும் படித்து அதை வைத்து மனிதர்களின் தோலை உருவி அரக்கி எடுத்து பல்வேறு பொருட்களை செய்து வந்தார். கொலை செய்தபெண்ணின் தலையைக் கூட முகத்தசை மற்றும் தலைமுடியோடு உருவி எடுத்து வைத்திருந்தார். டெக்ஸ் வில்லர் கதைகளில் வரும் பழங்குடிகள், தோற்றுப்போன பழங்குடி வீரர்களின் மண்டைத்தொலியை உரிப்பார்களே அதை வகைதான்.

நீதிமன்ற வழக்கில் எர்வர்ட் கெய்னின் வழக்குரைஞர் அவர், மனநிலை குறைபாடு கொண்டவர் எனவே அவரை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய வழக்கு என்பதால் எட்வர்டை மருத்துவமனை சிகிச்சைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 1958 தொடங்கி 1978 வரையில் வழக்கு சென்றது. தன்னை விடுக்குமாறு எட்வர்ட் கெய்ன் கோரினார். ஆனால் அவர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.பிறகு உடல்நிலை சிக்கலுக்குள்ளாகி 1984ஆம் ஆண்டு மறைந்தவரின் உடல் அவரது அம்மா அருகேயே புதைக்கப்பட்டது.

 


கருத்துகள்