அரசு, அதிகாரம் கட்டுப்படுத்த முடியாத மனத்தை அடைவது சாத்தியம்தான்! ஜே கிருஷ்ணமூர்த்தி

 










சரியான கல்வி
ஜே கே கிருஷ்ணமூர்த்தி

பெரும்பாலான மாணவர்கள் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்கிறார்கள். ஒரு விஷயத்தை ஆராய்ந்து விசாரணை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கேள்வி  கேட்பதை பெற்றோர் ஆசிரியர் ஆகியோர் ஊக்குவிப்பதில்லை. பிள்ளைகள் கேள்வி கேட்கும் இயல்பு கொண்டவர்களாக அதிருப்தி கொண்டவர்களாக இருப்பது பெற்றோர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பிள்ளைகள் இனி எப்போதும் கேள்வி கேட்காத முறையில் யோசிக்க தெரியாத அளவில் அவர்களை மாற்ற முயல்கிறார்கள். கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் புறக்கணித்து அவர்களை மந்தமான மனிதர்களாக மாற்றுகிறார்கள்.

தங்களது வாதங்களை பெற்றோர், ஆசிரியர் ஆகியோர் முன்வைக்க கலாசாரம். தொன்மையான பாரம்பரியம், சமூக மதிப்பு ஆகியவற்றை ஆதாரமாக காட்டுகிறார்கள். இதில் வயதானவர்கள் சிறப்பாக செயல்பட்டு பிள்ளைகளை மந்தமானவர்களாக மாற்றுகிறார்கள். பெற்றோர், ஆசிரியர் மேற்சொன்ன முறைகளை கைவிட்டு பிள்ளைகளை, மாணவர்களை விழிப்புணர்வு கொண்டவர்களாக மாற்ற வேண்டும்.

சிறுபிள்ளைகள் உயிருடன் வாழ்கிறார்கள் என்றால் அதிருப்தி கொண்டவர்களாக அதேநேரம் நம்பிக்கையுடன்தான் இருக்கமுடியும். அப்படி இல்லாதபோது அவர்கள் முதியவர்களாக இறந்துபோனவர்கள் போலவே வாழ முடியும். சமூகத்தில் வயதானவர்கள் எப்போதும் பாதுகாப்பு வசதிகளை வேண்டுபவர்களாக சொகுசான வசதிகளுடன் வாழ விரும்புவார்கள். அவர்கள் அனைத்து செயல்பாடுகளிலும் நிரந்தரத்தன்மை வேண்டுமென ஆசைப்படுபவர்கள். தங்களது மனதில் எழும் அதிருப்தியைத் தவிர்க்க பல்வேறு வேலைகளைச் செய்தபடி, புதிய சிந்தனைகளை பின்பற்றாமல் உறவுகளோடு பொறாமை எழ வாழ்வார்கள்.

பொதுவாகவே நாம் இளமையாக இருக்கும்போது நிறைய அதிருப்திகளை கொண்டிருப்போம். பாகுபாடின்றி நாம் மனதில் பிறர் மீதான சார்ந்திருத்தல் இல்லாமலும், பயம் இல்லாமலும் இருப்பதை  உறுதி செய்யவேண்டும்.  இதைப்பற்றி உறுதியாக அறிந்துகொள்ளவேண்டும்.

சுதந்திரம் என்பது என்ன? வரைபடங்களில் குறிப்பிட்ட நிறத்தில் உள்ள நிலப்பரப்பிற்கு அளிக்கப்படுவது மட்டும் அல்ல. அங்கு வாழ்பவர்களான தனிநபர்களுக்கும் சுதந்திரம் அவசியமானது. உள் மனதில் அதிகாரம், பதவி, உரிமைக்காக  வேட்கை கொள்ளாதபோது பிறரைச் சார்ந்து இருக்கும் உறவுமுறை குரூரமாக மாறாது.

பயத்தில் இருப்பவர்கள் தங்கள் மனதில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை எளிதாக அடையாளம் காணலாம்.  உண்மையில் அதிருப்தி என்பது ஒருவகையான சுதந்திரம்தான். அரசியல் இயக்கங்களின் பேரணி, கூட்டங்கள், அதில் கோஷங்களைப் போடுவது, ஆன்மிக வழிகாட்டு, குருவைத் தேடுவது என செய்யும் பல்வேறு செயல்களும் அதிருப்தியின் விளைவுகள்தான்.

இதுபோன்ற செயல்பாடுகள் மனதை, மூளையை மந்தப்படுத்தி பயத்தை உருவாக்குகிறது. வாழ்க்கை பற்றிய பயத்தை வேறு வகையிலானதாக மாற்றுகிறது.

பாதிரியார், அரசியல்வாதி, பால்காரர், ஏழை ஆகியோர் எளிதாக இளைஞர்களின் மனதை தங்களுக்கு ஏற்ற வழியில் மாற்றிவிட முடியும். சரியான முறையில் ஒருவர் கல்வி கற்கும்போது, அவர் தன்மீது பிறர் செலுத்தும் செல்வாக்கை எளிதாக உணர்ந்து தவிர்க்க முடியும். பிறர் தன் மீது விரிக்கும் பேராசை பொறியில் விழ மாட்டார்கள்.

கிளிப்பிள்ளை போல பிறர் சொல்லிக் கொடுத்த கோஷங்களை போட மாட்டார்கள். அதிகார வர்க்கத்தை, அரசை தங்கள் மனம், மூளை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். நீங்கள் இன்னொருவரின் கருத்தியலை அது சிறந்ததாக இருந்தாலும் பின்பற்றுவது உலகில் அமைதியை ஏற்படுத்தாது.

தி ரைட் கைண்ட் ஆஃப் எஜூகேசன் நூலில் இருந்து…..


கருத்துகள்