இடுகைகள்

சுதீர்பாபு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலியின் அண்ணன் காதலை ஒன்று சேர்க்கப் போராடும் நாயகன்!

படம்
  ஆடு மகாடுரா புஜ்ஜி தெலுங்கு சுதீர் பாபு, அஸ்மிதா சூட் அப்படியே தமிழில் மொழிபெயர்த்தால்... அவன் ஆம்பளடா புஜ்ஜி... என தலைப்பு வரும்.  தெலுங்கு படம்தான். ஆனால் தேவையில்லாத ரவுடிகள், சண்டை என்று இல்லாமல் நகைச்சுவையாக கொண்டாட்டமாகவே படம் பாதிக்கும் மேல் நகர்கிறது. படத்தின் முக்கியமான பாத்திரம் சித்து. இவனைப் பொறுத்தவரை வாழ்க்கை ஜாலியோ ஜிம்கானா என வாழ்ந்து வருகிறான். அனைவரிடமும் வம்பு செய்து மாட்டிவிடுவது, சக வயது பிள்ளைகள் தொடங்கி ஆசிரியர்கள், பள்ளிக்கு வெளியில் ஐஸ் விற்பவர் தொடங்கி யாரையும் விட்டு வைப்பதில்லை. இதனால் அவனது அப்பாவுக்கு மகனுக்காக அபராதம் கட்டுவதே தொழிலாக இருக்கிறது. கூடவே சித்துவை அடிக்க முடியாதவர்கள் அவனது அப்பாவி அப்பாவை அடித்துவிட்டு செல்கிறார்கள். வம்பு செய்யும் மகனின் பெயரை எங்கும் சொல்லாமல் வாழ்ந்து வருகிறார் அவனது அப்பா.  இந்த சூழலில் சித்து கல்லூரிக்கு செல்கிறான். அதுவும் கூட அவன் காதலிக்கும் இந்து என்ற பெண்ணுக்காகத்தான். அவன் காதலிக்கும் பெண்ணின் அண்ணன் செர்ரி, தனது தங்கையை காதலிக்க நினைப்பவர்களை அடித்து துவைக்கிற ஆள். அவனை டபாய்த்து தங்கை இந்துவை காதலிப்பதோடு, அத

ஐந்து கொலைகளை செய்யும் கொலைகாரனின் பின்னணி! - வி தெலுங்கு #நானி 25

படம்
      வி     v telugu movie director Intragandhi mohanakrishna RR thaman ss songs amit trivethi தமிழில் இந்த படம் போல நிறைய படங்கள் உண்டு. தெலுங்கில் இதுபோல வெளிவந்துள்ள படங்கள் ஒப்பீட்டளவில் குறைவு.  போலீஸ் கொலைகாரன் என இருவருக்கும் இடையே நடக்கும் பூனை எலி விளையாட்டுதான் கதை.  படத்தில் முதல் காட்சியே சுதீர் பாபுவுக்குத்தான். அதிலேயே சண்டை, உடற்கட்டு, நேர்மையான குணம் வசீகரித்து விடுகிறார். படம் தொடங்கி சிறிது நேரத்திற்கு பிறகுதான் நானி(வி) உள்ளே வருகிறார். அவரது டீமைச் சேர்ந்த பிரசாத் என்பவரைப் போட்டுத்தள்ளிவிட்டு நெற்றியில் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டி வைத்திருக்கிறார். போனில் பேசும் வி, டிசிபி ஆதித்யாவுக்கு சவால் விடுகிறார். முடிந்தால் அடுத்தடுத்த கொலைகளை தடுத்து பார். அப்படி தடுத்தால் நான் போலீசில் சரண்டைகிறேன். இல்லையென்றால் நீ இதுவரை வாங்கிய மெடல்களை அரசுக்கு அனுப்பிவிட்டு வேலையை விட்டு விலக வேண்டும் என்பதுதான் அந்த சவால். முதலில் ஆதித்யா இதென்னடா இப்படியொரு சோதனை என்றாலும் சவாலை ஏற்கிறார். இறுதியில் யார் சவாலில் ஜெயிக்கிறார்? என்பதுதான் கதை.  பணபலம், அதிகாரபலத்தில் மேல்தட்டு வர்க்க ஆட்க

ஆபீசா, வாழ்க்கையா - சுதீர்பாபு எதை தேர்ந்தெடுத்தார்?

படம்
நன்னு டோச்சுகுண்டுவட்டே (nannu dochukunduvate) - தெலுங்கு இயக்கம் - ஆர்.எஸ்.நாயுடு ஒளிப்பதிவு - சுரேஷ் ரகுடு இசை அஜனீஸ் லோக்நாத் ஆபீஸ் வாழ்க்கையையும் சொந்த வாழ்க்கையும் கையாளத் தெரியாமல் கபடியாடும் இளைஞனின் கதை. சிம்பிளான கதை. கார்த்திக், ஐ.டி கம்பெனி மேனேஜர். ஒவ்வொரு நொடியும் அவரே செதுக்கியது போல உழைக்கிறார். யாருக்காக தேசத்திற்காகவா? அவருக்காக அவருக்கு மட்டுமே. அமெரிக்காவுக்கு போய் செட்டிலாகும் பிராமண லட்சியத்தோடு உழைக்கிறார். ஆனால் இடையில் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. அதேதான். உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டுத்தான் சாவேன் என அவர் அடம்பிடிக்க, அதற்காக ஒரு பெண்ணைத் தேட நாயகி அகப்படுகிறார். அப்புறம் நாடக காதல் உண்மைக்காதல் ஆக சுபம். நாமும் தண்ணிக்குடத்தை எடுத்துக்கொண்டு அதனை நிரப்ப கைபம்பை அடிக்கப்போகலாம்.  படத்தை பாஸ் செய்து பார்க்க அவசியமில்லை. சில உணர்ச்சிகரமான காட்சிகள் நன்றாக வந்திருக்கின்றன. கார்த்திக் தன் அப்பாவுடன் தான் இழந்த விஷயம் குறித்து பேசும்  காட்சி, கடைசியில் மேக்னாவுடன் கண்ணீரோடு பேசும் காட்சி. மற்ற இடங்களில் சுதீர் ப