ஐந்து கொலைகளை செய்யும் கொலைகாரனின் பின்னணி! - வி தெலுங்கு #நானி 25

 

 

 

V Movie Review , Nani's V Movie Review
வி

 

 

v telugu movie

director Intragandhi mohanakrishna

RR thaman ss songs amit trivethi


தமிழில் இந்த படம் போல நிறைய படங்கள் உண்டு. தெலுங்கில் இதுபோல வெளிவந்துள்ள படங்கள் ஒப்பீட்டளவில் குறைவு. 

போலீஸ் கொலைகாரன் என இருவருக்கும் இடையே நடக்கும் பூனை எலி விளையாட்டுதான் கதை. 

படத்தில் முதல் காட்சியே சுதீர் பாபுவுக்குத்தான். அதிலேயே சண்டை, உடற்கட்டு, நேர்மையான குணம் வசீகரித்து விடுகிறார். படம் தொடங்கி சிறிது நேரத்திற்கு பிறகுதான் நானி(வி) உள்ளே வருகிறார். அவரது டீமைச் சேர்ந்த பிரசாத் என்பவரைப் போட்டுத்தள்ளிவிட்டு நெற்றியில் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டி வைத்திருக்கிறார். போனில் பேசும் வி, டிசிபி ஆதித்யாவுக்கு சவால் விடுகிறார். முடிந்தால் அடுத்தடுத்த கொலைகளை தடுத்து பார். அப்படி தடுத்தால் நான் போலீசில் சரண்டைகிறேன். இல்லையென்றால் நீ இதுவரை வாங்கிய மெடல்களை அரசுக்கு அனுப்பிவிட்டு வேலையை விட்டு விலக வேண்டும் என்பதுதான் அந்த சவால். முதலில் ஆதித்யா இதென்னடா இப்படியொரு சோதனை என்றாலும் சவாலை ஏற்கிறார். இறுதியில் யார் சவாலில் ஜெயிக்கிறார்? என்பதுதான் கதை. 

பணபலம், அதிகாரபலத்தில் மேல்தட்டு வர்க்க ஆட்கள் செய்யும் அநீதிகளால் பாதிக்கப்படும் மனிதர்களைப் பற்றிய கதை. நானிக்கு 25வது படம். தமிழில் டப் பேசி நடித்திருக்கிறார். நன்றாகவே இருக்கிறது. ஏறத்தாழ சுதீர்பாபு, நானி இருவருக்கும் படத்தில் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். அதனால்தான் படம் பார்க்கும்படி இருக்கிறது. 

நிவேதா தாமஸ், க்ரைம் நாவல் எழுத்தாளராக விவரங்களைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார். அவர்தான் சுதீபுக்கு வழக்கில் உதவிகளை செய்கிறார். அதிதிராவின் மீது நம்பிக்கை வைத்து அவரை நடிக்க வைக்கும் இயக்குநர் இந்திரகாந்தியாகத்தான் இருக்கவேண்டும். சம்மோகனத்திலும் நன்றாக நடித்திருப்பார். இந்த படத்தில் சின்ன கதாபத்திரம்தான். அதிலும் ஜொலிக்கிறார். 

காவல்துறை முழுக்க கறைபடிந்து ஊழல்மயமாக காட்டப்பட்டுள்ளது. கேசை முடிக்க என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என்றே காட்டிவிட்டார் இயக்குநர். இதற்கு நிச்சயமாகவே தில் தேவைதான். 

அமைச்சரின் மகன் ரஞ்சித் பற்றிய உண்மையை அறியவேண்டும் என்ற கமிஷனரிடம் சுதீர் கேட்க, அவர் அந்த குற்றவாளி அங்கு வந்தால் அவனை முகம் தெரியாமல் அழித்துவிடு என்று சொல்லிவிடுகிறார். அப்போதே கமிஷனரின் சார்பு தெரிந்துவிடுகிறது. ஆனால் அதனை சுதீர் ஏற்பாரா என்ற தயக்கம் இருந்தது. தீவில் சண்டை தொடங்கியதும், சுதீர் சண்டையில் தீவிரமாக இறங்காதபோதே அவர் கட்சி மாறிவிட்டார் என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் எதற்கு என்பதுதான் கிளைமேக்ஸ் ட்விஸ்ட். 

வி - அன்பானவன் அசராதவன் அதிரடியானவன்

கோமாளிமேடை டீம் 













 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்