உணவுத்துறையில் ரோபோக்களின் பங்கு!
cc |
உணவுத்துறையில் ரோபோ!
அமெரிக்காவில் பிளென்டி என்ற உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம், வீட்டின் உள்ளறைகளில் உணவுப் பயிர்களை வளர்க்கும் தொழிலை செய்துவருகிறது. இதனை பராமரிப்பது மனிதர்கள் அல்ல ரோபோக்கள்தான். அந்த வகையில் கொரோனா பாதிப்பால் தற்போது உணவுத்துறையில் ரோபோக்களை நிறுவனங்கள் நாடத் தொடங்கியுள்ளன. காரணம் மனிதர்களிடமிருந்து நோய்த்தொற்று எளிதாக பரவும் ஆபத்துதான். ”மக்கள் மனிதர்களின் கைபடாத காய்கறிகளை அச்சமின்றி சாப்பிட விரும்புகிறார்கள். காய்கறிகளை முதல் நபராக மக்கள் தாங்களே தொட்டு சாப்பிட நாங்கள் உதவுகிறோம்” என்கிறார் பிளென்டி நிறுவன இயக்குநர் மேட் பர்னார்டு.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரோபோக்கள் மூலம் தொடங்கப்பட்ட கஃபே எக்ஸ் நிறுவனம், முதலீடு இன்றி தடுமாறியது. ஆனால் இன்று நோய்த்தொற்று காரணமாக மனிதர்கள் இல்லாத உணவகங்களுக்கு வரவேற்பு பெருகிவருகிறது. பிளென்டி போன்ற உணவுப்பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இ வலைத்தளங்கள் மூலம் ஏராளமான ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளன. பீட்சா விற்கும் நிறுவனங்களும் இப்போது மனிதர்களின் கைபடாமல் பீட்சாக்களை தயாரித்து மக்களுக்கு வழங்கத் தொடங்கிவிட்டனர். இனிமேல் கடைகளில் தானியங்கி முறையில் இயங்கும் எந்திரங்கள், உணவுகளைப் பரிமாறும் ரோபோக்களை காணும் வாய்ப்பு உள்ளது.
தகவல்:FE
கருத்துகள்
கருத்துரையிடுக