ஷியாம பிரசாத் முகர்ஜியின் வாழ்க்கை! - பிரிவினைவாதியா? இந்தியாவை ஒருங்கிணைக்க நினைத்தவரா?
ஷியாம பிரசாத் முகர்ஜி |
ஷியாம பிரசாத் முகர்ஜி
1901ஆம் ஆண்டு ஜூலை 6 அன்று பிறந்தார். 1921ஆம் ஆண்டு பிஏ ஆங்கிலம் ஹானர்ஸ் படிப்பை பிரசிடென்சி கல்லூரியில் படித்தார். முகர்ஜி முதலில் இந்திய வங்க பிரிவினையை தீவிரமாக எதிர்த்தார். ஆனால் 1946ஆம்ஆண்டு வங்கத்தில் கொல்கத்தா, நோக்காளி ஆகிய இடங்களில் ஏற்பட்ட வன்முறை அவரது எண்ணத்தை மாற்றியது. ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் முழு உறுதியாக இருந்தவர் முகர்ஜி.
மேற்கு வங்கத்தின் ஆளுநராகவும், சட்டமன்ற மேலவை தலைவராகவும் இருந்த ஹரேந்திர கூமர் முகர்ஜிதான், ஷியாம பிரசாத் முகர்ஜிக்கு வீட்டில் டியூசன் எடுத்த ஆசிரியர். முகர்ஜியின் தந்தை பெயர் சர் அசுதோஷ் முகர்ஜி.
ஷியாம பிரசாத் முகர்ஜி, வங்க நிவாரண கமிட்டி ஒன்றை தொடங்கி பணியாற்றினார். பின்னர் அங்கு இருந்து இந்து மகாசபைக்கு சென்றார்.
அங்கு சென்றபிறகு, அந்த அமைப்பில் முஸ்லீம்கள் சேர பல்வேறு முயற்சிகளை எடுக்க நினைத்தார். ஆனால் அமைப்பின் தலைவர் வி.டி சாவர்கர் அதனை நிராகரித்தார். இதனால் அந்த அமைப்பிலிருந்து முகர்ஜி விலகிவிட்டார்.
1923ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில ஆதிக்கம் அதிகம் இருந்தது. அங்கிருந்த செனட்டில் இடம்பிடித்தார்.
1924ஆம் ஆண்டு முகர்ஜியின் தந்தை அசுதோஷ் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக இருந்து மறைந்தார். அவர் இறந்தபின் அந்த இடத்தை முகர்ஜி நிரப்பினார்.
1925ஆம் ஆண்டு சட்டம் படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார். 1927ஆம் ஆண்டு லிங்கன் இன்னிலுள்ள சட்ட அமைப்பிற்கு அழைக்கப்பட்டார்.
1929ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழக தொகுதியில் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக வங்காள நாட்டு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1930 காங்கிரஸ் அமைப்பிலிருந்து விலகினார். சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டு வென்றா்ர.
1934ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றுவரை ஆசியாவில் 33 வயதில் ஒருவர் துணைவேந்தராவது அரிய சாதனையாகவே உள்ளது.
1935ஆம் ஆண்டு கோர்ட் உறுப்பினரானார். இந்திய அறிவியல் கழக கௌன்சிலில் உறுப்பினரானார்.
1936ஆம் ஆண்டு இந்திய பல்கலைக்கழக போர்டு அமைப்பின் தலைவரானார்.
1941ஆம் ஆண்டு வங்காளத்தின் நிதியமைச்சர் ஆனார். இந்து மகாசபையில் இணைந்து தலைவராக பணியாற்றினார். 1942 அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.
1943ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவரானார்.
1944ஆம் ஆண்டு உடல்நிலை சீர்கெட்டது. கல்கத்தாவில் தங்கியிருந்தார். தேசிய அரசியலிலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தார்.
1945ஆம் ஆண்டு ஜின்னா, காந்தி, நேரு ஆகியோரை சந்தித்து பிரிவினை கூடாது என வாதிட்டார். ஆனால் பயன் இல்லை.
1946ஆம் ஆண்டு பாக் கோரிக்கை உருவானது. கல்கத்தாவில் வன்முறை வெறியாட்டம் தொடங்கியது. அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த முகர்ஜி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்.
1947ஆம் ஆண்டு வணிக தொழில்துறை அமைச்சராக முதல் கேபினட் அமைச்சரவையில் பணியாற்றினார்.
1950ஆம்ஆண்டு கேபினட்டில் இருந்து விலகினார்.
தி வீக்
கருத்துகள்
கருத்துரையிடுக