எதிர்கால நோய் தீர்க்கும் மருத்துவமுறைகள்! - ஸ்டெம்செல், பாக்டீரியா, டிஎன்ஏ
cc |
எதிர்கால மருந்துகள், மருத்துவ முறைகள்
முந்தைய கட்டுரையில் சொன்னதுபோல ஒருவரின் மரபணுக்களைப் பொறுத்து அவருக்கென மருந்துகளை தயாரிக்கலாம். இதனால் மருந்து வீணாகாமல் அவரின் உடலைச் சென்று அடையும், நோய் குணமாகும். இதனால் மருந்து நிறுவனங்களிடம் கமிஷன் வாங்கும் மருத்துவர்கள் கூட தடாலடியாக இந்த பிராண்டு மருந்து சிறப்பாக வேலை செய்யும் முடிவெடுத்து மருந்துகளை வழங்க வாய்ப்புண்டு.
முன்பே நோயைத் தடுக்கலாம்.
இதுவும் கூட மரபணு ஆராய்ச்சியில் பெறும் பயன்தான். இதில் ஒருவரின் தந்தைக்கு ஏற்படும் நீரிழிவுநோய், உடல்பருமன், புற்றுநோய் ஆகிய விஷயங்கள் ஏற்படுமா என்று பார்த்து அதை தடுக்கும் முயற்சிகளை செய்யலாம். புற்றுநோய் ஏற்படுபவர்கள் எந்தெந்த பாகங்களில் நோய் தாக்கும் என்று பார்த்து அதனை அறுவை சிகிச்சை செய்து நீக்கி வருகிறார்கள். அதுபோலத்தான் இதுவும். கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக வாழ்பவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுக்கலாம்.
ஸ்டெம்செல் தெரப்பி
இப்போதைக்கு ஸ்டெம்செல் தெரபி கொஞ்சம் காசு கூடியதாக இருக்கலாம். ஆனால், இதனை முயன்றால் பல்வேறு பிறப்பு குறைபாடுகளை முடிந்தளவு சரிசெய்ய முடியும் என்கிறார்கள்.
பாக்டீரியா
நமது வயிற்றில் பாக்டீரியாக்கள் நிறைய இருக்கின்றன. இவை நமக்கு வயதாவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைக் கண்டுபிடித்திருக்கின்றர். எனவே இ்வற்றை ஆராய்ச்சி செய்தால் வயிறு தொடர்பாக ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை தீர்க்க முடியும்.
பயோஇன்பர்மேட்டிக்ஸ்
ஒருவர் உடலில் உள்ள புற்று செல்களின் தன்மையை அறிந்து, மரபணுக்களின் வரிசைமுறையை அறிந்து அதற்கேற்ப மருந்துகளை அளிக்கும் முறை. இதற்கான ஆராய்ச்சியில் ஐபிஎம் மற்றும் ஜெனோம் சென்டர் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
பிபிசி
கருத்துகள்
கருத்துரையிடுக