லூயி புனுவலின் சுயசரிதை! - காதல், காமம், நட்பு , துரோகம், திரைப்படம், வாழ்க்கை

 

 

Luis Buñuel
louis  bunual

 இறுதிசுவாசம்

 லூயி புனுவல்

தமிழில் சா.தேவதாஸ்

 வம்சி பதிப்பகம்

ரூ.200

 நூல் முழுக்க லூயி புனுவல் தனது பால்ய கால வாழ்க்கை முதல் திரைப்பட அனுபவங்கள் வரை எழுதியுள்ளார். இதில் பலவும் ஆண்டு வரிசையில் எழுதப்படவில்லை என்பதால் நீங்களே இப்படித்தான் இருக்கும் என நிகழ்ச்சிகளை வரிசையாக அமைத்து படித்துக்கொள்ளலாம். மேலும் இதனை எழுத்தாளரும் கூறியுள்ளார். லூயி புனுவெல், தனது நினைவிலுள்ள விஷயங்களை எழுதியுள்ளேன். இதில் சில சம்பவங்கள் தவறியிருக்கலாம் என்று அவரே கூறிவிடுகிறார். 

லூயி புனுவெல் மிகை யதார்த்தவாதி என்பதால் அவர் எடுத்த பல்வேறு படங்கள் இத்தன்மையில் அமைந்துள்ளன. அவரின் சிந்ததனைகளைத் தெரிந்துகொள்வது படம் பார்க்கும்போது அதிர்ச்சி அடைவதை தவிர்க்க உதவும். ஸ்பெயினில் பிறந்தவர் அமெரிக்காவுக்கு சென்று படம்பிடித்தலை பார்வையிட்டு கற்று்க்கொண்டு வந்து அமெரிக்க பாணி கதை சொல்லலை கைவிட்டு தனக்குப்பிடித்தது போல திரைப்படங்களை உருவாக்கியது இவரின் மேதமைக்கு சான்று. படங்கள் தனித்துவம் கொண்டவை என்றாலும் மக்களின் மதச்சார்புத்தன்மை கொண்ட நாடுகளுக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தின என்றால் மிகையல்ல. 

மெக்சிகோவில் வாழ்ந்தபோது அதிக படங்களை எடுத்திருக்கிறார். அவ்வளவு வேகமாக திட்டமிட்டு படங்களை 24 நாட்களில் முழுப்படங்களை எடுப்பதும், எடிட்டிங் பணிகளை கவனிப்பதுமாக லூயி புனுவலின் உழைப்பு அசாதாரணமானது. மது பற்றி ஒரு அத்தியாயமே தனியாக எழுதியிருக்கிறார். காதல் பற்றி ஓரிடத்தில் கூறுகிறார். பெபிடா என்ற தன்னை விட வயது குறைந்த பெண்ணை காதலிக்கும் இடம் அருமை. திரைப்பட இயக்குநரின் அனுபவம், அவரது சிறுவயது வாழ்க்கை, அவரது நம்பிக்கை. ஆண், பெண் உறவு பற்றிய அதிர்ச்சி ஆகியவை லூயி புனுவனில் சுயசரிதையான இந்நூலில சிறப்பாக பதி்வு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காகவே மொழிபெயர்ப்பாளர் தேவதாஸ் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். கடுமையான உழைப்பு கோரும் வேலை இது. 

நினைவுக்கேணி

கோமாளிமேடை டீம் 

நன்றி த.சக்திவேல்







 

கருத்துகள்