சுயலநலமில்லாத அன்பு அனைத்தையும் சகித்துக்கொள்ளும்! அமரம் அகிலம் பிரேமா - ஜொனாதன் எட்வர்ட்ஸ்

 

 

https://www.theprimetalks.com/wp-content/uploads/2020/09/Amaram-Akhilam-Prema-Review-and-Rating.jpg
அமரம் அகிலம் பிரேமம்

 

 

 

 

அமரம் அகிலம் பிரேமம்

ஜொனாதன் எட்வர்ட்ஸ்


தமிழில் நாம் பார்த்து நெகிழ்ந்த அபியும் நானும் படம்தான். தெலுங்கில் வசனங்களை நறுக்கென்று எழுதி, பாசத்தில் சுயநலம் கூடாது என செய்தி சொல்லி படம் எடுத்திருக்கிறார்கள்.

 

‘Amaram Akhilam Prema’ review: A familiar tale of love, bonding and ...

படத்திற்கு பெரும் பலம் அப்பாவாக நடித்துள்ள ஶ்ரீகாந்த் ஐயங்கார். படத்தின் நாயகன் இவர்தான். படம் முழுக்க இவர் வருகிறார். நாயகன் அமர், அகிலாவாக நடித்த விஜய்ராம், சிவ்சக்தி சச்தேவ் ஆகியோர் நன்றாக நடிக்க முயன்றிருக்கிறார்கள்.

Amaram Akhilam Prema Trailer | Latest Telugu Trailers 2019 | Vijay Ram ...


படத்தின் முக்கியமான மையம், அப்பாவுக்கும் மகளுக்கும் உள்ள பாசம். காதல் மகளின் மனதில் பூக்கும்போது காணாமல் போகிறதா இல்லையா என்பதுதான்.

அருண் பிரசாத் பாத்திரத்தைப் பொறுத்தவரை அவரே அனைத்து முடிவுகளை எடுக்க நினைப்பதில்லை. மகள் தான் செய்யும், செய்யப்போகும் விஷயங்களை தன்னிடம் சொல்லவேண்டும் என நினைக்கிறார். ஆனால் காதல் வரும்போது கள்ளத்தனம் அனைவரின் மனதிலும் குடியேறும்தானே? அகிலாவுக்கும் அப்படியே ஆகிறது. அப்பா அருண், கடும்கோபமாகி இனி அவள் என் மகள் கிடையாது என அனைத்து அன்பையும் வெறுப்பாக்கி காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார். இதனால் எஞ்சினியர் ஆக ஆசைப்பட்ட அகிலா, அப்பாவின் நிறைவேறாத ஐ.ஏ.எஸ் ஆசையை படித்து நிறைவேற்ற நினைக்கிறார்.

பார்க்க சப்பாத்தி உருட்ட பிசைந்து வைத்திருக்கும் பில்ஸ்பரி மாவு மாதிரி அகிலா

Amaram Akhilam Prema (2020) - Anurag Kulkarni, Radhan - Listen to ...
Add caption

இருக்க, புக்பாய்ன்ட் ஓனர் பையன் அமருக்கு அவளைப் பார்த்ததும் மனதில் லைட் எரிய, மணி ஒலிக்கிறது. இடைவிடாது அகிலாவை பின்தொடர்கிறான் அமர். எதற்கு அமரத்துவம் வாய்ந்த காதலைச் சொல்லத்தான்.

அகிலா அப்பாவின் ஆசையை நிறைவேற்றினாளா, அமரின் காதலை ஏற்றாளா என்பதுதான் இந்த யூ சர்டிபிகேட் சினிமாவின் முக்கியமான பகுதி

படத்தின் இயக்குநர் ஜொனாதன் நேர்காணலில், காதல், அதற்கான தியாகம் என்பது இன்றைக்கு எங்கேயும் பார்க்கமுடியாது. ஆனால் அதற்காக அதனை சொல்லாமல் இருக்கமுடியாது. உண்மையான அன்பு எதுவென சொல்லியிருக்கிறேன் என சொல்லியிருக்கிறார்.

இதனால் காதலுக்காக அமர் செய்யும் தியாகங்களை பார்த்தால் இந்த படம் 80, 90இல் வரவேண்டியதோ என தோன்றும் என்பது தற்செயலானதல்ல. பெண்களை இடைமறித்து பேசுவது, அவர்களை தொந்தரவு செய்வது ஆகிய காட்சிகள் இப்போதைய சூழலில் சரியானவை அல்ல.


இவற்றையெல்லாம் தாண்டி படத்தில் ஈர்ப்பானவையாக இருப்பது அப்பா, மகள் இருவருக்குமான நெகிழ்ச்சியான உறவு. இதன்பிறகுதான் அமரின் அர்ப்பணிப்பான அன்பையே திரும்ப கொடுக்கமுடியாது என அகிலா உணர்கிறாள். உணர்ச்சிமயமான நிறைய காட்சிகள் படம் நெடுகிலும் உள்ளன. அதற்காக படம் பார்க்கலாம். இறுதிக்காட்சியில் அகிலாவின் உறவினர் அமரின் சாதி பற்றி கேட்பார். படம் எந்தளவு எதார்த்தமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இக்காட்சி உதாரணம். ரதனின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தின் தரத்தை மேலே உயர்த்துகின்றன.

அன்பென்றால் அப்பாதான்!

கோமாளிமேடை டீம்
நன்றி

ஆஹா
 

கருத்துகள்