நவீன இளைஞனை டார்ச்சர் செய்யும் வெவ்வேறு காலகட்ட மனிதர்கள்! டைம் என்ன பாஸ்? - சூப்பர் சுப்பு
டைம் என்ன பாஸ்? |
டைம் என்ன பாஸ்?
சூப்பர் சுப்பு
சுட்டகதை என்ற படத்தை எடுத்தவர்தான் இந்த இயக்குநர். ஏறத்தாழ அந்தப்படத்திலிருந்து பெரிய மாறுதல்கள் இல்லாமல் மற்றொரு மேடை நாடகம் போன்ற வெப்தொடரை உருவாக்கியுள்ளார்.
டைம் என்ன பாஸ்? |
2019இல் வாழும் ஐடி இளைஞன் அறைக்கு வரும் பல்லவ நாட்டு உளவாளி, இஸ்ரோ விஞ்ஞானி, பிரிட்டிஷ் கால ஆங்கிலோ இந்தியன் பெண், எதிர்காலத்திலிருந்து வரும் டெக் இளைஞன் ஆகியோர் வந்தால் என்ன களேபரங்கள் நடைபெறும் என்பதுதான் கதையின் முக்கியமான மையம்.
இந்த வெப் தொடரை பெரிதாக எதிர்பார்ப்புகளுடன் பார்த்தால், மிஞ்சுவது வாட்ச்மேனாக வரும் சந்தோஷம் (அலெக்ஸ்), பல்லவ உளவாளி (கிள்ளிவளவன்) ஆகிய இருவர் மட்டும்தான்.
குழுவில் வித்தியாசமாக தென்படுவது, செவத்தபையனாக வரும் பரத்தான். மாட்டு ஊசி போடும் டாக்டர் போல என்ன செய்வதென தெரியாமல் வெப் தொடர் முழுக்க தவித்திருக்கிறார்.
வெவ்வேறு காலத்திலிருந்து நவீன காலத்திற்கு வருகிறார்கள் நிச்சயம் பட்ஜெட் பெரிதாக இருந்தால் மட்டுமே பெரிதாக ஏதேனும் சாதிக்கமுடியும். இல்லையென்றாலும் உரையாடல்களில் கூட சுவாரசியம் ஏற்படுத்தலாம். ஆனால் இந்த வெப்தொடரில் எதுவும் கண்ணில் பார்க்கவும் முடியவில்லை, கேட்கவும் முடியவில்லை.
மக்கள் சிரிக்கமாட்டார்கள் என உறுதியாக நம்பியவர்கள், சிரிப்பு சத்தங்களை அவர்களாகவே சேர்த்துக்கொண்டு விட்டார்கள். உண்மையில் இந்த கான்செப்டை பாரதீய வித்யா பவனின் மேடை நாடகமாக போட்டால் கூட டிக்கெட் காசு தேற்றியிருக்கலாம். ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்களை படங்களை விட பட்ஜெட் பெரிதாக, சுவாரசியமாக தயாரிக்கும்போது டைம் என்ன பாஸ்? மீண்டும் நம்மை பராசக்தி கால மேடை நாடக காலத்திற்கு அழைத்துச்செல்கிறது.
கான்செப்ட் மட்டுமே நன்றாக இருக்கிறது.மற்ற விஷயங்கள் எல்லாம் ஐயகோ! ரகம்.
வாட்ச் ஓடவில்லை!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக