மனதை திருடும் கூட்டம்! பௌண்டி ஹன்டர்ஸ் 2016

 

 

 

[ភាពយន្ត ហុងកុង] | Bounty Hunters 2016 | Full HD Movie ...
பௌண்டி ஹன்டர்ஸ் 2016

 

 

 

 

 பௌண்டி ஹன்டர்ஸ் 2016

சீன, தென்கொரிய, ஹாங்காங் தயாரிப்பு

இயக்கம் ஷின் டெரா


இன்டர்போலில் வேலை செய்த இருவர்(லீசான், அயோ), அங்கிருந்து துரத்தப்படுகிறார்கள். அவர்கள் பிழைக்க ஏற்றுக்கொள்ளும் வேலை, தனிநபர்களுக்கு பாதுகாப்பு தருவது. அதிலும் முன்கோபத்தால் ஆவேசப்பட்டு லீசான் செய்யும் பல்வேறு செயல்களால் நண்பர்கள் இருவரும் வம்பில் மாட்டிக்கொள்கிறார்கள். அப்படி ஒரு நிருபரை காப்பாற்றச் செல்கிறார்கள். அங்கு அந்த நிருபரைக் கொல்ல மூன்று பேரைக் கொண்டு குழு முயல்கிறது. அதை லீசான் அண்ட் கோ தடுக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை.

படம் சீரியசும், காமெடியும் கலந்து எடுத்த கொரியப்படம்.

இதில் லீ சான்(லீ மின் ஹோ)  பாத்திரம்தான் வீர தீர சாகசத்தில் முன்னே நிற்கும் பாத்திரம். இவர்களுக்கு, நிருபரைக் குண்டு வைத்து கொன்ற குழுத்தலைவியிடம்() சந்திப்பு ஏற்பாடாகிறது. அவர்களோடு இணைந்துகொண்டால்தான் உயிர்பிழைக்கும் நிலை. குழு தலைவிக்கு ஏராளமான சொத்து கிடக்கிறது. இதனால் பிரைவேட் ஜெட்டில் பறந்து, டைம்பாம்செட் செய்து மக்களைக் கொல்பவர்களை கண்டுபிடித்து மின்அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து நம்பியார்களை எம்ஜிஆராக்குகிறார்கள். இந்த பணிக்கு ஹோட்டல் அதிபர் ஒருவன் குறுக்கே வந்து நிற்கிறான். அவனை எப்படி இந்த குழு சமாளிக்கிறது என்பதுதான் கதை.

இதில் வில்லன் கதாபாத்திரம் உளவியல் பிரச்னை கொண்டவராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவரது பிரச்னையையும் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். அதுதான் படத்தின் முக்கியமான சமாச்சாரம். கொரியர்கள் என்பதால், படத்தில் ஆண், பெண் என அத்தனை பேரும் பேரழகுடன் இருக்கிறார்கள். அதிலும் தீவிரவாதிகளை கொல்லும் திட்டங்களின் முடிவில் லீசானும், கேட்டும் முத்தமிடும் காட்சிகள் உங்களை உற்சாகப்படுத்தும்.

படம் மூன்று நாடுகளின் தயாரிப்பு என்பதால் மூன்று நாட்டு நடிகர்களையும் பொறுக்கியெடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். படத்தில் சண்டைக்காட்சிகளும் காதல் காட்சிகளும் காமெடியும் சிறப்பாக கைகூடி வந்திருக்கிறது.

மனதை திருடும்  கூட்டம்.

 

கருத்துகள்