சூரியனை நெருங்குவது சாத்தியமா? மிஸ்டர் ரோனி
மிஸ்டர் ரோனி
சூரியனில் வேதிவினைகள் நடைபெறவில்லை என்றால் அதனை எளிதாக சென்றடையமுடியுமா?
சாத்தியமில்லை. அதன் வெளிப்பரப்பு 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட்டில் கொதித்து வருகிறது. பீட்ஸா வேகும் ஓவனில் உள்ள வெப்பம் 700 டிகிரி பாரன்ஹீட்தான்.
சூரியன் பூமியிலிருந்து 9,30,00,00,000 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. 65 கி.மீ வேகத்தில் குளிர்பானம் குடிக்க கூட நிற்காமல் சென்றால் சூரியனுக்கு சென்று சேர 160 ஆண்டுகள் ஆகும். நிலவைப் போல நானூறு மடங்கு தூரம் கொண்டது சூரியன். விண்கலத்தில் சென்றாலும் கடினமான பயணமாகவே இருக்கும். அலுமினிய விண்கலத்தில் சென்றால் அதன் உருகும் வெப்பநிலை 1220 டிகிரி பாரன்ஹீட் வரைதான் பொறுத்துக்கொள்ளமுடியும். அதற்குமேல் விண்கலம் உருகிவிடும். அதன் வெப்பத்தை உள்ளிழுக்காமல் தடுக்கும் கவசங்கள் இருந்தால் மட்டுமே சூரியனுக்கு அருகில் செல்லமுடியும். இல்லையெனில் தேங்காய்க்குள் பொட்டுக்கடலை, வெல்லம் போட்டு சுட்டு சாப்பிடுகிறோம் அல்லவா? அதுபோல விண்கலத்தில் வீர ர்கள் வெ்ந்து கருகிவிடுவார்கள். வெப்பத்தோடு கதிர்வீச்சு பிரச்னையும் உண்டு.
2004இல் ஏவப்பட்ட மெர்குரி மெசஞ்சர் இந்த வகையில் 30 மில்லியன் மைல்கள் சூரியனை விட்டு தள்ளி நின்றது. 2010ஆம் ஆண்டு இந்த விண்கலம் செய்த ஆய்வில் அங்கு வட துருவத்தில் எண்ணெய், உயிரியல் பொருட்கள் இருப்பதாக கூறியது நாசா. மனிதர்கள் நேரடியாக சூரியனுக்கு அருகில் செல்வது ஆபத்து. வேதிவினைகள் நடப்பது நின்றுவிட்டாலும் கூட அதன் வெப்பம் எளிதாக உடனே அணைந்துவிடாது.
கருத்துகள்
கருத்துரையிடுக