ஏ.ஐ உலகிலும் அன்புதான் முக்கியம்! பிளேடுரன்னர் 2049
பிளேடுரன்னர் 2049 |
பிளேடுரன்னர் 2049
போலீஸ் ஆபீசர், முன்னாள் காவல்துறை புரட்சியாளர்களை தேடி செல்கிறார். ஓரிடத்தில் ஒருவரைக் கொன்று அவரின் கண்ணைத் தோண்டி எடுத்துக்கொண்டு வரும்போது, அவரின் வீ்ட்டு வாசலிலுள்ள மரம் அவரது கண்ணை உறுத்துகிறது. அதை தோண்டிப் பார்த்தால் அதில் ஒரு பெட்டி கிடைக்கிறது. அதில் ஒரு சடலத்தின் எலும்புகள் கிடைக்கின்றன. அது யார் என்பதை அவர் தேடிப்போக கிடைக்கும் அதிர்ச்சிகரமான விஷயங்கள்தான் படத்தின் மையப்பகுதி.
படம் முழுக்க ரியான் கோஸ்லிங்கின் பகுதிதான் அதிகம். இதில் கடைசிப்பகுதியில்தான் ஹாரிசன் போர்டு வருகிறார். ரியான் கோஸ்லிங்குடன் போட்டி போட்டு நடித்து ஆச்சரியப்படுத்திருப்பவர் செற்கை பெண் தோழி ஜோய் ஆக நடித்துள்ள அனா டி ஆர்மஸ்.
படம் 2. 43 நிமிடங்கள் என நீண்டாலும் படம் எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படுத்தவில்லை. எதிர்காலம் பற்றிய படம் என்பதால், படம் முழுக்க சிஜி காட்சிகள் நிறைந்துள்ளன. முன்னாள் வீரர்களை, புரட்சியாளர்களை தேடிப்பிடித்து வேட்டையாடுபவன் என்பதால் ஆபீசர் கே யை அனைவரும் விலக்கிவிடுகின்றனர். இதனால் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வரும் பெண்ணைக் கூட தன்னருகில் அனுமதிப்பதில்லை. அவளைக் கூட தனது ஏஐ பெண் தோழியின் உருவத்துடன் பொருத்தி உறவு கொள்ளும் காட்சி, எதிர்காலத்தில் மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்களோ பீதி ஏற்படுத்துகிறது.
அன்பிற்கும் அக்கறைக்கும் ஏங்கும் பாத்திரம்தான் கே. அதனை அவர் மறைத்துக்கொண்டு பணியாற்றி வருவார். அவர் ஒரு அடிமையான மனிதர் என்பதை இறுதியில் தெரிந்துகொள்ளும்போது ஏறத்தாழ அவர் வாழ்வதற்கான காரணங்கள் ஏதுமில்லை. அதனால் அப்படியே டெக்கார்டை (ஹாரிசன் போர்டு) காப்பாற்றிவிட்டு செல்கிறார். டச்சு நடிகையான சில்வியா ஹோக்ஸ் வில்லனின் உதவியாளராக வந்து மிரட்டுகிறார். அவரின் இறுதிப்பகுதி சண்டைக்காட்சி சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.
படத்தில் டாக்டர் வாலஸ் வரும் காட்சிகளில் அவர் வசிக்கும் இடம் பிரமாதமாக இருக்கிறது. ஒளி கூடி குறைந்து இருள் வரும் காட்சிகள் பிரமாதமாக படமாக்கப்பட்டிருக்கின்றன.
Add caption |
ஏ.ஐ உலகிலும் அன்புதான் முக்கியம்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக