தம்பி மனைவியின் அத்துமீறிய உறவால் தூக்குதண்டனைக்கு உள்ளாகும் அண்ணன் வாழ்க்கை! மௌனம் சம்மதம்

 

 

Mounam Sammadham Songs Lyrics | மௌனம் சம்மதம் பாடல் வரிகள்
மௌனம் சம்மதம்

 

 

மௌனம் சம்மதம்

மது

இளையராஜா

தம்பி மனைவியை கொன்ற வழக்கில் தொழிலதிபர் ஜெய்சங்கர் மாட்டிக்கொள்கிறார். அவர் பேசுவதற்கு வாய்ப்புகளே வழங்கப்படாமல் தூக்குதண்டனை வழங்கப்படுகிறது. இதனை எப்படி உடைத்து, வழக்குரைஞர் மம்மூட்டி அவரை வெளியே கொண்டுவருகிறார் என்பதுதான் கதை.

நிதானமாக நடைபெறும் படம். நடந்த விஷயங்களை தொழிலதிபரின் வீட்டில் வாழும் ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் சொல்லுகிறார்கள். இதைத்தான் நாம் பார்க்கிறோம். இதன் வழியாக நாம் நினைப்பதும், வழக்கை எப்படி மம்மூட்டி தீர்க்கிறார் என்பதையும் குறைந்த பட்ச சண்டைகளுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

மம்மூட்டி, அமலா ஆகியோர் இடையிலான தொடக்க காட்சியே அசத்தலாக இருக்கிறது. பொதுவாக மோசமாக கண்ணில் தென்படும் ஒருவரை நல்லவராக காட்டுவது, அப்படி நினைப்பது கூட கடினம். அதனை இந்த கதாபாத்திரத்தில் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர்.

பாடல்கள் அனைத்தும் கேட்கும் பார்க்கும் ரகமாக உள்ளன.

திரில்லர் படத்தில் பாடல்கள் ஹிட் ஆவது அவசியமில்லை என்று நினைக்கிற காலம் இது. நிதானமான படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் மீது சந்தேகப்பட வாய்ப்பு உள்ளது. இதில் தம்பி சரத்குமாரின் சாட்சியம்தான் முக்கியமானது.

நிதானமான ரசிக்கும்படியான திரில்லர் படம்.


கோமாளிமேடை டீம்  



கருத்துகள்