ஆன்லைன் விளையாட்டு: அதிகரிககும் மவுசு!

 

 

 

 

Nintendo Switch, Nintendo, Console, Game, Video, Play
cc

 

 

 

ஆன்லைன் விளையாட்டு: அதிகரிககும் மவுசு!


உலகளவில் திரைப்படம், பாடல்கள் ஆகியவற்றை விட அதிகளவு வளர்ச்சி பெற்றுவரும் துறையாக ஆன்லைன் விளையாட்டுத்துறை வளர்ந்து வருகிறது. இதனால் கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் உள்ளிட்ட பெரும் டெக் நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் விளையாட்டுத்துறையில் ஏராளமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குதித்துள்ளன. அமேஸான், ரிலையன்ஸ் ஜியோ, பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் விளையாட்டு சார்ந்து முதலீடுகளை குவித்து வருகின்றன. இதுதொடர்பான ஆய்வில் டிவிட்டர் தனிப்பயனர் ஒருவருக்கு ரூ.600, ஃபேஸ்புக் ரூ.1,423 , கூகுள், ரூ.2,023 சம்பாதித்து உள்ளன. எபிக் கேம்ஸ் நிறுவனத்தின் தனி விளையாட்டாக ஃபோர்ட்நைட் மட்டும் ரூ.7,196 சம்பாதித்து உள்ளது. இதிலிருந்தே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கை அறிந்து கொள்ளலாம்.


பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆன்லைன் விளையாட்டுத் துறை அபரிமிதமான வளர்ச்சி பெற்று வருகிறது. பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் உலகளவில் முன்னணி ஆன்லைன் விளையாட்டு வீரர்களைப் பின்பற்றும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். விளையாட்டு நிறுவனங்கள் தங்களின் சந்தைப்பங்களிப்பை அதிகரிக்க விளையாட்டு தொடர்பான போட்டிகளையும் வளர்ந்த, வளரும் நாடுகளில் நடத்தி வருகின்றனர். 2023ஆம் ஆண்டு ஆன்லைன் விளையாட்டுத்துறையின் வளர்ச்சி ரூ.11,900 கோடி ரூபாயாக வளர்ச்சி பெற்றிருக்கும் என சந்தை வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.


தற்போது ஸ்மார்ட்போன் விளையாட்டுகளுக்கான சந்தை அதிகரித்து வருகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, துருக்கி ஆகிய நாடுகளிலுள்ள பயனர்கள் அதிகளவில் விளையாட்டுகளை தரவிறக்கி விளையாடி வருகின்றனர். ஆன்லைன் விளையாட்டுகளில் நிறைய வகைகள் உண்டு. சில விளையாட்டுகளை செயலி வழியாக தரவிறக்கி விளையாடலாம். இதில் விளம்பரங்களின் குறுக்கீடு இருக்கும். அடுத்து, ட்ரீம் 11 போன்ற விளையாட்டுகள். இதில் அணி வீரர்கள் மீது பணம் கட்டி விளையாடலாம். இன்னொருவகையான மொபைல் ப்ரீமியர் லீக்கில் இருவர் ரூ.10 கட்டி விளையாடினால் வென்றவருக்கு ரூ.15 கிடைக்கும். விளையாட்டு நிறுவனத்திற்கு ரூ.5 சென்றுவிடும். இதற்கடுத்த வகை இ-ஸ்போர்ட்ஸ். இவ்வகையில் இந்த நிறுவனங்களே ஆன்லைனில் விளையாட்டு போட்டிகளை நடத்துகின்றன. அவற்றில் பங்கேற்று வெல்லாம். ரிலையன்ஸின் ஜியோ ஸ்போர்ட்ஸ் மைக்ரோசாப்டுடன் கைகோத்து செயல்படவிருக்கிறது. பார்தி ஏர்டெல் நிறுவனம், நாட்வின் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படவிருக்கிறது.




கருத்துகள்