பூசன் திரைப்பட விழாவில்(2020) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய திரைப்படங்கள்

 

 


The Disciple (2020 film) - Wikipedia
தி டிசிப்பிள்

பூசன் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய திரைப்படங்கள்

தி டிசிப்பிள்

கோர்ட் என்ற மராத்தி படத்தை எடுத்த சைதன்யா தம்கனே எடுத்த படம். இரண்டாவது படத்திற்கு ஆடிஷனே 1000 பேருக்கு மேல் சென்று, பத்து மாதங்களை எடுத்துக்கொண்டிருக்கிறது. பாரம்பரிய சங்கீதத்தை கற்று்க்கொள்ள முனையும் இளைஞர் ஒருவரின் முயற்சியைப் பற்றி படம் பேசுகிறது.

பிங்கி எல்லி?

சில பணக்கார வீடுகளில் உள்ள குழந்தைகளை திருடி நெடுஞ்சாலைகளில் பிச்சை எடுக்க வைக்கும் கூட்டம் பற்றிய படம். அப்படி பிச்சைக்கார கூட்டத்திடம் சிக்கிய குழந்தையை மீட்க அப்பெற்றோர் என்ன செய்கிறார்கள் என்பதை படம் சத்தியத்துடன் பேசியுள்ளது. இயக்குநர் பிரித்வி கோனனூர். பிங்கி எல்லி என்றால் பிங்கி எங்கே என்று பொருள்?

எ ரைபிள் அண்ட் எ பேக்

இந்திய, இத்தாலி, ரோமானிய நாட்டினரின் கூட்டுத்தயாரிப்பு. இந்த ஆவணப்படம் ஸ்விஸ் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் காடுகளில் போராடி வரும் நக்சலைட்டுகளின் வாழ்க்கையைப் பேசுகிற படம் இது.

ஹராமி

மும்பையில் பிக்பாக்கெட் அடிக்கும் சிறுவர் கூட்டத்தின் வாழ்க்கையை அப்படியே அழுக்கும் வீச்சமுமாக பதிவு செய்திருக்கிறது. இந்த கூட்டத்தை தலைமையேற்று நடத்தி விதிகளைக் கற்றுக்கொடுத்து திருட வைப்பவர் இம்ரான் ஹாஸ்மி. இப்படி பிக்பாக்கெட்டால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரை பிக்பாக்கெட் சிறுவன் சந்திக்க நேரிடும் போது, ஏற்படும் விளைவுகள்தான் மையமான கதை. படத்தின் இயக்குநர் - ஷியாம் மதிராஜூ.


பிட்டர்ஸ்வீட்

கரும்பு வெட்டும் கூட்டத்தைப் பற்றி ஏதாவது யோசித்திருக்கிறீர்களா? சின்ன இடைவெளி கூட விடாமல் தொடர்ச்சியாக வேலை செய்யும் பெண்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை காட்சி படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த் மகாதேவன். மாதவிடாய் தொந்தரவால் கருப்பையை எடுத்துவிட்டால் என்ன என்று யோசிக்கும் பெண்ணின் சிந்தனை, டிரெய்லரில் பார்க்கும்போதே பதற வைக்கிறது. வலுவான காட்சியமைப்புகளின் வழியாக பெண்களின் அவலத்தை சொல்லியிருக்கிறார்.

மேற்சொன்ன படங்கள் அனைத்தும் யூடியூபில் டிரெய்லர் பார்க்க கிடைக்கும்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

மேதா தத்தா யாதவ்

 

கருத்துகள்