பூச்சிகள், பூஞ்சை, மரபணுமாற்ற உணவுகள் - எதிர்கால உணவுகள் எப்படியிருக்கும்?

 

 

 

 

Salmon, Dish, Food, Meal, Fish, Seafood, Plate
cc

 

 

 

 

 

எதிர்கால உணவுகள் -2

பூச்சிகள்

கொரானா வருவதற்கு காரணமே, கிடைக்கும் அத்தனை விலங்குகளையும் வெட்டி்க்கொன்று தின்பதுதான் என்று ஒரு வகை பிரசாரம் நடக்கிறது. உண்மையோ பொய்யே இன்றே கூட பலரும் பூச்சிகளை வறுத்து மசாலாத் தூவி மொறுக்கென கடித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் புரத தேவைக்கு பெரும்பாலான மக்கள் பூச்சிகளையே நம்பியிருக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் கிராம புறங்களில் அரிசி மாவோடு ஈசலை வறுத்து சாப்பிடும் உண்டு. சர்க்கரையோடு சேர்த்து சாப்பிட்டால் சிறப்பான உணவு, இனிப்பும் புளிப்புமான சுவையில் அமைந்த உணவு. இப்போது சாக்லெட் சிப்ஸ்களைப் போல் பின்னாளில் பிஸ்கெட்டுகளில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. பூச்சிகளை அரைத்த மாவு கூட விற்பைனக்கு் வரும் வாய்ப்பு உள்ளது.


மரபணு மாற்ற பயிர்கள்

இன்றுவரை உலகில் பல நாட்டு அரசுளும் இப்பயிர்களை ஏற்கவில்லை. ஐரோப்பாவில் குறைந்தளவு மரபணு மாற்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இன்று கிடைக்கு்ம சோயாபீன்ஸ்கள் இந்தவகையைச் சேர்ந்தவை. இவற்றை விலங்குகளுக்கு உணவாக போட்டு, கிடைக்கு்ம பால், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் மீது மரபணு மாற்ற பொருள் என்று லேபிள் குத்தப்படுவதில்லை,. இங்கிலாந்தில்ன ராயல் சொசைட்டி இப்பயிர்களை உடல்நலனுக்கு ஆபத்து விளைவிக்காது என்று கூறியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்த வகையில் ஏராளமான பொருட்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

பூஞ்சைகள்

நாங்கள் இங்கு காளான்களை சொல்லவில்லை குறிப்பிட்ட பூஞ்சைகளை எடுத்து உருவாக்கி அதனை பாக்கெடில் அடைத்து விற்கிறார்கள். உடல்நலனிற்கு தீமையெல்லாம் கிடையாது. க்வாரன் என்ற நிறுவனம் பூஞ்சைகளை பாக்கெடில் அடைத்து உலகமெல்லாம் விற்று வருகிறது. உலகம் முழுக்க பூஞ்சை உணவுக்கான தேவை 16 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

டோடோ கெபாப்ஸ்

இது முழுக்க ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் பல்வேறு இறைச்சி வகைகள்தான். இவற்றை கிரிஸ்பிஆர் தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்து பல்வேறு புதிய வகை இறைச்சிகளை கம்பியில் குத்தி சுட்டு சாப்பிடவேண்டியதுதான்.

கோதுமை இறைச்சி

இன்று இறைச்சிக்கு மாற்றாக சோயாபீனிலிருந்து எடுக்கப்படும் டோபு உள்ளது. இதைப்போல கோதுமையிலுள்ள புரதத்தை தனியாக எடுத்தால் அதுதான் குளூட்டேன் என்பது. அதனை வைத்து இறைச்சியைப் போன்ற உணவை உற்பத்தி செய்யமுடியும்.
 

கருத்துகள்