செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் மூளைத்திறனை தொட வாய்ப்புள்ளதா?

 

 

Robot, Woman, Face, Cry, Sad, Artificial Intelligence
cc

 

 

மிஸ்டர் ரோனி

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் மூளைத்திறனை தொட வாய்ப்புள்ளதா?

1950ஆம் ஆண்டு கணினி கண்டுபிடிக்கப்பட்ட காலம்தொட்டே செயற்கை நுண்ணறிவு சமாச்சாரங்கள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றை கணினியின் மூளை என்று முதலில் அழைத்தனர். செஸ் விளையாடுவத, மொழிகளை மொழிபெயர்ப்பு செய்வது ஆகியவற்றை முதலில் ஏ.ஐ செயதுவந்தது. மனித மூளையின் செயல்திறனுக்கு ஏற்ற வகையில் செயல்படும் என்று ஏ.ஐ முதலில் கருதப்பட்டது. கணினியின் செயல்திறனும், இணையமும் வேகமாக கூடியபோது, ஏ.ஐ அல்காரித ஆராய்ச்சியும் வேகம் பிடித்தது.கடந்த பத்தாண்டுகளில் நாம் தீர்க்க நினைத்த பல்வேறு பிரச்னைகளை ஏ.ஐ தீர்த்துவைத்துள்ளது. இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் திட்டங்கள், வணிகம் ஆகியவற்றின் அடிப்படையாக ஏ.ஐ உள்ளது.


செயற்கை நுண்ணறிவில் என்னென்ன வகைகள் உண்டு?

இன்று ஆழக்கற்றல் என்ற வகையில் சிறப்பானது என்று கூறும்படியான ஏ.ஐ கணினிகள் உருவாகி வருகின்றன. இவை மனிதர்களைப் போன்றவை. எப்படி வீட்டிலுள்ள குழந்தை தன் பெற்றோரைப் பார்த்து தாய்மொழியைப் பேசக் கற்கிறதோ அதைப்போல, ஆழக்கற்றல் ஏ.ஐ கணினி, பல்வேறு பேச்சுகளை அடையாளம் கண்டுபிடித்து சேகரித்து வைத்துக்கொள்ளும். இதன்மூலம் மனிதர்களின் பேச்சுகளை இவருடையது திறன் பிரித்து அறிந்துகொள்ளமுடியும். இது, நமது நண்பர்களின் குரலை நாம் அடையாளம் கொண்டுகொள்வது போலத்தான்

இவையன்றி, பல்வேறு புள்ளிவிவரங்களை கணக்கிடவும் ஏ.ஐ கணினிகள் பயன்படுகின்றன. குறிப்பாக போதைப்பொருட்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை எப்படி பாதித்துள்ளது என்று கண்டறியவேண்டுமென்றால் இதுபோன்ற ஏ.ஐ. கணினிகள் பயன்படுகின்றன. மேலும் இதன் பாதிப்பை வருங்காலத்தில் எப்படியிருக்கும் என்று கணிக்கலாம்.

செயற்கை நுண்ணறிவை முழுமையாக நம்பலாமா?

அனைத்து தொழில்நுட்பங்களிலும் பிரச்னைகள்,மைனஸ் பக்கங்கள் உள்ளன. செயற்கை நுண்ணறிவை நீங்கள் முழுமையாக நம்பினால் அதன் காரணமாக ஏற்படும் பிர்ச்னைகளையும் சமாளிக்கவேண்டும். இப்போது வரை தானியங்கி கார்கள் ஓட்டுவதில் மனிதர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் பெரியளவு விபத்துகளை தவிர்க்க முடிகிறது.
மனிதர்களின் தலையீடின்றி ஓட்டும்போது சிலரை செயற்கை நுண்ணறிவு பலிவாங்கியுள்ளது.
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்