விவசாய மசோதாக்களை எதிர்த்து நாங்கள் மக்களோடுதான் நிற்போம்! ஹர்சிம்ரத்கௌர் பாதல்

 

 

 

 

முதல்வர் ஆதரவு; அ.தி.மு.க எம்.பி எதிர்ப்பு! - மாநிலங்களவையில் நிறைவேறிய ...
ஹர்சிம்ரத்கௌர் பாதல்

 

 

ஹர்சிம்ரத்கௌர் பாதல்

முன்னாள் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர்

எதற்காக மத்திய அமைச்சரவையிலிருந்து பதவியை ராஜினாமா செய்தீர்கள்?

எனது கட்சியும் நானும் மத்திய அரசு அமல்படுத்திய மூன்று விவசாயத்துறை மசோதாக்களை தீவிரமாக எதிர்க்கிறோம். இவை விவசாயிகளுக்கு எதிர்ப்பானவை. அரசிடம் நான் என் தரப்பு வாதங்களை முன்வைத்தும் அவை பயன் தரவில்லை. அவை மக்களவையில் வெற்றி பெற்றுவிட்டன. வேறு வழியில்லாத நிலையில் நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்.

விவசாயிகளுக்கான முன்னுரிமையை  எங்களது கட்சி முதலில் இருந்தே அளித்து வருகிறது. அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோது நாங்கள் எங்களது கருத்தை ஜனநாயகப் பூர்வமாக முன்வைத்தோம். தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிடமும் எங்கள் மறுப்பை தெரிவித்தோம். ஆனால் அவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை. எனவே, எங்களுக்கு வேறு வழியில்லாமல் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தோம். இ்ப்போது விவசாயிகளுடன் இணைந்து மசோதாவுக்கு எதிராக போராடி வருகிறோம்.


மசோதா அங்கீகரிக்கப்படும்போது கேபினட்டில் இருந்ததாக கூறுகிறார்களே?

நான் அதை மறுக்கவில்லை. அப்போதும் எங்கள் கட்சியின் ஆட்சேபங்களை நான் எழுப்பினேன். மசோதா தயாரிக்கப்பட்டபோதும், விவாதிக்கப்படும்போதும் நான் எனது எதிர்வினையை கூறினேன். கடந்த இருமாதங்களாக எனது தரப்பை அரசிடம் எடுத்துக்கூற போராடினேன். ஆனால் அம்முயற்சியில் தோற்றுப்போய்விட்டேன்.

மத்திய அரசு இம்மசோதாக்கள் விவசாயிக்களுக்கு பயன்தரக்கூடியவை என்று கூறுகின்றதே?

இந்த மூன்று மசோதாக்களும் பஞ்சாப் மாநிலத்தின் விவசாயத்தை முற்றிலுமாக அழித்துவிடும். ஒருமுறை தனியார் வியாபாரிகள், நிறுவனங்கள் அரசின் கொள்முதல் முறையில் நுழைந்தால், அம்முறை பலவீனமாகி மெல்ல அழிந்துவிடும். மாநில அரசு உருவாக்கியுள்ள மண்டி முறை 50 ஆண்டுகள் வரலாறு கொண்டது. அதனை மத்திய அரசின் புதிய மசோதா அழித்துவிட்டால், அடுத்து உணவுதானியங்களை அரசு கொள்முதல் செய்வதும் நின்றுவிடு்ம்.

பாஜகவோடு உங்களது சிரோன்மணி அகாலிதளம் நீண்டகாலமாக கூட்டணி கொண்டுள்ளது. இனி பஞ்சாப்பில் உங்கள் கூட்டணி நிலைக்குமா?

இதனை கட்சி தலைமைதான் முடிவு செய்யவேண்டும். இதுபற்றி மாவட்ட அளவிலான கட்சிப்பிரிவுகளோடு கட்சி தலைமை ஆலோசனை நடத்திவிட்டுத்தான் பேசும்.

இனி உங்கள் கட்சியின் எதிர்காலம் என்னவாகும்?

நாங்கள் விவசாயிகளின் பின்னேதான் நிற்போம். பஞ்சாப்பில் விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்கள் தாக்கல் ஆக விடமாட்டோம். எங்களது முழு முயற்சியும், மசோதாக்களை விரிவுபடுத்துவதை தடுத்து நிறுத்துவதாகவே இருக்கும். எங்களது கட்சி தொண்டர்கள் விவசாயிகளுக்காக களத்தில் போராடி வருகிறார்கள். அக்.1  அன்று விவசாயிகள் பேரணி நடைபெறவிருக்கிறது. ஆளுநரிடம் எங்களது கோரிக்கையை சமர்ப்பிக்கவிருக்கிறோம். மேலும் விவசாயிகளுக்கு நீதி கிடைக்ககும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.

தி வீக்

பிரதுல் சர்மா

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்