ஐபிஎம் நிறுவனத்தின் வணிகத்தை விரிவாக்கிய விற்பனைப்பிரிவு ஆளுமை! தீபாளி நாயர்.

 

 

 

deepali-naair.jpg

தீபாளி நாயர்

ஐபிஎம் விற்பனைபிரிவு இயக்குநர், தெற்காசியா, இந்தியா பிரிவு


எல்அண்ட் டி, மகிந்திரா ஹாலிடேஸ், ஹெச்எஸ்பிசி ஆகிய நிறுவனங்களில் நிதி சார்ந்த பதவிகளை வகித்துள்ளார். தற்போது ஐபிஎம் நிறுவனத்தின் தெற்காசிய விற்பனை சமாச்சாரங்களை கவனிக்கிறார். இத்துறையில் நாயருக்கு 20 ஆண்டுகள் அனுபவம் உண்டு. ஐபிஎம் காரேஜ் என்ற திட்டத்தை இந்தியாவில் முதன்முதலில் செயல்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்தார். நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் ஐபிஎம் இப்போது தனது வணிகத்தை மீண்டும் செய்து வருகிறது. இவரது தலைமையிலான விற்பனைக் குழு கிரியேட்டிவிட்டி சார்ந்தும், விற்பனை சார்ந்து நல்ல நிலையில் உள்ளது. ஏராளமான விருதுகளையும் கூட வாங்கியுள்ளது. இம்பேக்ட் இதழில் 2018,2019 ஆகிய ஆண்டுகளிலும் செல்வாக்கு பெற்ற பெண்கள் பட்டியலில் தீபாளி நாயர் இடம்பெற்றுள்ளது அவரது திறமையை உலகிற்குச் சொல்லும்.

6
அபர்ணா அகார்கர்

நிகழ்ச்சி ஆக்கத்தலைமை, ஜீ5 இந்தியா

ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் முதுகலைப்பட்டம் பெற்றவர். டைம்ஸ் குழுமத்தில் ஆசிரியர்குழுவில் பணியாற்றியவர். அண்மையில் இ வணிகம் சார்ந்த டிப்ளமோ ஒன்றை படித்துள்ளார். 2006ஆம்ஆ ண்டிலிருந்து ஜீடிவியின் நிகழ்ச்சிகளை உருவாக்கி வரும் குழுவிற்கு இவர்தான் தலைமை. 2008ஆம் ஆண்டு தொடங்கி ஜீடிவியின் டிஜிட்டல் முயற்சிகளையும் தலைமை ஏற்று செய்து வருகிறார்.

7
ருபீனா சிங், ஐபிராஸ்பெக்ட் இந்தியா

அச்சு, டிவி, டிஜிட்டல் என அனைத்து வித பிரிவுகளிலும் பணியாற்றிய 20 ஆண்டு அனுபவங்களை சொத்தாக கொண்டவர். இருநூறு பேர்களைக் கொண்ட குழுவாக வளர்ந்துள்ள நிறுவனத்திற்கு 200க்கும் மேலான வாடிக்கையாளர்கள் உண்டு.  இம்பேக்ட் 50 விருதுகளில் முன்னமே பெயர் இடம்பெற்ற திறமையாளர் இவர். பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார். தனது விளம்பரங்களுக்காக ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். 

 

பொதுவாக பெண்கள் வணிகத்துறையில் சாதித்து அவர்களைப் பற்றி எழுதுவது என்பது மிகவும் குறைவு. அந்த வகையில் ஊடகத்துறையில் சாதித்த இப்பெண்களைப் பற்றி பதிவு செய்யவேண்டும் என்று தோன்றியது. எனவேதான் இந்த இம்பேக்ட் 50! சாதனைப் பெண்கள் தொடர். இதனை வாசித்தவர்களுக்கு நன்றி!

Thanks

Impact Magazine

Kaniyam srinivasan


 
 

கருத்துகள்