துரோகியை பொலி போட்டு எதிரிகளோடு மல்லுக்கட்டும் ஜெகஜாலன்! - சிஸ்கோ 1.0

 

 

 

 

Man, Gun, Military, Army, Soldier, War, Weapon, Police
cc

 

 

 

சிஸ்கோ 1.0

தமிழில் பிரசன்னா ஶ்ரீதர்

தமிழ் காமிக் டைம்ஸ் வெளியீடு


சிஸ்கோ, உளவு அமைப்பில் வேலை செய்கிற ஏஜெண்ட். அவருக்கு வரும் அசைன்மெண்ட் ஒருவரைக் கொல்லவேண்டும் என்பது. சரியாகத்தான் அதனை செய்கிறார். ஆனால் இடையில் அங்கு வேலைபார்க்கும் ஆள் ஒருவர் கொலையை வீடியோ எடுத்துவிட, அவரை பிடிக்க சிஸ்கோ முயல்கிறார். இதற்கிடையே இ்வருகுக்ம வீராட் எனும் மற்றொரு ஏஜெண்டுக்கும் முட்டிக்கொள்கிறது. இவர்களை சண்டை போடாதீர்கள் என பிரித்து விடவே தலைவர் டூப்ரிக்கு நேரம் சரியாக இருக்கிறது.

வீடியோ எடுத்தவனை சிஸ்கோ பிடித்தானா, வீராட்டின் கொட்டத்தை அடக்கினானா என்பதுதான் காமிக்ஸின் கதை.

ஏஜெண்டைப் பொறுத்தவரை நல்லது கெட்டது எல்லாம் கிடையாது. தலைவர் சொல்லும் வேலையை செய்யவேண்டும் எனவே, இவர் நல்லவரா கெட்டவராக என சந்தேகத்துடன் படிக்காதீர்கள். கதை ரசிக்காது. ஏ கிரேட் காமிக்ஸ் என்பதால் வசனங்களை அதற்கேற்ப சிறப்பாக எழுதியுள்ளார் பிரசன்னா. கெட்டவார்த்தை வரும் இடங்கள், உடலுறவு காட்சிகளுக்கான வசனங்கள் என அதனதை அப்போக்கிலேயே எழுதியிருப்பது ரசிக்குமாறு உள்ளது.

சில இடங்களில் டயலாக் பாக்சையும் மீறி வசனங்கள் வெளியே சென்றுவிட்டன.

கதையும், காட்சியும்,வசனங்களும் சிறப்பாக உள்ளன. பரபரவென திரில்லர் கதையை படித்து முடிக்க சிஸ்கோவை எடுக்கலாம்.

அடிச்சு தூக்கு!

கோமாளிமேடை டீம்
 

கருத்துகள்