இணையத்தில் விளையாட்டு! - டேட்டா கார்னர்.

 

 

https://entrackr.com/wp-content/uploads/2018/09/dream11-1200x600.jpg
ட்ரீம்11

 

 

 

இந்தியாவில் 75 சதவீதம் பேர் இணையத்தில் உள்ள ஃபேன்டசி விளையாட்டுக்களை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை விளையாடுகின்றனர். இதில் 20% பேர் வாரத்திற்கு ஐந்துக்கும் மேற்பட்ட முறை விளையாடுகின்றனர். 

 85 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் ஆப் வழியாகத்தான் விளையாடுகின்றனர். 

வாரத்திற்கு மூன்று முறை விளையாடுபவர்களின் வயது 18-24, 25-36 என்ற வரம்பிற்குள் உள்ளது. 37-50 வயது கொண்டவர்கள் வாரத்திற்கு ஐந்துமுறைக்கும மேல் விளையாடுகிறார்கள். 

சாகசம் மற்றும் பொழுதுபோக்கிற்காக விளையாடுகிறோம்  என விளையாடுபவர்களில் 72 சதவீதம் பேர் சொல்லியிருக்கின்றனர். 

இணைய விளையாட்டுகளிலும் கோப்பை வென்று முதலிடத்தில் இருப்பது கிரிக்கெட்தான். 71 சதவீதம் பேர் போனிலும் கிரிக்கெட்தான் விளையாடுகிறார்கள். 54  சதவீதம்பேர் கால்பந்து விளையாடுகிறார்கள். பேஸ்கட்பால், ஹாக்கி எல்லாம் கடைசி பெஞ்சுக்கு சென்றுவிட்டன. 

ஐபிஎல்லில் சம்பாதித்து அந்த அணிக்கே ஜெர்சி ஸ்பான்சர் ஆகும் சாதனை செய்த ட்ரீம்11தான் 60 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளது. இதற்குப்பிறகு ப்ரீமியர் லீக் கால்பந்து, இங்க்லீஸ் ப்ரீமியர் லீக், ஐபிஎல் ஆகியவை வருகி்ன்றன. இவையே இப்போதைக்கு செல்வாக்கு பெற்ற இணைய விளையாட்டுகளின் பெயர்கள். 

TNIE





 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்