ஆயுதங்களால் ஜப்பான் அரசை வீழ்த்த திட்டம்போட்ட தந்திரமான சாமியார்! - ஓம் ஷின்ரிக்கியோ! பா.ராகவன்

 

 

 

 

 


https://www.pedestrian.tv/content/uploads/2018/07/aum-shinrikyo-fb.png
ஷோகோ அசஹாரா -  ஓம் ஷின்ரிக்கியோ

 

 

 

 

 

 ஓம் ஷின்ரிக்கியோ

பா.ராகவன்

ஜப்பானில் தொடங்கப்பட்ட பௌத்த - இந்து மத கலவைதான் ஓம் ஷின்ரிக்கியோ. ஷோகோ அசஹாரா என்பவர் இதன் தலைவர். இவருக்கு ஆன்மிகம் எல்லாம் நோக்கம் இல்லை. போர்தான் லட்சியம். அதை சொன்னால் காசு யார் கொடுப்பார்கள். எனவே ஆன்மிகத்தை கையில் எடுத்து வில்லாக வளைந்து யோகா சொல்லிக்கொடுப்பது போல டுபாக்கூர் வேலைகளை செய்து காசு சம்பாதித்தார். அதை வைத்து அவர் செய்த கொடூர செயல்கள்தான் நூலின் முக்கியமான பகுதி.

மதம், சாமியார் என்றால் ஆசிய நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கர்கள் கூட காசு பணத்தை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். காலில் விழுந்து யோசிப்பதை நிறுத்தி விடுகிறார்கள். ஜப்பானில் அப்படி அதிரடித்த சாமியார் ஒருவரின் கதை.

பா.ராகவனின் அசரடிக்கும் எழுத்து நடைதான் சாயியார் ஷோகோவை முக்கியமான மத தலைவராக நிலைநிறுத்துகிறது. மற்றவர்கள் கிண்டல் செய்யும் முன்னர் எழுத்தாளரே அவரை தக்காளிப்பழம் என்று அவரை கிண்டல் செய்கிறார். நடுத்தர வர்க்க குடும்பத்தில பிறந்தவருக்கு உலகை ஆளும் ஆசை பிறக்க, இந்தியா வந்து யோகா, தியானக்கலை பயில்கிறார்.

பின்னர். அதை வைத்தே வாழ்கையில் முன்னேறுகிறார். ஜப்பானில் அனைவரும் கவனிக்கும் மத நிறுவனத்தின் தலைவராகிறார். இதனை அரசு கூட அங்கீகரிக்கிறது என்பதுதான் நகை முரண். அன்றையை சூழல் அப்படி. இறுதியில் ரஷ்ய விஞ்ஞானிகளுடன் ரசாயன, உயிரியல் ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சி, ரசாயன ஆயுதங்களால் 5 ஆயிரம் பேர்களை கொலை செய்த கொடூரம் என அமைதியான மனதிற்குள் இத்தனை வன்முறையாக என நினைக்கவைத்த சாமியார் இவர். டைம் பத்திரிகையில் இவரது முகம் அட்டைப்படத்தில் வந்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சாதாரண சாமியார் உலகை ஆளும் ஆசை கொண்டு பேராசைப்பட்டால் என்னவாகும என்பதை வாழ்ந்து நமக்கு காட்டியிருக்கிறார் அசஹாரா.

சாமி - ஆசாமி

கோமாளிமேடை டீம்


கருத்துகள்