ரத்த இழப்பைத் தடுக்கும் வேதிப்பொருள் கண்டுபிடிப்பு!
cc |
ரத்த இழப்பைத் தடுக்கும் கண்டுபிடிப்பு
விபத்து நேர்ந்த பிறகு ஒருவரை அரும்பாடுபட்டு அவசர ஊர்தியில் மருத்துவமனை கொண்டு சென்றாலும் கூட அவரின் உயிருக்கு நேரும் ஆபத்து, ரத்த இழப்பு காரணமாகவே நடக்கிறது. ரத்தம் உறைதலை வேகப்படுத்தினால், ரத்த இழப்பை கட்டுப்படுத்தினாலே சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களை காப்பாற்றிவிடலாம்..
காயங்களின் வழியாக ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க, அதிலேயே பிளேட்லெட்ஸ் செல்கள் உண்டு. சிறிய காயங்களில் வெளியேறும் ரத்தம் என்றால் இந்த அமைப்பு காப்பாற்றுகிறது. அதிக ஆபத்தான நிலைகளில் பிளேட்லெஸ் சிறப்பாக செயல்படுமா என்பது கேள்விக்குறிதான். ‘’’இந்த ஆராய்ச்சியின் முக்கியமான நோக்கம், ஒருவருக்கு ஏற்படும் ரத்தக்கசிவை உட்புறமாக முடிந்தளவு தடுப்பதுதான். இதன்மூலம் ரத்த இழப்பு நிறுத்தப்படும். அவரை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றலாம்'’ என்கிறார் இந்த ஆராய்ச்சியின் மூத்த ஆராய்ச்சியாளரான சமீர் மித்ரகோத்ரி.
ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள வேதிப்பொருளை நேரடியாக ஊசி மூலம் அல்லதூ சலைன் பாட்டிலின் வழியாக பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் செலுத்தலா்ம். அவரின் ரத்த உறைதலை எளிதாக தடுத்து நிறுத்தலாம். இதன் பெயர் ஹேப்பி (Hemostatic Agents via Polymer Peptide Interfusion). இந்த பொருள், ரத்தத்திலுள்ள பிளேட்லெட்டுகளை ஊக்கப்படுத்தி ரத்த உறைதலை வேகமாக்குகிறது.
ஹேப்பி மருந்து, உடலில் செலுத்தப்பட்ட ஒரு மணிநேரத்தில் 97 சதவீத ரத்த உறைதலைத் தடுப்பதை எலிகளிடம் செய்த பரிசோதனையில் கண்டுபிடித்தார்கள். ‘’பெரும்பாலான விபத்துகளில் முதல் ஒரு மணிநேரத்தில் விபத்துக்குள்ளானவர் அதிகளவு ரத்தத்தை’ இழந்துவிடுகிறார். இதன் காரணமாக அவர்களைக் காப்பாற்றும் பணி மிகவும் சவாலாக மாறிவிடுகிறது.’’ என்கிறார் ஆராய்ச்சியாளர் யாங்செங் காவோ. இந்த ஆய்வு அறிக்கை சயின்ஸ் அட்வான்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஹேப்பி என்ற மருந்தை, வேறுவகை விலங்குகளுக்கு சோதிக்க முயன்று வருகின்றனர். இ்ச்சோதனை வெற்றி பெற்றால் மனிதர்களுக்கு சோதனைகள் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
தகவல்- New atlas
thanks dinamalar pattam
கருத்துகள்
கருத்துரையிடுக