மக்களைக் காக்க தன்னார்வலர்களாக உருவாகும் சூப்பர் ஹீரோ கூட்டம்! - கிக் ஆஸ் -2010

 

 

https://allhdwallpapers.com/wp-content/uploads/2015/04/kick-ass-6.jpg
கிக் ஆஸ்

 

 

 

கிக் ஆஸ்

Directed byMatthew Vaughn

Screenplay by

 Based on

Music by
CinematographyBen Davis



மார்வெல் தயாரித்துள்ள படம். கொஞ்சம் டிசி காமிக்சின் படங்களுக்கு எதார்த்தமாக வரும்படி உள்ளது. காமிக்ஸ்களை விரும்பி படிக்கும் டீனேஜ் பையன் தேவ். அவன் வாழும் பகுதியிலுள்ள குற்றங்களை தடுக்க நினைக்கிறான். பெரிதல்ல. வழிப்பறிக்கொள்ளை, குறிப்பிட்ட நபர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள். இதனை செய்யும்போது அவனுக்கு மேலும் இரண்டு சூப்பர் ஹீரோக்களின் உதவி கிடைக்கிறது. அவர்கள்தான் பிக் டாடி, அவரின் மகள் ஹிட் கேர்ள். கிக் ஆஸைப் பொறுத்தவரை தான் செய்துகொண்டிருப்பதை சீரியசாக எடுத்துக்கொள்ளாத ஜாலியான ஆள். ஆனால் பிக் டாடி நகரில் வாழும் குற்றவாளி பிளஸ் தொழிலதிபராக ஃபிராங்கை ஒழித்துக்கட்ட நினைக்கிறார். பிக் டாடி ஏன் இப்படி மாறினார், கிக் ஆஸ் உண்மையில் தான் என்ன செய்துகொ ண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தானா என்பதை ரத்தம் படம் பார்க்கும் நமது முகத்தில் தெறிக்க தெறிக்க சொல்லியிருக்கிறார்கள்.


Amazon.com: Watch Kick-Ass 2 | Prime Video
கிக் ஆஸ்

லெட் மீ இன் படத்திற்கு பிறகு மார்டெஸ்ஸின் வெறித்தனமான வேட்டையை ஹிட்கேர்ள் கதாபாத்திரத்தில் பார்க்கிறோம். அவர் பேசும் வசனங்களை யாரும் நினைத்தே பார்க்கமுடியாது. படத்தில் அவரது வயது 11. படப்பிடிப்பின்போது அவருக்கு வயது 12.

படம் முழுக்க தீவிரமான வன்முறையும், சகட்டுமேனிக்கு கெட்டவார்த்தைகளும் இறைக்கப்பட்டுள்ளன. ஹிட்கேர்ள் பேசும் வார்த்தைகளை தமிழில் மொழிபெயர்த்தால் பீப் சவுண்ட் இடைவிடாது கேட்கும்.

டெட்பூல் படத்தில் வன்முறையை அழகாக காட்டியிருப்பார்களோ அதே டோனில் படத்தை முழுவதும் எடுத்திருக்கிறார்கள். உச்சிமண்டையில் துப்பாக்கியால் சுடுவது, கட்டிவைத்து எரிப்பது, இடுப்புக்கு கீழே பேஸ்பால் மட்டை வைத்து அடிப்பது என வன்முறை காட்சிகள் ஏராளம். கிக் ஏஸ் டீனேஜ் சூப்பர்ஹீரோ படம் என்பதால் அடுத்தடுத்த பாகங்கள் வர வாய்ப்பிருக்கிறது.

சூப்பர் ஹீரோக்களுக்கான நல்ல விஷயங்கள் இதில் குறைவு. அவர்களிடம் கொள்ளையடித்து பணத்தை செலவழிப்பது, ஜீனில் ஊறும் அற்புத சக்தியை விட மனதால் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் நாயகர்கள்தான் இதில் உள்ளனர். அடுத்தடுத்த பாகங்களில் புதிய ஆட்கள் சேர்வார்கள். படத்தில் தேவையில்லாத பேச்சுக்களுக்கு இடமேயில்லை.ஃபிராங்க் செய்த பாவங்களை அவர் ரத்தத்தாலேயே கழுவுகிறார்கள். அதிலும் கிளைமேக்ஸ் சண்டை, ரத்தபூமிடா என சொல்ல வைக்கிறது.

நீதிக்கான ரத்தவெறியாட்டம்!

கோமாளிமேடை  
 thanks - wikipedia


சினிமா விமர்சனம், ஆங்கிலம், மார்வெல் காமிக்ஸ், வன்முறை, குற்றம், நீதி, சூப்பர்ஹீரோ

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்