இடுகைகள்

சோக உணர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாயின் கண்களிலுள்ள சோக உணர்வு, நீலநிறக்கண்களைக் கொண்ட குழந்தைகள்! உண்மையா? உடான்ஸா?

படம்
  நாயின் கண்கள் சோக உணர்ச்சி கொண்டது! உண்மையல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஓநாய்களிலிருந்து உருவாக்கப்பட்ட நாய்கள் மெல்ல வீட்டு விலங்காக மாறின. பரிணாம வளர்ச்சிப்படி,நாய்களுக்கு கண்களின் அருகில் தசைகள் உருவாகின. இதன் மூலம், நாய் மனிதர்களோடு எளிதாக தொடர்புகொள்ள முடிந்தது. மனிதர்களைப் பார்த்து புருவத்தை தூக்கும்போது, தசைகள் காரணமாக அதன் முகம் சோகமாக தெரிகிறது என 2019ஆம் ஆண்டு வெளியான புரோசீடிங் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸஸ்(Proceedings of the National Academy of Sciences)  ஆய்வு கூறியது.  பிறக்கும்போது, அனைத்து குழந்தைகளும் நீலநிற கண்களைக் கொண்டுள்ளனர்  உண்மையல்ல. ஆசிய, ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கண்கள் பழுப்பு நிறமாகவே இருக்கும். காகசியன் நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் பிறக்கும்போதே கண்கள் நீலநிறமாக இருக்கும். தோல், முடி ஆகியவற்றின் நிறத்தைத் தீர்மானிக்கும் மெலனின் என்ற நிறமியே கண்களின் நிறத்திற்கும் காரணம். இதை மெலனோசைட்ஸ் (melanocytes) என்ற செல்கள் உற்பத்தி செய்கின்றன. மெலனின் மற்றும் மரபணுக்களின் பங்கு கண்களின் நிறத்தை தீர்மானிக்கின்றன.   https://www.allabout