இடுகைகள்

வேட்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுயத்தை அழித்து காதலை அடையாளம் காண்போம் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
        தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம்   குழந்தைகளின் வளர்ப்புக்கு நிறைய பெற்றோர் பொறுப்பேற்று கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த பொறுப்பை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பது மாறுபடுகிறது. குழந்தைகள் எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது, அவர்கள் என்ன வேலையை செய்யவேண்டும் என பெற்றோர் தீர்மானித்துக் கூறுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் சமூகத்தில் முக்கியமான இடத்தை அந்தஸ்தை அடைய வேண்டுமென நினைக்கிறார்கள். இதற்குள்தான் அவர்கள் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை ஒரு பகுதியாக வைத்திருக்கிறார்கள். சமூகத்திற்கு பொருத்தமான மனிதர்களாக்க அவர்களை உருவாக்கி போர், முரண்பாடு, கொடூரங்களை செய்யும் விதமாக மாற்றுகிறார்கள். இப்படி பிள்ளைகளை வளர்ப்பதை அக்கறை, அன்பு என்று கூறமுடியுமா? ஒரு செடியை, விதையூன்றி வளர்க்க நாம் நிறைய விஷயங்களை செய்கிறோம். மண்ணைச் சோதித்து, மரக்கன்றை நட்டுவைத்து அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றுகிறோம். ஆனால் பிள்ளைகளை வளர்க்கும்போது, அம்முறையின் வழியாக  அவர்களை மெல்ல கொல்கிறோம். உண்மையில் நீங்கள் பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்கள் என்றால், உலகில் போர் நடைபெறக் கூடாது. நீங்கள் நேசிக