இடுகைகள்

கோவிஷீல்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோயிலிருந்து ஒருவரைக் காப்பாற்ற ஒரு டோஸ் தடுப்பூசி போதும்!

படம்
                      ஒரு டோஸ் போதும் ! இங்கிலாந்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான அமைப்பின் தலைவர் கேட் பிங்காம் , ஒரு முறை தடுப்பூசியை உடலில் செலுத்திக்கொண்டால் போதும் . அதுவே பெருந்தொற்றிலிருந்து ஒருவரைக் காப்பாற்றும் என்று கூறினார் . மருத்துவர் பால் ஸ்டோபில்ஸ் ஒருமுறை செலுத்திக்கொள்ளும் தடுப்பூசியை அவசியமானது என்று கூறியதோடு , இரண்டாவது பூஸ்டர் ஷாட்டை போட்டுக்கொள்வது கொரோனாவிலிருந்து ஒருவரைக் காக்கும் என்று கூறினார் . இருமுறை தடுப்பூசியை போடவேண்டுமென்று கூறிவந்த இந்தியா , இப்போது தடுப்பூசி இல்லாத நெருக்கடியில் ஒரு டோஸ் மட்டும்தான் மக்களுக்கு வழங்கி வருகிறது . மருத்துவமனைகளிலும் கூட இரண்டாவது டோஸை இல்லையென்று சொல்லிவரும் நிலை உள்ளது . ட்விட்டரில் இதுதொடர்பாக விவாதங்கள் நடந்தன . இறுதியாக நிதி ஆயோக்கின் உறுப்பினரான டாக்டர் விகே பால் கோவிஷீல்டு மருந்து மக்களுக்கு இரண்டு டோஸாக வழங்கப்படுவது உறுதி . அதில் மாற்றமில்லை என்று கூறியிருக்கிறார் . இங்கிலாந்தில் முதலில் தடுப்பூசியை ஒருமுறை மட்டுமே வழங்க ஏற்பாடானது . அப்போதைய நிலையில் ஏராளமான உயிர்கள் பறிபோய்கொண்டிருந்தன