இடுகைகள்

ஸ்காட் வி எட்வர்ட்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பறவைகள் இல்லாத உலகை கற்பனை செய்யவே முடியாது! - ஸ்காட் வி எட்வர்ட்ஸ்

படம்
  நேர்காணல் ஸ்காட் வி எட்வர்ட்ஸ் பேராசிரியர், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா. பேராசிரியர் ஸ்காட், பரிணாம உயிரியல் துறையில் பணியாற்றுகிறார். பரிணாம வளர்ச்சியில் பறவைகளின் இயல்பு பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  பல்லுயிர்த்தன்மையில் பறவைகள் எந்தளவு முக்கியமானவை? அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள பிராங்க்ஸ் நகரில் தான் வளர்ந்தேன். பத்து வயதிலிருந்தே, அங்குள்ள நிறைய மரங்கள், அதில் வாழ்ந்து வந்த பறவைகள் மீது ஈடுபாடு உருவானது. 10 ஆயிரம் இனங்களுக்கு மேல் பறவைகள் கண்டறியப்பட்டுள்ளதால் அவற்றை ஆய்வு செய்வதும் எளிது. பிற விலங்கினங்களை விட பறவைகளின் சூழலியல் மற்றும் அதன் வாழ்க்கை இயல்புகளை அறிவது எளிது.  காலநிலை மாற்றத்தை பறவைகள் எப்படி சமாளிக்கின்றன? தற்போது, பறவைகளுக்கு நிறைய சவால்கள் உள்ளன. அதில் முக்கியமானது, வாழிட இழப்பு. மனிதர்கள் காடுகளை பெருமளவில் அழித்துவிட்டதால், பறவைகள் வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. இந்தியாவின் அரணாக உள்ள இமாலயத்தில், சில தனித்துவமான பறவைகள் வாழ்கின்றன. காலநிலை மாற்றத்தால் அவற்றின் வாழிடமும் சுருங்கினால், அவையும் அழிந்துவிடும். வேட்டையாடல், பறவைகளை செல்லப்பறவைகளாக வளர்