மனிதர்கள் இல்லாத சூழலில் உயிர்பிழைத்து வாழுமா நாய்கள்?

மனிதர்கள் இல்லாத உலகம் ஓடிடிகளில், இணையத்தில் உள்ள மனிதர்கள் பலரும், உலகம் அழியும் சூழலில் மனிதர்கள் எப்படி பிழைப்பது என யோசித்து வருகிறார்கள். இதைப்பற்றி நாவல், சிறுகதை, குறும்படம், வெப்தொடர், திரைப்படம் என படைப்புகளை எடுத்துவருகிறார்கள். நோயோ அல்லது அணு ஆயுதங்கள் கொண்ட போராலோ மக்கள் பேரழிவை சந்தித்து மீண்டும் உலகில் வாழத் தொடங்குவதுதான் கதை. இந்த மையப்பொருளை அப்படியே மனிதர்கள் இல்லாத உலகில் விலங்குகள் குறிப்பாக நாய்களை வைத்து யோசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும்? பல்லாண்டுகளுக்கு முன்னரே வீட்டு விலங்கான நாய், மீண்டும் காட்டுக்குத் திரும்பி உணவுக்காக வேட்டையாட முடியுமா, மனிதர்கள் துணையில்லாமல் தன்னைக் காத்துக்கொள்ளுமா என்ற கேள்வி முக்கியமானது. இதே கேள்வியை பூங்காக்களில் உள்ள மனிதர்களைக் கேட்டால், அது சாத்தியமே இல்லை என்று கூறி காரணங்களை அடுக்குவார்கள். ஆனால், அது அவர்கள் பார்வைக் கோணத்தில் சரியாக இருக்கலாம். முழுக்க உண்மையல்ல. தொடக்கத்தில் சில நாய் இனங்கள் இப்படி தடுமாறினாலும், விரைவில் சூழலுக்கு ஏற்ப தன்னை பொருத்திக்கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். காட்டுக்குள