நாய் எழுப்பும் ஒலிக்கு என்ன அர்த்தம்?

 








நாய் எழுப்பும் குரைப்பொலி பற்றிய விளக்கங்கள் இதோ…..

தொந்தரவு செய்யாதே

வீட்டுக்கு முன் செல்பவர், காலிங்பெல்லை அழுத்துபவர், சைக்கிளில் செல்பவர் என யார் சென்றாலும் ஒலி, ஒளி தென்பட்டாலும் நாய் உடனே குரைக்கத் தொடங்கும். குரைக்கும் தொனி, எதிராளி வீட்டின் கதவுக்கு அண்மையில் இருக்கிறாரா, தூரத்தில் இருக்கிறாரா என்பதைப் பொறுத்து மாறுபடும். கதவை ஒருவர் தட்டி திறக்க முயல்கிறார் என்றால் நாயின் குரைப்பொலி கடுமையாக மாறும். உரிமையாளரை தீர்க்கமாக எச்சரிக்கும் ஒலி இதுவே.

வேட்டை மன்னன்

தபால்காரர் வீட்டுக்கு வருகிறார் அல்லது நாயின் சக நாயினங்கள் ஒன்றாக இணைந்து மகிழ்ந்து ஒலி எழுப்புகின்றன என்றால் நாய் , இவ்வகையிலான ஒலியை எழுப்புகிறது. குரைப்புக்கும்,, ஊளைக்கும் இடையில் அமைந்த ஒலி.

முனகல் ஒலி

அப்பப்பா என முனகிக்கொண்டே வயதானவர்கள் கீழே உட்காருகிறார்கள் அல்லவா? அதுபோலவே அமைந்த முனகல் ஒலி. வயதான நாய், ஏதாவது இடத்திற்கு சென்றுவிட்டு வந்து சோபாவில் ஏறி உட்காரும்போது இப்படி முனகும்.

நீங்கள் நாய் தள்ளிவிட்ட பந்தை எடுக்காமல் கணினியைப் பார்க்கும்போது அல்லது அதற்கு போதிய கவனம் கொடுக்காதபோது சற்று வேறுவிதமாக முனகல் ஒலியை உருவாக்குகிறது. இந்த ஒலி நிற்காமல் வந்தால் நாய்க்கு ஏதோ பிரச்னை என புரிந்துகொண்டு அதற்கு சிகிச்சை அளிப்பது முக்கியம்.

கவனம் ப்ளீஸ்

நாய் வாயைத் திறக்காமல் முனகும் விசித்திரமான கெஞ்சல் ஒலி. தன்னை வெளியே செல்ல அனுமதிக்காதது, பயம், பதற்றம், விரக்தி ஆகியவற்றை இந்த முறையில் வெளிப்படுத்துகிறது.

 நானும் ஓநாய்தான்.

வேட்டை விலங்கை பிடித்து விட்ட மகிழ்ச்சி, எதிரி உள்ளே நுழைவதை தெரிவிப்பது, வலி, பதற்றம் ஆகியவற்றை வெளிப்படுத்த நாய்கள் ஊளையிடுகின்றன. சைபீரியன் ஹஸ்கி, அமெரிக்க எஸ்கிமோ நாய், ஷெட்லாண்ட் ஷீப் டாக், அலாஸ்கன் மலாமுட் ஆகிய நாயினங்கள் ஊளையிடுவது ஓநாய்களுக்கு இணையானதாக இருக்கும்.

நன்றி

பாப்புலர் சயின்ஸ் இதழ்

படம் - பின்டிரெஸ்ட் 

கருத்துகள்