ஆட்டு மந்தைகளைக் கட்டுப்படுத்தி மேய்க்கும் புத்திசாலி நாய்!

 




பார்டர் கோலி நாய் இனம்



டெப் பைலே, இசைக்கலைஞராக இயங்கி வருபவர். இவரின் அப்பா, உளவியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர. தனது அப்பா மூலம் பார்டர் கோலி என்ற இன நாய் ஒன்றை டெப் பெற்று வளர்த்து வந்தார். இந்த நாய், ஆட்டுக்கூட்டங்களை வழிநடத்துவதற்காக விவசாயிகளில் வளர்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்து நாட்டில் பார்டர் கோலி நாயினம் விவசாயிகளிடையே மிகவும் பிரபலம்.  

இந்த நாயினம் எப்போதும் உற்சாகத்தோடு இயங்க கூடியது. அதிகம் சலிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். இதற்கென விளையாட்டுகளை சொல்லிக்கொடுத்து அதை உற்சாகத்தோடு வைத்திருக்கலாம்.

டெப் பைலே வளர்த்த பார்டர் கோலி நாய்க்கு, சேசர் என்று பெயர். இந்த நாய்க்கு ‘உட்கார்’ அல்லது ‘அமைதியாக இரு’ என்றாலோ புரிவதில்லை. ஆனால், ‘அமைதியாக இரு’, ‘ஹாலுக்குப் போ’ என்று கூறினால் புரிந்துகொள்ள முடிந்தது. அதேநேரம் சில பொருட்களை நினைவுபடுத்தி அதை எடுத்து வா என்றால், எடுத்து வந்தது. அதிகம் எதிர்பார்க்காதீர்கள். இரண்டரை வயது குழந்தையின் புத்திசாலித்தனத்தை சேசர் கொண்டிருந்தது.

உலகிலேயே சொற்கள், வார்த்தைகள், அதற்கான பொருள் என கற்றுக்கொள்வதில் மனித இனமே தேர்ந்த திறன் கொண்டவர்கள். நாய்கள் கட்டளைகள் சிலவற்றை பணிந்து செய்யலாம். அதை முழுமையாக புரிந்துகொண்டு செய்கிறதா என்றால் இல்லை. பந்தை கையில் எடுத்து காட்டி, வீசி எறிந்து எடுத்து வா என்றால் அதை செய்வது எளிது. ஒரு பொருளை மறைத்துவைத்துவிட்டு அதை தேடி எடு என்றால் நாய் எளிதாக விரக்திக்கு உள்ளாகும்.புரிந்துகொள்ள படாதபாடு படும்.  

பார்டர் கோலி நாயினம், ஆட்டு மந்தைகளை பாதுகாக்கும் பணியில் உதவுபவை. ஆடுகளுக்கு தனித்தனி பெயரை வைத்து விவசாயிகள் அழைக்கும்போது அதை அவை நினைவில் வைத்துக்கொள்கின்றன. எனவே, குறிப்பிட்ட பெயரை உச்சரிக்கும்போதே அந்த ஆட்டை நாய் அடையாளம் கண்டுவிடுகிறது. இதுவே இதன் சிறப்பம்சம்.

கட்டளைகளை செயல்படுத்துவது, கட்டுப்பாடாக பணிவது என்ற விதிகளை வைத்துப் பார்த்தால் பார்டர் கோலி நாயினமே பட்டியலில் முதலில் இருக்கும். ஏனெனில் ஆட்டு மந்தைகளை கட்டுப்படுத்துவது, தனியாக போன ஆடுகளை கூட்டி வருவது, தனித்தனி குழுக்களாக பிரிப்பது ஆகிய வேலைகளை பார்டர் கோலி நாய் செய்கிறது. உண்மையில் இதற்கு சற்று புத்திசாலித்தனம் தேவை அல்லவா? கட்டளைகளை ஏற்று செய்வதில் பின்தங்கியுள்ள கடைசி நாயினம் என ஆஃபகன் ஹவுண்டைக் கூறலாம். வலிமையான நாயான பீகல், வாசனையை பின்தொடர்ந்து கண்டறிவதில் திறன் பெற்றது. இந்த நாயினம் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது இல்லை. புத்திசாலித்தனம் என்ற விஷயத்தில் குறைவு என்றாலும் வலிமையானது.  

நன்றி

பாப்புலர் சயின்ஸ் இதழ் 

image 

kennal club


கருத்துகள்