விலங்குகளின் புத்திசாலித்தனம் பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்து வருகிறதா?

 







பகுதி 2

விலங்குகளின் மனம் எப்படி இயங்குகிறது?

மனிதர்கள் ஐம்புலன்கள் வழியாக ஒன்றை அறிந்து அதன் படி செயல்படுவது குறைந்துவிட்டது. காரணம், அவர்கள் ஐம்புலன்களை விட மூளையை பயன்படுத்துகிறார்கள். இதன் வழியாக கருவிகளை உருவாக்க முடிந்தது. தேனீ, தான் பறக்கும் இடத்தில் உள்ள காந்தப்புலத்தை உணர்கிறது. தனது கூட்டை எளிதாக கண்டறிந்து திரும்பச்செல்கிறது. இதை மனிதர்கள் ஜிபிஎஸ் கருவி இல்லாமல் செய்ய முடியாது.

கைதிகளை சிறையில் பல்வேறு அறைகளில் அடைத்து வைத்திருப்பார்கள். அதுபோலத்தான் மனிதர்கள், விலங்குகள் ஆகிய இரண்டு இனத்தின் மூளையின் செயல்பாடும் உள்ளது. செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டும் பெரிதும் வேறுபட்டது.

1974ஆம் ஆண்டு தத்துவவாதி தாமஸ் நாகல்,வௌவாலாக இருப்பது எப்படி என புகழ்பெற்ற கட்டுரையை எழுதினார். இவர், அமெரிக்க தத்துவ வல்லுநர்.வௌவால் குகையில், மரத்தில் தொங்கும்போது அதன் மனதில் என்னவிதமாக கற்பனைகள் தோன்றும் என விளக்கி எழுதியிருந்தார். அது மனிதர்களை எப்படி பார்க்கிறது என விளக்கப்பட்டிருந்தது.

அறிவியல் ரீதியாக வௌவாலைப் பார்ப்பது வேறு, அதன் வாழ்க்கையை அப்படியே புரிந்துகொண்டு உணர்வது வேறு. இரண்டுக்குமே வேறுபாடுகள் உண்டு. ஆனால், சில அறிவியலாளர்கள் தாமஸின் கருத்தை சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினர்.

அதில் ஒருவர் சார்லஸ் ஃபாஸ்டர். இவர், 2016ஆம் ஆண்டு ’ பீயிங் எ பீஸ்ட்’ என்ற நூலை எழுதினார். கல்வியாளரும், வழக்குரைஞருமான சார்லஸ், ஐந்து விலங்குகள் போல வாழ்ந்து பார்க்க முடிவு செய்தார். தனது வீட்டின் பின்புறம் நரி போல வாழ முயன்றார். உணவின்றி, குடிநீரின்றி எந்த இடத்தில் இருந்தாரோ அங்கேயே சிறுநீர் பெய்து, மலம் கழித்து வாழ்ந்து பார்த்தார்.  பிறகு, மலையோரம் அருகே வளை தோண்டி எலி போல வாழ்ந்து  தன்னைத்தானே சோதனை செய்துகொண்டார். இந்த சோதனையில் இவரது மகனும் கூடவே இருந்தார். இப்படி செய்த அதீத முறை சோதனைகள் வழியாக விலங்கினங்களை சகோதர தன்மையுடன் அணுகுவதை மனதளவில் உணர்ந்திருக்கிறார். ஆனாலும் இந்த சோதனை முறை சற்று அதீத சுய வருத்திக்கொள்ளும் தன்மை கொண்டது. இதை அனைவரும் பின்பற்றுவது கடினம்.

ஒருவகையில் விலங்குகளும் மனிதர்களும் பூமியில் ஒரு அங்கம்தான். அவர்கள் விருந்தினர் போல வந்துவிட்டு செல்பவர்கள் அல்ல. அதை மை ஆக்டோபஸ் டீச்சர் என்ற ஆவணப்படத்தை எடுத்த ஃபாஸ்டர் உறுதியாக நம்புகிறார். இவர் நம்புகிற விஷயத்தை மனிதர்கள் பலரும் நம்பத் தயங்குகிறார்கள். ஏனெனில், ஏற்கெனவே பூமியில் உள்ள விலங்கினங்கள் அழியத்தொடங்கிவிட்டன. இனி நடைபெறும் செயல்பாடுகள் என்பவை மனிதர்களின் அழிவுக்கானவை. காலநிலை மாற்றம்  மூலம் மனித குலம் பின்விளைவுகளை எதிர்கொள்ள தொடங்கிவிட்டது. பூமியில் புற்றுநோய் வளரத் தொடங்கிவிட்டது. இதன் வளர்ச்சிக்கென எந்த கட்டுப்பாடும் இல்லை. எனவே, பூமி எளிதாக அழிக்கப்படலாம்.

பூமியில் ஏற்படும் பாதிப்புகளை அடையாளம் கண்ட டெக் வல்லுநர்கள். பூமியைத் தவிர்த்து வேறு கிரகங்களில் சென்று வாழ்வதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர். 2002ஆம் ஆண்டு ஸ்பேஸ்எக்ஸ் என்ற நிறுவனத்தை எலன் மஸ்க் தொடங்கினார். செவ்வாயில் குடியேறுவதே அவரின் லட்சியம். இதற்கெனவே இந்த ராக்கெட் நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்னும் சிலர் உடலை பூமியில் விட்டுவிட்டு மனது மட்டும் தனியாக பிரிக்கப்பட்டால் மனிதர்களுக்கு மரணமே கிடையாது என கூறி வருகின்றனர்.

கேட்பதற்கு அதிநவீன அறிவியல் திரைப்படம் போன்ற தன்மையில் இருந்தாலும் இதன் பின்னணியில் இருப்பது ஆதிகால மனிதனின் மனம்தான். அதிலுள்ள வாழவேண்டுமே என்ற பதற்றம்தான் இதுபோல சிந்தனைகள் உருவாக்கப்படுவதற்கு காரணம்.

வரலாற்று முந்தைய காலகட்டத்தில் ஆவிகள், தேவதைகள், கடவுள், சாத்தான் என ஏராளமான கதைகள் உண்டு. இவற்றுக்கு இடையில் நடுவில் மனித இனம் பிழைத்திருந்தது. இப்படி கதைகளை உருவாக்கும்போது உலகில் மனிதர்கள் மட்டுமே தனித்திருக்கும் உண்மை மறைந்துவிடுகிறது. மத்திய கால ஐரோப்பாவில் கூட கிறித்தவ, கிரேக்க தத்துவங்களில் இதுபோல மாய உயிரினங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. முதலில் பூமியில் உள்ள அதி சக்திவாய்ந்த உயிரினங்கள், ஆவிகள், மனிதர்கள் பற்றிய பேசிய நாம் இப்போது விண்வெளியில் உள்ள வாழும் என நம்புகிற வேற்றுகிரகவாசிகள் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். கதைகளை உருவாக்கி வருகிறோம்.

உண்மையில் நாம் ஆக்டோபஸ் போன்ற கடல் உயிரினம் மனிதர்களை தாண்டிச் செல்லும் புத்திசாலித்தனம் கொண்டிருந்தால், விண்வெளியை ஆராய வேண்டிய அவசியமில்லை. இதுபற்றி எலிசபெத் ஜேக்கப் என்ற சிலந்தி ஆராய்ச்சியாளர், ‘’நாம் வேற்றுகிரக வாசிகள் பற்றி ஆராயவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நம் கூடவே அருகில் வாழும் விலங்குகளை ஆராய வேண்டியவையான ஒன்றாக உள்ளது. மனிதர்களோடு ஒப்பிடும்போது வேறுபட்டவையாக உள்ளன’’ என்று கூறினார். ஒருவகையில் மனிதர்களோடு ஒத்த மூளை திறன் கொண்ட உயிரினங்கள் உள்ளன என்று கூறுவது மனிதர்களுக்கு சற்று பதற்றம் தணிக்கும் செயல்தான். ஏனெனில், அறிவுத்திறனில் அவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என நினைத்துக்கொண்டிருந்த கருத்து இனி பயன்படாது.

 

 

தி கார்டியன் வீக்லி

ஆடம் கிர்ச்

image - pinterest

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்