ஓப்பன் மைண்ட்ஸ் 2023 - மீனா கந்தசாமி, தில்ஜித் தோசன்ஜி, வினோத்குமார் சுக்லா
கவிஞர் மீனா கந்தசாமி |
எழுத்தாளர் வினோத்குமார் சுக்லா |
ஓப்பன் மைண்ட்ஸ்
2023
தில்ஜித்
தோசன்ஜி
39
பாடகர், எழுத்தாளர்,
பாடலாசிரியர்
இன்ஸ்டாகிராமில்
பதினைந்து மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ள கலைஞன். பஞ்சாபி இசையை பிராண்டிங் செய்து
உலகம் முழுக்க கொண்டு சென்றுவருகிறார். பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்றபோது, மேடையில்
பேசிய செயலாளர் ஆன்டனி பிலிங்கன், “”தோசன்ஜியின் பாடல்களுக்கு நாங்கள் நடனமாடிக்கொண்டு
இருக்கிறோம்” என புகழ்ந்து பேசினார். கோச்செல் இசைவிழாவில் பஞ்சாபி மக்களின் உடைகளை
அணிந்து கொண்டு பாடல்களை பாடி நடனமாடி அசத்தினார். இந்தி திரைப்பட உலகில் நிறைய படங்கள்
நடித்தாலும் அவரை கவனிக்க வைத்தது உட்டா பஞ்சாப் என்ற படம்தான். இந்தி திரைப்படங்களைக்
கடந்து தனியிசை பாடல்கள் மூலம் பெரிய கவனம் பெற்றவர், பஞ்சாபி மொழி படங்களிலும் தொடர்ச்சியாக
நடிக்கிறார்.
ஜூட் அந்தாணி
ஜோசப்
40
திரைப்பட
இயக்குநர், மலையாளம்.
2018 எவரி
ஒன் இஸ் ஹீரோ என்ற படத்தை எடுத்தார் ஜோசப். இயற்கை பேரிடரை அடிப்படையாக வைத்து படத்தை
உருவாக்கி வெற்றி பெற்றவர்கள் உலகளவில் குறைவு. இவரது படம், கேரளத்தில் மட்டுமே
200 கோடி வசூலைப் பெற்றுள்ளது. வசூலுக்காக மட்டும் அல்ல. படம் விமர்சகர்களையும் திருப்தி
செய்திருந்தது. 2018ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பை படமாக்க முடிவு செய்த ஜோசப், அந்த சம்பவங்களில்
உள்ளே இருந்த மனிதநேய பக்கங்களை படத்தில் காட்டியிருந்தார். பிராந்திய வேறுபாடுகள்,
சூழல் பிரச்னைகள் ஆகியவற்றோடு உயிர் பிழைத்தவர்களின் மீதான கருணை என்பதை படத்தில் சிறப்பாக
வெளிப்படுத்தியிருந்தார். அதனால்தான் படம் மொழி வேறுபாடுகளைக் கடந்து பிற மாநிலங்களிலும்
டப் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.
ஆன்ஞ்சல்
மல்ஹோத்ரா
33
இந்தியா பாகிஸ்தான்
பிரிவினை என்பது நடந்து முடிந்துவிடவில்லை. தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது என
நம்புகிற வரலாற்று எழுத்தாளர். இவர் மெட்டீரியல் மெமரி என்ற பெயரில் டிஜிட்டல் அருங்காட்சியகம்
ஒன்றை உருவாக்கியுள்ளார். இதில் பிரிவினை தொடர்பான பல்வேறு பொருட்களை சேகரித்து காட்சிபடுத்தியுள்ளனர்.
அண்மையில் ‘தி புக் ஆஃப் எவர்லாஸ்டிங் திங்க்ஸ்’ என்ற வரலாற்று நாவலை எழுதியுள்ளார்.
இதற்கு முன்னர் ‘ரெம்னன்ட்ஸ் ஆஃப் எ செபரேஷன்’, ‘இன் தி லாங்குவேஜ் ரிமம்பரிங்’ என்ற
இரு நூல்களை எழுதியுள்ளார்.
சாத்விக்சாய்ராஜ்
ராங்கிரெட்டி
சிராக் ஷெட்டி
22,25
பாட்மின்டன்
வீரர்கள்
தனி வீரராக
பாட்மின்டன் விளையாடுபவர்களை வெற்றியை குவிப்பவர்களை பார்த்திருப்போம். ஆனால், சாத்விக்கும்.
சிராக்கும் ஒன்றாக இணைந்து இரட்டையர் போட்டிகளில் அசத்துகிறார்கள். அண்மையில் மலேசியா
நாட்டுக்கு எதிரான போட்டியில் வென்று ஆச்சரியப்படுத்தினார்கள். காமன்வெல்த் போட்டியில்
தங்கம் வென்றவர்கள் ஒலிம்பிக் போட்டியில் பாட்மின்டன் இரட்டையர் பிரிவில் தங்கம் வெல்ல
உழைத்து வருகிறார்கள்.
நிகாத் ஸரீன்
27
குத்துச்சண்டை
வீரர்
குத்துச்சண்டை
என்றால் மேரிகோம் என்று சொன்னவர்கள், இப்போது நிகாத்தின் பெயரை உச்சரிக்கிறார்கள்.
தெலுங்கானவைச் சேர்ந்த நிகாத், முதலில் பயிற்சி பெறும்போது ஆண்களுடன்தான் மோதிக்கொண்டிருக்கும்
நிலை. பெண்கள் அந்தளவு குத்துச்சண்டை மீது ஆர்வம் காட்டவில்லை. நிகாத் அதை மாற்றியுள்ளார்.
வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், பிறகு காமன்வெல்த் போட்டியில் தங்கம் என
தொடர்ந்து வெற்றியைக் குவித்து வருகிறார். நிஜாமாபாத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரரான
நிகாத்தை நம்பிக்கையுடன் பள்ளியில் உள்ள குத்துச்சண்டை பயிற்சியாளர் தேர்ந்தெடுத்து
நம்பிக்கை அளித்து பயிற்சி கொடுத்தார். அதன் பயனாக நிகாத் இன்று பலருக்கும் ரோல் மாடலாக
உருவாகி இருக்கிறார்.
மீனா கந்தசாமி
38
கவிஞர், மொழிபெயர்ப்பாளர்
பெண்ணியத்தை
கவிதை, கட்டுரை, நாவல் என பரப்பும் எழுத்தாளர் மீனா கந்தசாமி. அண்மையில் ‘இன்பத்துபால்’
என்ற கவிதை நூலை எழுதியிருக்கிறார். ஏறத்தாழ இது பெண்ணிய பார்வையில் அமைந்த நூல். தனது
நூல்களில், நேரடியான பேச்சுகளில் பெண்ணியம, அரசியல் ஆகியவற்றை ஆழமாக விதைத்து பேசும்
மீனா கந்தசாமி, பெண்ணிய எழுத்தாளர்களில் தவிர்க்க முடியாதவர்.
வினோத் குமார்
சுக்லா
86
எழுத்தாளர்
சத்தீஸ்கர்
மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர். சிறுகதை, கவிதைகளை மேஜிக்கல் ரியலிச கொள்கை அடிப்படையில்
எழுதி வருகிறார். 2023ஆம் ஆண்டு பென்/நபோகோவ் உலக இலக்கிய பரிசை வென்றார். இவரது ‘நவ்கர்
கி கமீஸ்’ என்ற நாவலை இயக்குநர் மணி கௌல் திரைப்படமாக எடுத்தார். வேளாண்மை முதுகலைப்படிப்பு
படித்தவர், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றிய கதைகளை அதிகம் எழுதுகிறார். கஜ்னன்
மாதவ் முக்திபோத் என்ற கவிஞரை தனது ரோல்மாடலாக வைத்து எழுதி வருகிறார்.
ஓப்பன்
10 ஜூலை
2023
கருத்துகள்
கருத்துரையிடுக