கோடைக்கால வாசிப்புக்கான ஆங்கில கட்டுரை நூல்கள்!
அவசியம் வாசிக்கவேண்டிய
கட்டுரை நூல்கள் 2023
கோடைக்கால
ஸ்பெஷல்
யாரி
ஆந்தாலஜி
ஆன் ஃபிரண்ட்ஷிப் பை வுமன் அண்ட் குயிர் ஃபோல்ஸ்
தொகுப்பு
ஷில்பா பட்கே,
நிதிலா கனகசபை
தெற்காசியாவைச்
சேர்ந்த 95 பங்கேற்பாளர்கள் பெண்கள், பால்புதுமையினர் பற்றி எழுதியிருக்கிறார்கள்.
நூலில் கதை, கட்டுரை, கவிதை, காமிக்ஸ் என பல்வேறு எழுத்து வடிவங்கள் உள்ளன. இவற்றின்
வழியாக நட்பு, அது எப்படி உருவாகிறது, அதை நல்ல முறையில் எப்படி பராமரிப்பது என பல்வேறு
விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது.
ஷாடோஸ் அட்
நூன் – தி சவுத் ஆசியன் ட்வென்டித் சென்சுரி
ஜோயா சட்டர்ஜி
இந்தியா,
பாகிஸ்தான், வங்கதேசம் என மூன்று நாடுகளின் வரலாறு, அதன் அரசியல், உணவு என பல்வேறு
விஷயங்களை விரிவாக பேசுகிறார். மூன்று நாடுகளும் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு எப்படி
தங்களை தகவமைத்துக்கொண்டன என்பதை நூல் விளக்குகிறது.
எம்பயர்
இன்கார்பரேட்டட்
பிலிப் ஜே
ஸ்டெர்ன்
பிரிட்டிஷார்
ஆட்சி செய்த நாடுகளில் பெரு நிறுவனங்களை உருவாக்கி வணிகம் செய்தனர். வரலாற்று ஆய்வாளர்,
பிரிட்டிஷ் அரச வம்சமே காலனி நாடுகளில் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி திட்டம் தீட்டி
அதன் வழியாக பொருளாதாரம் அதிகாரம் ஆகியவற்றை அடைந்தனர் என ஆதாரங்களோடு கூறுகிறார்.
1980ஆம் ஆண்டு அயர்லாந்து, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் பெரு நிறுவனங்கள் தோன்ற தொடங்கிவிட்டன.
இதற்கு தேவையான முதலீடுகளை பிரிட்டிஷ் அரச வம்சமும், தொழிலதிபர்களும் அளித்தனர் என்பதை
நூல் விளக்குகிறது.
வாஜ்பாய்
அபிஷேக் சௌத்ரி
இரண்டு பகுதிகளாக
பிரிக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் சுயசரிதை. வாஜ்பாய் பிறந்து அடுத்த ஆண்டோடு நூறாண்டு
ஆகப்போகிறது. அவரைக் கொண்டாடும் விதமாக வந்துள்ள நூல். ஆர்எஸ்எஸ் அமைப்பின் வளர்ச்சி,
அதோடு தொடர்பு கொண்டிருந்த வாஜ்பாய் பற்றியும் அவரின் சிந்தனை மாற்றத்தையும் நூலாசிரியர்
தன்னம்பிக்கையோடு பேசுகிறார். குங்குமத்தில் டி ரஞ்சித்தே இந்த நூல் பற்றி விரிவாக
எழுதிவிட்டார் என்பதால் இதை மேற்கொண்டு துப்பு துலக்கி விளக்குவது சரியாக இருக்காது.
மஞ்சுநாத்
டு மஞ்சம்மா – தி இன்ஸ்பிரேஷன் லைஃப் ஆஃப்
எ டிரான்ஸ்ஜென்டர் ஃபோல்க் ஆர்டிஸ்ட்
பி மஞ்சம்மா
ஜோகதி, ஹர்ஷா பட்
கர்நாடக ஃபோல்க்
அகாடமியின் தலைவராக இருக்கும் மஞ்சம்மா எப்படி டிரான்ஸ்ஜென்டர் கலைஞராக மாறினார் என்பதை
விவரிக்கிறது நூல். மாற்றுப்பாலினத்தவராக சமூகம் தன்னை அங்கீகரிக்க போராடி வரும் நபராக
தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்னைகள், போராட்டங்கள், தற்கொலை முயற்சி என சுயசரிதம்
படிக்கும்போது வாசகர்கள் பீதிக்கு உள்ளாவார்கள்.
இந்து ஆங்கிலம்
கருத்துகள்
கருத்துரையிடுக