செயலில் நேர்மையாக இருந்து வெற்றிகண்ட பெருநிறுவன வழக்குரைஞர்! - நயனா மொட்டம்மா

 




நயனா மொட்டம்மா



நயனா மொட்டம்மா - கர்நாடக சட்டமன்றத்தொகுதி எம்எல்ஏ


நயனா மொட்டம்மா

கார்ப்பரேட் வழக்குரைஞராக இருந்து எம்எல்ஏ வாக மாறியவர்

கர்நாடக மாநிலத்தின் முடிகெரே தொகுதியில் மொட்டம்மா வெல்லுவார் என யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். மால்நாடு, சிக்மகளூர் என இரு புகழ்பெற்ற பகுதிகளின் செல்வாக்கும் இங்கு உண்டு. இந்த பகுதியில் 1978ஆம்ஆண்டு இந்திராகாந்தி போட்டியிட்டு வென்று பிறகு தேசிய அரசியலில் வெற்றி பெற்றார்.

மொட்டம்மா 2015ஆம் ஆண்டு தொடங்கி அரசியலில் இருக்கிறார். இந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இவரை வீழ்த்த தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அதைப்பற்றியெல்லாம் மொட்டம்மா கவலையே படவில்லை. 

அதே படங்ளை தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து பெண்களை உடைகளை கொண்டு தீர்மானிக்க கூடாது என முகத்தில் அறைந்தது போல பதிவுகளை இட்டார். கர்நாடகாவின் 224 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து பெண்களில் மொட்டம்மாவும் ஒருவர். 1957ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை அங்கு போட்டியிட்ட பெண்களின் எண்ணிக்கை 224 என்ற அளவுக்கு கூட உயரவில்லை.

மொட்டம்மா வென்றது பலருக்கும் ஆச்சரியமாகவே இருக்கும். ஏனெனில் அவர் தனது செயலில் நேர்மையாக இருந்தார். பிரசாரத்திற்கு தன்னுடைய டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் போய் இறங்கினார். பலரும் சாதாரண காரில் சென்று இறங்கி பிரசாரம் செய்ய வலியுறுத்தினார்கள். ஆனால் மொட்டம்மா அதைப்பற்றியெல்லாம் கவலையே படவில்லை. மக்களிடையே பிரசாரம் செய்வதற்கு பதில் தன்னுடைய தொகுதியில் ஏராளமான விளையாட்டு போட்டிகளை நடத்தி இளைஞர்களை ஈர்த்தார். அதன் வழியாகவே நம்பிக்கையை உருவாக்கி வென்றிருக்கிறார்.

சிக்மகளூரில் தனகென குருவைக் கொண்டிருப்பவரை அம்பேத்கரியர்கள் கூட சற்று அவநம்பிக்கையாக பார்க்கிறார்கள். ஆனால், மொட்டம்மா எளிமையாக ‘’ஒருவரின் முன்முடிவுகள், கருத்துகளுக்கு ஏற்ப நான் செயல்பட வேண்டும் என அவசியம் இல்லையே? என்று கூறுகிறார். தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மொட்டம்மாவின் மீது இப்படிப்பட்ட ஏராளமான முன்முடிவுகள் வைக்கப்படுகின்றன.

''இளைஞர்களுக்கு கல்வி முக்கியமானது. கல்வி கற்று தங்கள் அடையாளத்தை அவர்களே உருவாக்கிக் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட நகரத்திலேயே அவர்கள் வாழ வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. கிராமத்தில் அரசு வேலை கிடைத்தால் போதும் என பல்லாண்டுகள் வீட்டிலேயே உட்கார்ந்திருக்கின்றனர். நான் எனது வாழ்க்கையை பல்வேறு நகரங்களுக்கு சென்று நானே உருவாக்கிக்கொண்டேன். பொருளாதார சுதந்திரத்தை உருவாக்கிக் கொண்ட பிறகே அரசியலுக்கு வந்தேன்'' என்கிறார். 

உண்மையில் தலித் மக்களுக்கு அவர்களின் தலைவர் எப்படி பறப்பது என சொல்லிக் கற்றுக்கொடுப்பது சற்று ஆச்சரியமாகவே இருக்கும்.

 

 

பிரியா ரமணி

இந்து ஆங்கிலம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்