இடுகைகள்

ஹிஸ்டிரியானிக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உங்கள் கதையிலும் நான்தான் ஹீரோ - ஹிஸ்டிரியானிக், நார்ச்சிஸ்ட் பிறழ்வு மனிதர்கள்

படம்
  கல்யாண வீடு என்றால் கல்யாண மாப்பிள்ளை, சாவு வீடு என்றால் பிணம். உங்களுக்கு என்ன புரிகிறது? கல்யாண வீட்டில் பெரும்பாலும் விருந்தினர்கள் மாப்பிள்ளையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இழவு வீடுகளில் இறந்தவரைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். அடிப்படை கான்செப்ட் என்ன? நிகழ்ச்சியின் நாயகன் மாப்பிள்ளை, இன்னொன்றில் இறந்துபோனவரின் உடல்.  இப்படித்தான் ஹிஸ்டிரியானிக், நார்சிஸ்டிக் பர்சனாலிட்டி டிஸார்டர் பாதிப்பு உள்ள நோயாளிகள் நடந்துகொள்வார்கள். பள்ளி, கல்லூரி, கிளப், விடுதி, உணவகம் என எங்குமே தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் நண்பர்களுக்கு ஒரே வேலை, நாயகனுக்கு லாலலா.. பாடுவதுதான். இல்லையென்றால் அவர்களுடன் எளிதாக நட்பை துண்டித்துக்கொள்வார்கள்.  சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சிகள் எதுவும் மேற்சொன்ன குறைபாடு உள்ளவர்களுக்கு பிடிக்காது. அனைத்திலும் புதிய கதைகளை சொல்லி, சில உணர்ச்சிகரமான தன்மையை ஏற்படுத்தி தன்னை அனைவரும் கவனிக்கவேண்டுமென நினைப்பார்கள். இதனால், பிறரை எளிதாக கவனிக்க வைப்பார்கள். செல்வாக்கானவர்கள் தங்களது நண்பர்கள் என காட்டிக்கொள்வார்கள். அப்படி கவனம் கிடைக்காதபோது தற்க