இடுகைகள்

அசுரகுலம் 2 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசுரகுலம் 2 - குற்றங்களின் முன்கதை - சீரியல் கொலைகாரர்களின் நதிமூலத்தை ஆராயும் நூல்!

படம்
        அசுரகுலம் முதல் பாகத்தில் குற்றவாளிகளைப் பற்றிய கதைகளைக் கூறியது. இரண்டாவது பாகமான குற்றங்களின் முன்கதையில் குற்றங்களை செய்தவர்களின் உளவியல் சிக்கல்கள், கொலை செய்த முறை, அவர்கள் பெற்ற தண்டனை, குற்றங்களைப் பற்றிய மக்களின் மனநிலை, இதனை மக்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது பற்றிய விவரங்கள் கூறப்பட்டிருக்கிறது.  உடலுக்கு வரும் நோய்களைப் போலவே மனதில் ஏற்படும் உளவியல் சிக்கல்களையும் பார்க்க பழகுவது இப்போதுதான் தொடங்கியுள்ளது. இந்த நூல் உளவியல் சார்ந்த அறிகுறிகளை விளக்கி அதனை கவனமாக பார்க்கவேண்டும் வலியுறுத்துகிறது. உளவியல் குறைபாடுகளை சாதாரணமாக பார்க்க கூடாது என்பதை இந்த நூலை வாசிக்கும் வாசகர்கள் உணர்வார்கள் என்று உறுதியாக நம்பலாம். அசுரகுலம் நூலைப் படிக்காதவர்களும் இந்த நூலை வாசிக்கலாம். குற்றங்களைப் பற்றிய ஆவணப்படுத்துதல் மேற்குலகில் அதிகம் உண்டு. அந்த வகையில் தமிழில் இதுபோன்ற நூல்கள் குற்றங்களை குறைப்பதில் உதவும். அறிவியல் முறையில் குற்றங்களை எப்படி காவல்துறையினர் அணுகி சீரியல் கொலைகார ர்களை பிடிக்கிறார்கள் என்பதையும் நூல் பேசுகிறது. அமேசானில் வாசிக்க.... https://www.amazon.in/dp