இடுகைகள்

பிரார்த்தனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கேரளத்தில் பிரார்த்தனை மூலம் மக்களுக்கு உதவுகிற நாடகம் நடத்தும் கிறித்தவ கோவில்!

படம்
          இந்துக்களின் வாழ்வில் அதிசயத்தை நடத்தும் கிருபசனம் கோவில்! சாமியார் விவகாரங்களில் முதலில் காஷ்மீருக்கு போனோம். இப்போது கேரளத்திற்கு செல்வோம். இன்றைக்கு மத அடிப்படைவாதிகள், தம் சித்தாந்த எதிரிகளான கம்யூனிஸ்டுகளை குறிவைத்து இயங்கி வருகிறார்கள். பள்ளிகளில் இறைவணக்கத்திற்கு அனுமதிக்க வேண்டுமென அடிப்படைவாதிகள் கோரிக்கை வைத்து மிரட்டி வருகிறார்கள். மதச்சார்பற்ற, கல்வி அறிவு கொண்ட மாநிலத்தை தரைமட்டமாக்க வலதுசாரி மதவாத சக்திகள் முயன்று வருகின்றன. இந்த நேரத்தில்தான் நாம் கிருபசனம் கிறித்தவ கோவிலைப் பார்க்கப்போகிறோம். இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக ஆன்மிக அருள் தரும் எண்ணெய், உப்பு, ஒரு பண்டல் கிருபசனம் செய்தித்தாள் ஆகியவற்றை வாங்கியே ஆகவேண்டும். ஒரு பண்டல் நாளிதழ் கட்டின் விலை ரூ.100. இந்த நாளிதழ் பதினைந்து மொழிகளில் வெளியாகிறது. அப்படியொன்றும் செய்திகள் ஏதும் இருக்காது. எல்லாம் அதிசய நிவாரண செய்திகள்தான். கடனைத் தீர்த்தார். நோயைத் தீர்த்தார், கல்யாணம் கைகூடியது, மகன் செத்த துக்கம் நீங்கியது, வேலை கிடைத்தது என ஏராளமான அதிசயங்களைப் பற்றி கோவில் நி...

போரில் அடிபட்டு வீழ்ந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டெழும் மாவீரன்!

படம்
  வாரியர் ஃபிரம் ஸ்கை சீனமொழித் திரைப்படம் ஐக்யூயி ஆப்  பனி சூழ்ந்த பகுதி. அங்கு ஒருவர் தூண்டில் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அங்கிருந்து வீரன் ஒருவன் வெளியே வருகிறான். அவனுக்கு தான் யார், தன் பெயர் என ஏதும் நினைவில் இல்லை. அதை அறிய முயல்கிறான். அந்த முயற்சியில் தீய சக்தியை எதிர்கொண்டு வெல்கிறான். இதுதான் படத்தின் கதை.  சொர்க்கத்தில் போரிட்ட வீரன், எதிர்பாராதவிதமாக அடிபட்டு கீழே விழுந்துவிடுகிறான். ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகள் கழித்து விழிக்கிறான். அவனது சக்தி, பூட்டப்பட்டு உள்ளது. பயன்படுத்திய ஆயுதங்கள் காணவில்லை. தான் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறான்.  படத்தின் தொடக்கத்தில் துறவி ஒருவருடன் சண்டை போடுகிறான். அவர், அவனின் நான்கு பிறவிகளை தனது சக்தி மூலம் தெரிந்துகொண்டு விடைபெற்று போய்விடுகிறார். போகும்போது, அவனை பூமிக்கு தள்ளிவிட்டு செல்கிறார். நேரே அவன் குளம் ஒன்றில் விழுகிறான். அங்கு சூ நாட்டு  இளவரசி குளித்துக்கொண்டிருக்கிறாள். பிறகு என்ன, அவனைப் பிடித்து கட்டிவைத்து உதைக்கிறார்கள். ஆனால் சென் சான் எனும் அவனுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில...