இடுகைகள்

பணமோசடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீவிரவாத இயக்கத்தின் நிதியாதாரத்தை முடக்கும் உலக அமைப்பு!

படம்
பினான்சியல் ஆக்சன் டாஸ்க் ஃபோர்ஸ் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது சாதாரண காரியமல்ல. இதற்கு உலக நாடுகள் துணிச்சலான பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதில் முக்கியமானது, தீவிரவாத காரியங்களுக்கு உதவும் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது. அமெரிக்கா, தனது வர்த்தக மைய தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதம் வளர்க்கும் பல்வேறு செயல்பாடுகளை கண்காணிக்க ஆரம்பித்து தடுத்தது.  இதில் முழுமையான வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பதல்ல விஷயம். இந்த முயற்சியில் அமெரிக்கா தெரிந்துகொண்ட விஷயங்கள் அதிர்ச்சி ஏற்படுத்துபவை.  இருபதாண்டுகளாக அமெரிக்க தீவிரவாதத்தை தடுப்பது என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு நிதியளித்து வருகிறது. அதை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. தீவிரவாத அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த அதற்கு கிடைக்கும் நிதியுதவி ஆதாரங்களைக் கண்டுபிடித்து தடுக்கவேண்டும். அப்போதுதான் நாடுகளில் நடைபெறும் பல்வேறு தீவிரவாத செயல்களை தடுக்கமுடியும். ஃபினான்சியல் ஆக்சன் டாஸ்க் ஃபோர்ஸ் என்ற அமைப்புதான் மேலே சொன்ன விஷயங்களை கூறியது. உலகம் முழுக்க தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான முயற்சிகளில் இந்த அம

பத்திரிகையாளர் மீது ஒடுக்குமுறை! - நைஜீரியாவில் நடக்கும் அநீதி

படம்
நைஜீரியாவைச்சேர்ந்த பத்திரிகையாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ஓமோயெலே சோவோரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நைஜீரியத் தேர்தலிலும் போட்டியாளராக இருந்தார். ஆகஸ்ட் 3 ஆம் தேதி நாடு தழுவிய ரிவல்யூசன் நவ் என்ற போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார். உடனே அரசின் மாநில சேவைகள் துனை சோவோரேவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது அவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டும் சிறையில் இருந்து விடுவிக்க அரசுக்கு மனம் வரவில்லை. அரசு இப்போராட்ட அழைப்பை தன்னைக் கவிழ்க்கும் முயற்சியாக பார்க்கிறது. ஆகஸ்ட் எட்டாம் தேதி, சோவோரோவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க 45 நாட்கள் அனுமதி கொடுத்தது. உடனே வெகுண்ட சுதந்திர ஊடகங்கள் அமைப்பு, ஐ.நா அமைப்பிடம் சோவோரோவை விடுவிக்க மனு கொடுத்தது. அவரைக் கைது செய்தது மனித உரிமை மீறல் என்று இந்த அமைப்புகள் புகார் தெரிவித்தன. அரசு ஒருவரைக் கட்டம் கட்டிவிட்டால் சும்மா விடுமா? 45 நாட்கள் கழிந்தபின்னர் அவரை விடுவிக்க வேண்டுமே? உடனே இணைய மோசடி, பண மோசடி வழக்குகளை சோவோரே மீது பதிந்தது. சோவோரே, சகாரா ரிப்போர்டர்ஸ் என்ற இணைய பத்திரிகையை 2006 முதல் நடத்தி வந்தா