இடுகைகள்

சீனத்தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓவியனின் பார்வையில் குற்ற உலகம்!

படம்
             அண்டர் தி ஸ்கின் சீன தொடர் 24 எபிசோடுகள மகத்தான திறமையான ஓவியன். கல்லூரி வயதில் போலீஸ்காரர் கொல்லப்படுவதற்கான ஓவியத்தை வரைந்து கொடுத்து சர்ச்சையில் சிக்குகிறான். நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை என்றாலும் கொலைக்கும்பலுக்கு மறைமுகமாக போர்ட்ரைட் ஓவியம் வரைந்து கொடுத்தது, அவனுக்கு எதிர்பார்த்திராத துயரத்தை அளிக்கிறது. அதுவரையில் அவன் கண்காட்சிக்கென வரைந்த ஓவியங்களைக் கூட தீவைத்து எரித்துவிட்டு, காவல்துறையில் பணிக்கு சேர்கிறான். அங்கு ஸ்கெட்ச் ஆர்டிஸ்டாக வேலை செய்கிறான். தொடக்கத்தில் கொலைக்கும்பலுக்கு ஆதரவாக ஓவியம் வரைந்து கொடுத்தான் என்பதற்காக கேப்டன் டுசெங் அவனை மதிப்பதில்லை. ஆனால் கொலை வழக்குகளை கண்டுபிடிப்பதில் சென் யிக்கு உள்ள புத்திசாலித்தனம், ஈடுபாடு பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. பல்வேறு வழக்குகளோடு, தனது வாழ்க்கையை மாற்றிப்போட்ட கேப்டன் லீ வெய் வழக்கிலுள்ள குற்றவாளிகளை எப்படி பிடித்தான் என்பதுதான் கதை. தொடரின் நாயகன் ஓவியன் என்பதால், வழக்குகள் அனைத்தும் ஓவியம் சார்ந்த அடிப்படையைக் கொண்டுள்ளன. அதாவது கொலையாளி உள் அலங்கார வடிவமைப்பாளர், க...

ஹீரோவும் நான்தான் வில்லனும் நான்தான் - எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த துயரச்சம்பவம்

படம்
  ஆன்சியன்ட் டிடெக்ட்டிவ் சீன தொடர் யூட்யூப் ஒருவர், தான் செய்யும் செயல் காரணமாக இன்னொரு தரப்பிற்கு மாபெரும் வில்லனாக மாறியிருப்பார். ஆனால், அப்படி செய்த செயலை குறிப்பிட்ட பாத்திரம் மறந்திருக்கும். அல்லது அதைப்பற்றி பெரிதாக கவனம்கொண்டிருக்காது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மூலமாக விஷயம் தெரியவரும்போது, தன்னுடைய தவறை உணர்ந்து அதை சரிசெய்துகொள்ள முயலும். ரவி மரியா இயக்கிய மிளகா படத்தின் கதை இதையொட்டியது. ஆன்சியன்ட டிடெக்ட்டிவ் தொடரின் மையமும் கூட இத்தகையதே. முதல் காட்சியில், உணவகம் காட்டப்படுகிறது. அங்கு நால்வர் இருக்கிறார்கள். அதில் ஒருவரின் கைகளை கட்டி கைதி போல வைத்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டே அவரை தங்க புத்தர் சிலை எங்கே என விசாரிக்கிறார்கள். இவர்களது மேசை அருகே வெள்ளுடை அணிந்த இன்னொருவர் அமைதியாக நடப்பதை கவனித்தவாறே நூடுல்ஸ் உண்டுகொண்டிருக்கிறார். இந்த உணவகத்திற்கு ஆறடி உள்ள இன்னொரு வீரர் கத்தியோடு வருகிறார். விசாரணையில் கைகள் கட்டப்பட்டவர், நான் சிலையை திருடவில்லை என்று சாதிக்கிறார். அப்போது வெள்ளுடை அணிந்தவர், கைகளை கட்டப்பட்டவருக்கு ஆதரவாக பேசுகிறார். குற்றவாளி அவர்களில் ஒருவர் ...

மக்களின் நோய் தீர்க்க மருந்து தேடி ஆபத்தான கல்லறையைத் திறக்க செல்லும் பொக்கிஷக் குழுவின் கதை!

படம்
  moutain porter சீன திரைப்படம் ஒன்றரை மணிநேரம் ஐக்யூயி ஆப் இதுவும் கொடூரமான குணம் கொண்ட ராணியின் கல்லறையைத் திறக்கும் கதைதான். ஆனால் அதை திறக்கும் காரணம், பொக்கிஷமல்ல.  கிராமத்து மக்களை பாதிக்கும் நோயைத் தீர்க்க மருந்து தேடி கல்லறைக்கு வருகிறார்கள்.இவர்களைக் கொல்ல பின்தொடர்ந்து கொள்ளைக்கூட்டம் ஒன்று வருகிறது. இறுதியில் அனைவரும் இறந்துவிட நாயகனும் நாயகியும் மட்டும் பிழைக்கிறார்கள். இறுதியாக கூட மருந்து கிடைப்பதில்லை. அதைத்தேடி அலைவதோடு கதை முடிகிறது.  இந்த கதை தொடங்கும்போது, நாயகன் ஒரு கண்ணாடி ஒன்றைத் தேடி வருகிறான். அதை இன்னொரு இளம்பெண் திருடிக்கொண்டு செல்கிறாள். அவள் ஒரு அடிமை. கடவுள் திருவிழாவில் பலியிடுவதற்காக அவளை கட்டிவைத்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணைத்தான் நாயகன் காப்பாற்றுகிறான். ஆனால் அவள் உண்மையில் யார் என்பது இறுதியாக தெரியும்.  இந்த படத்தில் சுவாரசியம், அவரின் அப்பா, அவரின் நண்பர் ஆகியோர் ராணியின் குகைக்கு சென்று மாட்டிக்கொள்கிறார்கள். அதில், நாயகனின் அப்பா காணாமல் போகிறார். நண்பர் எப்படியோ காயங்களோடு தப்பித்துக்கொள்கிறார். இதனால், நாயகனுக்கும் அவனது அப்...

குடும்ப வறுமையைத் தீர்க்க கள்ளநோட்டு அடிக்கும் புற்றுநோய்க்குள்ளான ஏழை அச்சகத் தொழிலாளி!

படம்
  நோ வே ஃபார் ஸ்டூமர் சீன டிராமா 24 எபிசோடுகள் ஐக்யூயி ஆப் இந்த தொடருக்கு எட்டு பாய்ண்டுகள்தான் ரேட்டிங்காக கிடைத்திருந்தது. ஆனால் தொடரின் போஸ்டர் ஈர்ப்பாக தெரிந்தது. மோசமில்லை. மெதுவாக நகரும் சாகச வகை தொடர். பாத்திரங்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. இது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான படம்தான். ஆனால் கதையின் போக்கில் நாடு, தேசியவாதம், நன்மை, தீமை என்பதெல்லாம் அடிபட்டு போய்விடுகிறது. இறுதியாக தொடர் முடியும்போது நமக்கு எஞ்சுவது, கும்பலாக ஆயுதங்களை வைத்து ஒரு கூட்டம் செய்வது நியாயம், அவர்கள் கூறுவது நீதி. ஆயுதம் இல்லாமல், பிறரை கொல்ல மனமில்லாதவன் பலவீனமாக உள்ளான். அவன் தன்னை மிரட்டும் கொள்ளைக்கார, பேராசைக்கார கூட்டத்திற்கு பயப்படுகிறான். வலி பொறுக்கமுடியாமல் எதிர்த்து அடிக்கும்போது அவனை அதிகார வர்க்கம் கண்டிக்கிறது. ஆனால் முன்னர் அநீதியாக அவன் தண்டிக்கப்படும்போது அமைதியாக இருக்கிறது. ஏன்? அந்த கேள்விதான் தொடரைப் பார்த்து முடிக்கும்போது ஒருவருக்கு தோன்றுகிறது.  எந்த பதிலும் இல்லை.  லிஷான் என்ற நகரம் உள்ளது. அங்கு கள்ளநோட்டு புழக்கத்தில் உள்ளது. அதை யார் அச்சிடுகிறார்கள். புழக்...

மக்களின் ஆசைகளை நிறைவேற்றி வைத்து அவர்களை குற்றப்பங்காளிகளாக்கும் சூப்பர் ஆப்!

படம்
  விஷ்ஷர்  சீன தொடர்  12 எபிசோடுகள் போனில் தானாகவே வந்து அமரும் விஷ்ஷர் ஆப்பில், உங்கள் ஆசைகளைக் கூறினால் அது நிறைவேற்றப்படும். பதிலுக்கு அந்த ஆப் சொல்லும் ஒரு வேலையை நீங்கள் செய்யவேண்டும். அப்படி செய்தால் அடுத்த ஆசையை நிறைவேற்ற கோரிக்கை அனுப்பமுடியும். இப்படி மக்களின் பேராசையைத் தூண்டும் ஆப்பின் பின்னணி, அதிலுள்ள மனிதர்களின் நோக்கம் பற்றி பத்திரிகையாளர் ஆராய்ந்து கண்டுபிடித்து தடுக்கிறார்.  பனிரெண்டு எபிசோடுகளே நீளம் என்று சொல்லுமளவு பாத்திரங்களின் நடிப்பு எரிச்சல் ஊட்டுகிறது. அதிலும் நா டு என்ற பாத்திரத்தில் வரும் பத்திரிகையாளர் தோற்றம், நடிப்பு என அனைத்துமே மிகையாக இருக்கிறது. வயதானவர் போல காட்ட முகத்தில் தாடியை நடவு செய்து இருக்கிறார்கள். அது அவருக்கு ஒட்டவே இல்லை. அவரின் பாத்திரம் கடைசிவரை குழப்பமானதாகவே இருக்கிறது. நேர்மையானவரா, சந்தர்ப்பவாதியா, புத்திசாலியா என ஏதும் புரிவதில்லை.  கற்பனையான ஒரு நகரை காண்பிக்கிறார்கள். அந்த நகரை முப்பது நாட்களில் அழிப்பதுதான் திட்டம். அதற்காக விஷ்ஷர் ஆப் வருகிறது. இந்த ஆப், மக்களின் ஆசையை நிறைவேற்றி வைத்து பதிலுக்கு அவர்களை...

விலங்கு மனிதர்களின் உலகில் நாயகன் தனது வலி நிரம்பிய இறந்த காலத்தை தேடும் பயணம்!

படம்
  பிரியூ ஆப் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்  சீன தொடர்  24 எபிசோடுகள் ஐக்யூயி ஆப்  இத்தொடரில் காட்டப்படும் உலகில் மனிதர்களும் விலங்குகளும் ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள். விலங்குகளாக உள்ளவர்களின் உடலில் மனித மரபணுக்கள் சேர, அவர்களுக்கு மனித உருவம் கிடைக்கிறது. விலங்கு, மனிதர்கள் என இருவருக்குமிடையே உள்ள முரண்பாடு, தகராறுகள் சில இடங்களில் நடக்கிறது. அதைத் தடுத்து இணக்கமான மனித, விலங்கு உறவைப் பேண பாட் என்ற அமைப்பு உள்ளது. அதுதான் சீனதொடரின் தலைப்பு. அமைப்பிற்குள், காவலராக எதிர்பாராத திருப்பமாக அப்பாவி கால்நடைமருத்துவர் ஒருவர் வந்து சேருகிறார். அவரைத் தவிர பிறர் அனைவருமே விலங்குகள். நாயகன் ஹாவோ யுன் மட்டுமே மனித இனம். பிறர் அனைவருமே விலங்குகளாக இருந்து மனிதர்களாக மாறியவர்கள்.  நாயகன் ஹாவோ யுன், அவனுக்கு உயரதிகாரியாக வூ ஆய்ஆய் இருக்கிறார். இவர்தான் நாயகி. ஈல் மீன் இனம். இருக்கும் பாட் அதிகாரிகளிலேயே பேசுவதற்கு முன்னாடியே கைநீட்டிவிடும் கோபக்காரி வூ. இவளுக்கு கீழே ஹாவோ யுன் வேலை பார்க்கிறான். பாட் அமைப்பினர், அவனது நினைவுகளை அழிக்க முயல்கிறார்கள். ஆனால் அவனது நினைவு மட்டும் அழிய...

தாவோவை தெரிந்துகொள்ள செல்லும் இளைஞனின் தியாகப்பயணம்! - தாவோயிசம் கிராண்ட்மாஸ்டர்

படம்
  தாவோயிசம் கிராண்ட்மாஸ்டர் டிவி தொடர் மாண்டரின் - சீனா எம்எக்ஸ்பிளேயர் சாங் லிங், அவனது அப்பா கைவிட்டு போன பிறகு விட்டேற்றியாக ஊர் ஊராக அலைகிறான். இயற்கையின் போக்கில் வாழ்க்கை வாழ வேண்டுமென நினைக்கிறான். அப்படி ஒரு ஊருக்கு போகும்போதுதான் அந்த ஊர் பெரும் சாபத்தில் இருப்பதைப் பார்க்கிறான். அங்கிருப்பவர்கள் யாராவது தூங்கினால் பிறகு விழிக்கவே மாட்டார்கள். வாழ்நாள் முழுக்க கனவு கண்டுகொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்களால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாது.  இந்த சாபத்தை அறியும் சாங் லிங், இதன் காரணத்தை தேடுகிறான். அதற்கு காரணம் காதல்தான். பூமர அரக்கன், அந்த ஊரிலுள்ள தலைவரின் கண் தெரியாத மகளை மனப்பூர்வமாக காதலிக்கிறான். ஆனால் தலைவரோ, அவன் அரக்க இனத்தை ச் சேர்ந்தவன் என்பதால் மணம் என்ற வார்த்தை எனது மனதிலேயே இல்லை என சொல்லி அரக்கனை கொல்ல வன்முறையில் இறங்குகிறார். இதனால் விரக்தியான அரக்கன், இந்த ஊரில் உள்ள மக்களுக்கு எப்போது தூக்கம் வருகிறதோ அதிலிருந்து அவர்கள் எழ மாட்டார்கள் என சாபம் விட்டு விடுகிறன்.  தலைவர், அரக்கனை எதிர்கொள்ள ஐம்பெரும் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களின் உதவியைக்...

பெற்றோரைக் கொன்ற கொலைகாரரை பின்தொடரும் தடயவியல் வல்லுநர்! டாக்டர் ஷின் சீனத் தொடர்

படம்
                டாக்டர் ஷின் சீன தொடர் தடயவியல் வல்லுநர்களை கதாநாயகர்களாக்கும் படைப்பு . இதற்காகவே தடயவியல் வல்லுநரை விட புத்தியில் குறைந்த கேப்டனாக பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் . தடயவியல் தொடர்பான இரண்டாவது சீனதொடரை இங்கு எழுதுகிறோம் . இரண்டிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன . குடும்பம் சார்ந்த மர்மமான பிரச்னைகள் தடயவியல் வல்லுநருக்கு இருக்கிறது . அதாவது தடயவியல் பிரிவின் தலைவருக்கு… அந்த பிரச்னைகளோடு பிற வழக்குகளையும் இணைத்து அவர் தடயங்களை சேகரிக்கிறார் . குற்றவாளிகளை பிடிக்க கேப்டனுக்கு உதவுகிறார் . இதோடு தலைவரின் கீழ் உதவியாளராக இருக்கும் பெண்ணை காலம் கடந்தேனும் நம்பிக்கை இழக்காமல் காதலிக்கிறார் . இவை மாறாது நடக்கின்றன . டாக்டர் ஷின் தொடரில் புதுமை என்னவென்றால் , வன்முறையைக் குறைத்து காதலையும் இருக்கிறதா இல்லையா என பார்வையாளர்களை தேட வைத்திருக்கிறார்கள் . ஷின்னை நாயகனாக்குவது சரிதான் . ஆனால் அதற்கான போலீஸ் குழுவை வழிநடத்தும் கேப்டனை காஸனோவா அளவுக்கு காட்டி , புத்தியில்லாதவராக மாற்றிருக்க வேண்டும...

நூற்றாண்டுகளாக காதலியைக் கரம் பிடிக்க காத்திருக்கும் காதலன்! மூன்ஷைன் அண்ட் வேலன்டைன்

படம்
            மூன்ஷைன் அண்ட் வேலன்டைன் சீன டிவி தொடர் யூட்யூப் பூமியில் வாழும் நரிக்குலம் வடக்கு , தெற்காக பிரிந்து தனியாக வாழ்கிறது . இதில் தெற்கில் வாழ்பவர்கள் வடக்கில் இருப்பவர்களை விட சிறப்பாக மனிதர்களுடன் இணக்கமாக வாழ்கிறார்கள் . வடக்கில் வாழ்பவர்கள் மனிதர்களுடன் அதிக இணக்கமின்றி தனியாக இருக்கிறார்கள் . ஒட்டுமொத்த குலத்திற்கும் தலைவராக சதிகள் நடக்கின்றன . இதில் ஜிங்டிங் என்ற பார்வையில்லாத தெற்கு குல தலைவரின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதுதான் கதை . கதையை மேலே சொன்னபடியும் சொல்லலாம் . பல நூறாண்டுகளாக தொடரும் காதல் உறவை எப்படி நவீனத்திலும் காப்பாற்றி மண உறவில் முடிக்கிறார்கள் இரண்டு காதலர்கள் என்றும் கூறலாம் . தெற்கு நரிக்குலத் தலைவராக இருப்பவர் ஹெலன் ஷி . இவரின் அதிகாரப்பூர்வ பெயர் , ஜிங்டிங் . இவருக்கும் இவரது தந்தைக்கும் திருமண விஷயத்தில் நடக்கும் பிரச்னையால் குலமே இரண்டாகிறது . ஹெலன் அப்பாவை அதிகம் விமர்சிக்காமல் அமைதியாக தனது வா்ழ்க்கையை நடத்துகிறார் . இவர் நரிக்குலத்திற்கும் மனிதர்களுக்கும் இடையிலான...