குப்பை உணவுகளுக்கு ரெட் சிக்னல் உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகம் கொண்ட பொருட்களை சிவப்பு நிற லேபிளில் அடையாளப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம்(FSSAI), கடைகளில் விற்கும் உணவுப்பொருட்களுக்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது. உணவு குறித்த கருத்தரங்கில் புதிய உணவுப்பொருட்களுக்கான விதிகளை எஃப்எஸ்எஸ்ஏஐ ஆலோசகர் அனில் அறிவித்தார். விதிகள் புதிது இதன்படி, உப்பு, சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்கள் சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படும். இவ்விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவிருக்கின்றன. தற்போது சந்தையில், விற்கப்படும் உணவுப்பொருட்களில் கலோரி அட்டவணைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இனி கூடுதலாக அவற்றில் இடம்பெற்றுள்ள பகுதிப்பொருட்களைப் பொறுத்து அவற்றின் நிறமும் மாறுபடும். உடல்பருமன், வேதிப்பொருட்கள் ஆகியவை கொண்ட உணவுப்பொருட்களால் மக்களின் உடல்நலன் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த கலோரிஅட்டவணை கூட உணவுப்பொருள், மக்கள் உடல்நலனுக்கு ஏற்றதா என்று அடையாளம் காண உதவவில்லை. புதிய முறை, மோசமான உணவுப்பொருட்க...