இடுகைகள்

கேள்வி அறிவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிறைய சவால்கள் உண்டு!

படம்
      மேக்ஸ் டெக்மார்க், அறிவியலாளர்       மேக்ஸ் டெக்மார்க் -Max Tegmark   விண்வெளி பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தவர் நீங்கள் . திடீரென எதற்கு செயற்கை நுண்ணறிவு துறையில் ஆய்வு செய்யத் தொடங்கினீர்கள் ? எனக்கு பெரிய கேள்விகளைக் கேட்பதில் விருப்பம் அதிகம் . கற்பனைக்கு எட்டாத பெரிய கேள்விகள் , பெரிய , சரியான கேள்வி என்று கூட வைத்துக்கொள்ளலாம் . விண்வெளி உருவாகியது , அதூபற்றி தத்துவங்கள் , அனைத்து விஷயங்களும் எப்படி தொடங்கியிருக்கும் ?, அடுத்து என்ன நடக்கப்போகிறது , இந்த விவகாரங்களுக்கு இடையில் நமது பங்கு என்ன ? என்று இப்படி கேள்விகள் சென்றுகொண்டே இருக்கும் . நான் வானியலில் நிறைய விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கிறோம் . ஆனால் அதில் புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பது கடினமானதாக இருக்கிறது . மிகவும் அரியதும் கூடத்தான் . எனவே , நான் விடை காண முடியாத சிக்கல்களைக் கொண்ட துறையை தேடினேன் . அப்போதுதான் நரம்பியல்துறை சார்ந்த தகவல்கள் , அதில் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றி தெரிய வந்தது . இன்று நாம் நுண்ணோக்கிகள் வழியாக நம் முன்னோர்கள் பார்க்க முடியாத அற